Thursday, February 09, 2012

வெள்ளிக்கிழமை



கண்களைச்சொறிந்துகொண்டு
இறங்கினேன்
களைப்பாய் இருந்தது.
வெள்ளவத்தைச்சந்தி என்றும் போல்
விறுவிறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.
கையைஇறுக்கிய முழுக்கைச்சட்டையை
பிடுங்கி எறியவேண்டும் போல்
உடம்பெல்லாம்
வியர்வைப்பிசுபிசுப்பு

டிங் டிங்..
டிங் டிங்..
யாருமில்லையோ?
மாற்றுத்திறப்பைக் கண் தேடியது.
பூச்சாடியின் பின்னா.. மீட்டர்பொக்சுக்குள்ளா?

காலறுறைகள்
உள்வெளிமாறி
புகுந்துகொண்டன காலணிக்குள்.
நேர்த்தியாக இருந்தன
சூ றக்குக்குள் அடுக்கிய
காலணிகள் இரண்டும்.

வெள்ளிக்கிழமை என்ன?
சாம்பிராணிமணம் கேட்டது.
காலணிக்குகைக்குள் இருந்து
சூடாய் சாதுவன ஈரமாய்
வெளிவந்த கால்கள்
குளிர்ந்த மாபிள்தரையை
ஒத்திக்கொண்டன.


முகத்தை நிமிர்த்தி
எதிர்கொண்டேன்
குழாயில் இருந்துகொட்டும்
பூநீர்த்துவாலையை.
காதோரம் சூடாய்ப்பாய்ந்து
குளிராய் இறங்கியது கீழே.
கண்களைத்திறந்து நீர்வாங்கி
களைப்புத்தொலைத்தேன்.
சவர்ஜெல்லின் பூச்சில்
அழுக்கெறிந்து மீண்டது உடல்


மின்விசிறியின் கீழ்
வெள்ளைத்துவாயின் ஒத்தடத்தில்
சிலிர்த்துப்போய்
ஆப்டர்சேவின் கொஞ்சத்தை
இரண்டு கையிடுக்கிலும் தெளித்துக்கொண்டேன்.

உள்ளாடையில்லாமல்
நீலடெனிம்.
அயன்பண்ணாமல் மொடமொடவென
ஏன் துவைத்தாய் என்று
அடம்பண்ணியது.
கையில்;லாத வெள்ளை பெனியன்
யார்வரப்போகிறார்கள் இந்தநேரம்.

கட்டிலில் தாவியவுடன்
கைதுழாவும் றிமோட்.
கால்மேல் மடிந்து எறியது
மறுகால்.
கோலங்களா..கலசமா?


வாசலில்கேட்டது
செருப்பின் சரசரப்பு.
கையில் மரக்கறிக்கூடையுடன்
தலைஅறைக்குள் நீண்டது.
கண்ணைக்கூசிச்சிரிப்புடன்
கைகளை இடுப்பில் ஊன்றி
ஒருபார்வை.
பின்னேரம் முழகியிருந்தாள்.
இன்னும் ஈரமான தலையிலிருந்து
ஷம்பூ மணம் இழுத்தது.
வுpரித்திருந்த தலையிலிருந்து
நீர்பரவி
ஈரமாயிருந்த இளநீலச்சருகைச்
சுடிதார்.
சின்னிவிரலின் துணையுடன்
ஸ்டைலான சின்னத்திருநீற்றுப்பூச்சு.


என்ன பாக்கிறாய்?
சிரித்தபடிகேட்டாள்.
பதிலின்றி
சுட்டுவிரல் மட்டும் ஆடி
அருகே அழைத்தது.
என்ன?
சிணுங்கி வந்தது குரல்.
மீண்டும் சுட்டுவிரல்.

ஆ இப்பசொல்லு என்ன?
கைகளைக்கோர்த்து மெதுவாக
அருகேயிருந்தாள்.
தலையைக்கோதியது மறுகை.
கண்களுக்கு குறுக்கால் அசைந்துசெல்லும்
கைகளில் கோர்த்த காப்புக்கள்.
அப்படியே இழுத்து
நெங்சில் சரித்துக்கொண்டேன்.
மார்புகுழைய என்னுள் ஒடுங்கிக்கொண்டாள்.
முதுகுதடவிய கையைக்கோர்த்து
கண்களுக்குள் பார்த்துக்கொண்டாள்.
எனக்காகப் பார்த்துக்கொண்டிருந்தியா?
சக்திரீவி ஓடிக்கொண்டிருந்தது.
புர் புர்ரென் போனில் நீயூஸ் அலேட்கள்.
நின்மதியாகச்சொல்லிக்கொண்டேன்
நாளைக்குச்சனிக்கிழமை.

-(தனிமையில்)சேரன்கிருஷ்

Thursday, December 01, 2011

நந்திதா

குளிர், கூதல்..
தோலைத் தடவும் இதமான வெப்பம்
மங்கல் மெளுகுதிரிகள்

மனதைத்தின்றுவிட்டுப்போன
ஒரு முன்னிரவில்
என்மனைவிக்கு "நந்திதா"
என்று பெயரிட்டேன்.

பெண்உடலின் குழைவோ
நெடுநேரம் கண்களைப் பார்த்திருந்து
திடீரென வெடித்து வெளிப்பட்ட புன்னைகiயின் அழகோ
ஓன்றும் சொல்லவேண்டாம் என்றெனது வாய்மூடும்போது பட்ட
கையின் மென்ஸ்பரிசமோ
பெண்களுக்கே ஒரிய என்னமோ ஒன்று
உச்சமான
அவளுக்குள் வெளிந்தெரிந்த அந்தநேரம்
ஏனோ அந்தப்பெயர்
மனதில் வந்துவிட்டுப்போனது.

நந்திதா என்ற அழகி
கெஞ்ச நேரம் என் கைகளுக்குள்
ஒடுங்கியிருந்தாள்..

எனது மகளுக்கு வைத்துவிடு
இந்தப்பெயரை...
"எனதுபொக்கிஷங்களெல்லாம்
அவளுக்காகவே சேர்க்கிறேன்"

மார்பிலிருந்து
தலைநிமிர்த்தி என்னைப்பார்த்தபடி
சொன்னாள்.

Tuesday, November 29, 2011

Donation to Wikipedia








J ust donated 5$ to wikipedia. I was very much tempted to make it as 10$, then decided to start with something small. I felt guilty each and every time when i use Wikipedia. Some people write articles to contribute some guys edit that some guys do donations. I've selected the final one.Next time i'll surely make this donation double.For this teeny tiny contribution  Wikipedia thanked me by an nice touchy email. 


"It is starting wt "Dear Cheran , You are Amazing". 
Yes i am  Sir , within my rights ,terms and conditions :)


Dear cheran,
You are amazing, thank you so much for donating to the Wikimedia Foundation!
This is how we pay our bills -- it's people like you, giving five dollars, twenty dollars, a hundred dollars. My favourite donation last year was five pounds from a little girl in England, who had persuaded her parents to let her donate her allowance. It's people like you, joining with that girl, who make it possible for Wikipedia to continue providing free, easy access to unbiased information, for everyone around the world. For everyone who helps pay for it, and for those who can't afford to help. Thank you so much.
I know it's easy to ignore our appeals, and I'm glad that you didn't. From me, and from the tens of thousands of volunteers who write Wikipedia: thank you for helping us make the world a better place. We will use your money carefully, and I thank you for your trust in us.
Thanks,

Sue Gardner
Wikimedia Foundation Executive Director


Friday, November 18, 2011

Like pro dancer


Sunday, November 06, 2011

உலகத்திலேயே சுத்தமானவன்




கவனமின்றி காதுகளின் பின்
ஒதுங்கியிருந்த கூந்தல்
காற்றில் அலைபாய
ஏறித்தாளும் திரைச்சீலையின்
அசைவுகளுடன்
மெல்லியதாக சுவாசித்துக்கொண்டிருந்தவளின்
முகம்திருப்பி
அதோ..
'உலகத்திலேயே சுத்தமானவன்"
அவன்காட்டிய திசையில்
இளம்காலைச்சு+ரியன் கிழக்குக்கடற்கரையில்
மேலழும்பிக்கொண்டிருந்தான்.
ஐன்னல் பூக்களுக்குள்
ஊடுருவிய
வெப்பமற்ற கதிர்களில்
அவள் மார்புநுனிகளிலும்
இடுப்புச்சரிவுகளிலும்
இன்னும் காயாத முத்தத்தின் ஈரம்
மின்னிக்கொண்டிருந்தது.

Saturday, August 13, 2011

A Srilankan refugee and a million dollar company

The Lebara Group was founded in 2001 by Rasiah Leon, Baskaran Kandiah and Ratheesan Yoganthan who shared a vision to transform the international calling market, making it easier for migrant communities to stay in touch with friends and family back home.






Sunday, May 22, 2011

காதலை வீட்டில சொன்னா என்ன நடக்கும் ?


Took it from Mayooran's FB wall. Interesting

Pablo Nerudo

Accidentally found about Pablo Nerudo when i was watching "HOW I MET YOUR MOTHER". Highly inspired by his simple and powerful lines and the way they mingle with the human behaviors.

And finally when we come together
i want you to hold me
hold me all night
stroke my hair
tell me i'm a woman
and
show me you are a man
untill there was only love....


Did a googly and found some translations and a google ebook version .check it out http://books.google.com/books?id=5Ps5q4OlpSQC&printsec=frontcover#v=onepage&q&f=false

Wednesday, March 09, 2011

If I have curves, I'm fat !

If I have curves, I'm fat !
If I wear makeup, I'm fake !
If I dress up, I'm a Show off !
If I say what I think, I'm a bitch.
If I say nothing, I have an 'Attitude problem',
If I cry sometimes, I'm a drama queen !
If I have guy friends, I'm Fast.
If I stand up for myself, I'm mouthy.

Its like you can't do anything nowadays without... being labeled. So what ? I give a Damn !!!

-Nicked from Sivahamy Silva's facebook wall.Shiva is a talented and tallest woman :D , and a friend of mine. Still i could remember her words 'language is not a barrier' , happened when i was murmuring and struggling wt my poor singalese knowledge on a event hosted by suntel at waters edge.


Sunday, March 06, 2011

Aadukalam-Othakannala



My little sis and myself started our today sunday with this song and laughing like crazy.Still i'm humming this tune. very soft.

http://www.youtube.com/watch?v=5tV9bea6ero

Friday, March 04, 2011

Italiano

watched this movie nearly around six month before.This song is a thunder.it was sticking on my mind even after three days i watched this.Its all about fashion , music and dance.all about...

Thay want to dress like Italian gents and thy want to undress like Italian gents...



And they want to live in Italian movies...
Another creative song from the same movie





and some beautiful expressions from the girl who sung the first song




Monday, February 28, 2011




youtube link http://www.youtube.com/watch?v=WpmILPAcRQo&feature=fvwrel

heard the remix version of this song here in colombo.This one is old classic version but sweet though... every time of my life du du du... like it or not we allow our heart melt sometime,become soft and sensitive. as i wrote, like it or not...




haleluya!! found the HD remix version


Thursday, January 06, 2011

Middle class


வேர்வை
வேலைக்கரைச்சல்
கொதித்துக்கொண்டிருக்கும்
கொடுப்புப்பல்லு
"சை" என்று
நெற்றிவழித்து உதறும்போது
கைகொஞ்சம் நீண்டுவிட்டது

நாள் முழுதும்
வெளிவரத்துடித்து
மூளை முடக்கெல்லாம்
முட்டித்திரிந்த என்
ஹைகூ கவிதையின்
கடைசிவரியை
அச்சொட்டாய் கொட்டினான் ஆட்டோக்காரன்

Thursday, December 30, 2010

காலம விடிய






மெல்ல இலைவிலக்கி
உளவுபார்த்த -செவ்
ஒளிக்கீற்றில் உடல்காய்ந்த கணகணப்பில்
கன்னங்கரிய கூர்ச் சிறகுதறிப்
புல்லரித்த காக்கையின்
செழுநீர்ச்சிதறலில் சிலிர்த்த நாம்பன்
வால்மடக்கி
"அம்மா" என்றடங்கியது.

-cherankrish

Sunday, December 26, 2010

Lonely Christmas day






Yesterday i came from office at 5o'clock morning :). slept until 2 pm.
quickly went to laugfs superstore with stinky mouth and bought chicken breast and 250 gms of liver (yea !!).. some noodles packs and some drings.

No oil even a little leftover.

cooked the chicken with white whine , soya source and garlic.couldn't get help from praveen since i was hungry like hell.He makes excellent chicken curry with masalas.
Happy Christmas with television.
check out my Bond 007 hairstyle.


Thank you down stair ant and her beautiful smiling daughter for the roles. No one is in home. i ate all one by one.

Delhi visit - Manthan award ceremony 2

I could meet some interesting personals in that ceremony, including three beautiful girls. Murali shanmugavelan is another interesting person who came from uk for this conference. (Read more about murali) He gave a introduction speech about the digital contents and the availability of them. I met another beautiful girl 'Peola' from hydrabad.She is a RJ, i think. She has very beautiful eyes and smile. She said , she

had been asked by the people if she would be a Tamil.She was in Saree and a black 'pottu'. unfortunately she couldn’t speak Tamil.She is a Telungu girl.

I met Mahima kaul who interviewed me on Manthan award cerimony. This girl is full of energy. No one can say she has this much of talents and experience becoz her pretty face hides everything.hit this link and read more about mahima and hit this link to see Mahimaz blog. Mahima, i’ve used your picture without your permission. Hope you will understand.

Rangalal from ICTA and Puritha from Ada dirana and Sachini, nice and unforgettable experience with you guys. I’ve forgotten to mention about another interesting woman i met after we received the awards and certificates.











Mahima kaul in blue

“Jayalakshmi Chittor” , another brave woman. We argued a lot, discussed a lot within that very short period. I’m so pleased to see you mam, even though i don’t agree with some of your views. Hope I’ll see you again next time my visit to Delhi.








Jayalakshmi chittor


Thanks India and indians, great hospitality.

Saturday, December 18, 2010

Delhi visit - Manthan award ceremony



I think i've failed or forgotten to write about my old visits and conferences which I've attended previously.A good experience i had , a taxi driver ripped me off at the airport :).
I said i've been informed, that from airport to "Malvia nagar" is only about 16 km.But this guy took me until the INDIA GATE and took a big circle and came to my hotel and charged 600 bugs.In this kind of situations i would just give the money and walk away instead of fighting.I wanted to keep the peace mood to do a lot of things at latenight.I haven't prepared my presentation yet.

I don't know how i got this artistic manner.i never had.It has been developed a lot in past five years.I remember sometime back , i felt myself like an artist. I was going behind a girl when i was eighteen nineteen.That was a private tuition class taken by Augustin Sir in his reading room of his hose in jaffna.I used to sit behind this girl.She had short curly hair on that time.I would hold her hair gently by both of my hands like holding water using two hands.I did this secretly and without getting her attention :).My friends who were sitting next to me would giggle and say 'ok he has started'.

When i saw Pollock's  drawings i really liked it and made it as my computer wallpaper. That was so Art.He used all of his body to draw those things.I just didn't want to sleep on my hotel room bed.That was incredibly beautiful.

When you sleep on a beautiful bed specially on a cold season anyone will get a different feeling.I was alone ,just had a hot water bath and a thick soft woolen bed sheet was covering me.I wish i had a girl next to me under my arms.A girl who is loving me who can do anything for me.There is a connection between this feeling and love.I cross my hard and say .. i didn't feel horny.

Servant boys were so silent polite and well mannered and they don't speak English.Even they couldn't understand.I was cracking my head to ask about wi-fi coz i needed internet.


This committee is a well organized one.They sent a vehicle sharp at 8.30 to pick me up,. Delhi was not woke up.There was a blurred cold air all over the place.

"No dress code for developers".As usual i was in shirt and denim.This is a conference people participate from all south Asia.So big. All guys were in full suite.

To be continued..





first day starts.1st hall
Function starts
another dude like me.. a university drop out,lot of creative thinking.

Delhi chicks..one of these wearing a ring on her belly button.so damn so damn sexy ...
we can do some good stuff together.
wallet full of business cards.I need to order it tonight.





Sunday, September 05, 2010

பிராமணன்


பிராமணன்



யாழ்ப்பாணம் அப்ப இரண்டாயிரத்து மூன்றாம்' ஆண்டு.யாழ்பாணப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தைக் கடந்துவரும் பழைய ஒழுங்கையின் தொடக்கத்தில் இருந்த குறைச்சுவரில் குந்தியிருந்தோம்.ஆறுமணி சாதுவான கூதல் காத்து வீசிக்கொண்டிருந்தது.இருளத்தொடங்குவதற்கான ஆயத்தங்களை இயற்கை செய்யத்தொடங்கியிருந்தது.அப்பொழுதெல்லாம் பிளேன்ரீயும் கோளட்லீபும்தான் எங்களுடைய சிற்றுண்டிகள்.”கோள்லீபை அங்க வாங்குங்கோ பத்துறதுக்கு இங்க வாங்கோ” என்று எங்களை கடைக்காரர்கள் வரவேற்கும் அளவிற்கெல்லாம் நாங்கள் கோள்ட்லீபிற்கும் பிளேன்ரீக்கும் விசிறிகள் ஆகியிருந்தோம்.அப்போழுதும் குடித்திருந்த பிளேன்ரீயின் இனிப்பின்கொஞ்சம் அடிநாக்கில் புளிப்புச்சுவையுடன் ஒட்டிக்கொண்டிருந்தது.அவன் அப்பொழுது எங்களை கடந்து போனான்.அவனை நான் அங்கு கண்டிருக்கிறேன்.அவன் ஒரு ஐயர் பொடியன்.சிலவேளை அவன் எங்களை கடந்து போகும்பொழுது எங்களுடன் நிற்பவன் வேண்டுமென்றே அவனுக்கு எதாவது சொல்லுவான்.அவன் திரும்பியதே கிடையாது.
இடுப்பில் ஒரு வேஷ்டி தோளைச்சுற்றி ஒரு வேஷ்டி, நிதானமாக நடந்து எங்களை கடந்து போவான்.
டேய் அய்யா..
ஒரு நாள் நான் அவனைக்கூப்பிட்டேன். எங்களைச்சுற்றி பெரிது பெரிதாக எங்களுடைய மோட்டார்வண்டிகள் நின்றிருந்தன.
அவன் எனக்கு முன்னால் வந்து நின்றான்.
என்ன..
நானும் பாக்கிறன் நீ ஒரு எடுப்பாத்தான் திரியிறாய்
அண்ண நான் உங்களோட ஒண்டுக்கும் வரல்ல.சும்மா தனகாதேங்கோ…
தனகினா என்னசெய்வாய் பூனாமோனே..
அண்ண நான் சும்மா போய்கொண்டிருந்தனான்
ஒவ்வொருநாளும் தானே போறோய்.என்ன செய்யப்போறனி இந்தநேரம்?
அது உங்களுக்கு சொன்னா விளங்காது..
.கேட்டதுக்கு பதில்சொல்றா..
அவன் நடந்து என்னைக்கடந்து வந்தான்.குண்டான எங்கள் சிவப்புநிற மோட்டார்சைக்கிள் ஒன்று சைட்ஸ்டாண்டில் நின்றிருந்தது.வேஷ்டியை கால்களுக்கிடையில் சுருக்கிக்கொண்டு இரண்டுகைகளையும் சீட்டில் ஊன்றி எக்கி உட்கார்ந்தான்.தோளைச்சுற்றியிருந்த சால்வையை விலக்கினான்.மிக நேர்த்தியான உடம்பு.
வெயிட்லிப்டிங்கில் ஷோல்டர்கட் என்று ஒன்று ஒரு முறை உள்ளது.தோள்மூட்டு வீங்கி உருண்டையாகி முழங்கைக்கும் தோளுக்குமிடையில் இருக்கும் கைப்பகுதி சப்பையாக இருக்கும்.அதே வாகில் இருந்து அவனது உடம்பு.இடுப்புக்குழைந்து நெஞ்சு இரண்டும் வட்ட வடிவமாக நெஞ்சுக்கு குறுக்கால் வெள்ளையாக குறுக்கோடியிருந்தது பூணூல்.யாழ்ப்பாணத்தில் வயதுவந்த ஜயர்மார் குடும்பி கட்டியிருப்பார்கள்.ஐயர் இளைஞர்கள் எல்லோரும் பெரும்பாலும் தலைமுடியை ஒட்ட வெட்டியிருப்பார்கள்.மற்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி அறிவது கஷ்டமாக இருக்கும்.ஆனால் இவன் குடும்பி கட்டியிருந்தான்.வட்டமான முகம். மோட்டார் சைக்களின் சைட்பக்கமாக நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டிருந்தான்.இடதுகை மார்பில் இருந்த பூணூலை ஒழுங்குசெய்தது. இரவின் ஆரம்பமும் பகலின் முடிவும் சேரும் அந்த நேரத்தில் அவன் வாயிலிருந்து ருத்ரம் ஒலிக்த்தொடங்கியது.அவன் எங்களுக்கு கேட்கும் படி மெதுவாகச்சொல்லவில்லை.அடிவயிற்றில் இருந்து ஒலித்த ருத்ரத்தின் ஒலி கம்பீரமாக அந்த இடத்தை நிறைத்தது.எங்கள் ஒவ்வொருவராக உற்றுப்பார்த்துக்கொண்டே அவன் ருத்ரம் சொல்லிக்கொண்டிருந்தான்.
ருத்ரம் ஒவ்வொரு சொல்லாக பிசிறற்ற ஒலிச்செறிப்புடன் கம்பீரமாக அங்கு பொங்கிக்கொண்டிருந்தது.அவனுடைய திறந்த கம்பீரமான உடலும் பூணூலும் உடம்பில் இருந்த வெள்ளை உடையும் இருளும் ஒளியுமான அந்த நேரத்தில் மேலும் பிரகாசிக்கத்தொடங்கியது.ருத்ரத்தின் வசனம் முடியும் பொழுது ‘ம்’ என்று ஒரு அதிர்வுவரும்.சாதாரண நோரங்களில் அதைக்கவனிப்பதில்லை.அவன் ஒவ்வவொரு தடவை ருத்ரத்தின் வரியை முடிக்கம்பொழுதும் அந்த அதிர்வு எனக்கு ஏதோ செய்தது.உடம்பில் ஒரு குளிர் ஓடி கைமுடிகளெல்லாம் சிலிர்த்துக்கொண்டிருந்தன.அவனது கண்கள் ஈரமாக பளபளத்தன.கொஞ்சநேரத்தில் அவை தாமாக மூடிக்கொண்டன.நாங்கள் மரங்கள் மாதிரி அவனைச்சுற்றி நின்றுகொண்டிருந்தோம்.ருத்ரம் பொழிந்துகொண்டிருந்தது. நான் அவனுக்கு மனதில் ‘ஐயன்’ என்று பெயரிட்டேன்.
திரு.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ படித்திருக்கிறேன்.கதை என்னவென்றால் ஒரு மத்தியதரத்தைச்சேர்ந்த ஐயர்குடும்பம்.குடும்பத்தில் தாய் அழகானவள்.உயரமானவள்.அவள்வைத்ததே சட்டமாக இருக்கிறது.எப்படியோ அவளுக்கு இன்னுமொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது.அவளுக்கு தான் செய்வது தவறென்றும் தெரியும் ஆனால் திருத்திக்கொள்ள முடியவில்லை.அம்பி என்ற அவளது கடைசி மகனை வேதம் படிக்கச்செய்வதன் மூலம் தான்செய்த் தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடமுடியும் என்று நினைத்தாள்.இப்டியாக அம்பி வேதம் படிக்கத்தொடங்குகிறான்.பன்னிரெண்டு வருடங்கள் வேதம் படிக்கிறான் அம்பி.
கொழும்புக்கோவில்களில் கணபதிஹோமங்களின்பொழுது லலிதாசகஸ்ரநாமம்சொல்வார்கள். இடைக்கிடை ஐயர் நொக்கியாவை நோண்டுவார்.யார்போகிறார்கள் வருகிறார்கள் என்று அவரதுகண்கள் சுழன்றுகொண்டே இருக்கும்.சகஸ்ரநாமத்தின் அழகு அந்த உச்சரிப்பு இவர்களுக்கு வரவே வரதா என்று நினைக்கத்தோன்றும்.இருவர்சேர்ந்துசொல்லியும் அந்த அதிர்வும் தெளிவும் இருந்தது கிடையாது. இவர்களையெல்லாம் எழும்பு என்று சொல்லிவிட்டு ‘ஐயன்’ போன்ற ஒரு உயரமான உறுதியான பத்து பிராமண இளைஞர்களை வரிசையாக இருத்தி அந்தப்பத்துக்குரல்களின் வழிவரும் மந்திரங்களின் அதிர்வுகளை உணர்தால் எப்படிஇருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அச்சுப்பிசகாத தெளிந்த மந்திர உச்சரிப்புடன் பஞ்சகச்சம் கட்டி பூணூல் தரித்து தோளிலும் மார்பிலும் திருநீற்றுடன் உட்குழிந்த வயிறும் இறுகிய நிமிர்ந் உடலும் உயரமுமான பத்து பிராமண இளைஞர்களை நினைத்துப்பார்த்தேன்.எங்கள் சமூகத்துக்கு மிகவேண்டியதில் இதுவும் என்றென்றே தோன்றிது.
ராஜராஜசோழன் காலத்திலெல்லாம் இந்தியாவில் பிராமணர்களில் ஆதிக்கம் இருந்தது.”ராயர்கள்” என்ற பெயருடன் போருக்கெல்லாம் தலைமைதாங்கியிருக்கிறார்கள் பிராமணர்கள்.சிவனை முன்னிறுத்தி சிவனுக்கு சேவைசெய்கிறோம் என்று தொடங்கிய பிராமண ஆதிக்கம் சிவனுடன் நின்றுவிடவில்லை.அது மக்களை கட்டுப்படுத்தியது , அரசுசெய்தது , படைநடாத்தியது.
இலங்கையில் அவ்வாறில்லை. பிராமண இனம் அதிகாரங்களை கொண்ட இனமாக இல்லை.அது எவ்வாறு கிழைத்தது எவ்வாறு வளர்ந்தது என்பதற்கான ஆதாரம் எனக்குக்கிடைக்கவில்லை.ஆனால் இலங்கையில் உள்ள பிராமணக்குடும்பங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் இந்தியாவுடன் தொடர்புபட்டிருக்கின்றன.
பிராமணன் மதிக்கப்படவேண்டியவன்.ஒரு ஜாதியாக அல்ல.பிராமணன் சாந்தமாக இருக்கக்கடப்பட்டவன்.தாவரங்களை உண்ணக்கடப்பட்டவன்.இரவும் பகலும் மந்திரங்களை மனனம் செய்யவும் தர்க்கிக்கவும் கடப்பட்டவன்.இரவும் பகலும் கோவிலின் வாசனையிலும் மணிகளின் ஒலியிலும் இரவின் இருட்டில் கோவிலின் கறுத்த மெனத்தில் ஒளிந்திருக்கும் தெய்வீகத்திலும் வாழக்கடப்பட்டவன்.சரியான பிராமணனைப்பெற்ற கோவில் முழுமைபெற்றிருக்கும்.சரியான கோவிலைப்பெற்ற மக்கள் ஒழுக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் முழுமைபெற்றிருப்பர்.சரியான மக்களைக்கொண்ட சமூகக்கட்டமைப்பு நாகரீகத்திலும் வாழ்க்கைமுறையிலும் முழுமைபெற்றிருக்கும். மந்திரம் சொல்வதை கம்பீரமாகவும் விருப்பத்துடனும் செய்யும் பிரமணனை நாங்கள் பெறவில்லை. மாறாக தன்னுடைய உடையைப்பற்றிய கேலிக்குப்பயந்தவனும் மந்திரங்கள் சரியாகத்தெரியாதவனும் தனக்கு மந்திரங்கள் சரியாகத்தெரியாததை மற்றவர்கள் கண்டுவிடுவார்கள் என்று எந்நேரமும் சஞ்சலத்தில் சுற்றும் கண்களைக்கொண்ட பிராமணையுமே நாங்கள் பெற்றிருக்கிறோம்.
திரதா யுகத்தின் முடிவில் எல்லாம் ஒரு புள்ளியில் வந்துவிடும் என்று ஐதீகம்.எல்லா ஜாதிகளும் ஒன்றாகிவிடும்.கறுப்பு வெள்ளை மண்ணிறம் சிறிய கண் சப்iயான மூக்கு சுருள் மயிர் என்ற எந்த பிரிவுகளும் கிடையாது.ஒரு குடும்பத்திலேயே இவையெல்லாம் தனித்தனி நபர்களிடம் காணப்படலாம்.அல்லது குடும்பம் என்ற கட்டுகள் உடைந்து மக்கள் எல்லாம் மந்தைகள் ஆகலாம்.அதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரியத்தொடங்கிவிட்டன.
வேதங்கள் பயிலப்படவேண்டும்.அவை பயிற்றுவிக்கப்டவேண்டும்.அதற்கான பாடசாலைகள் தனியாக ஆரம்பிக்கப்படவெண்டும்.ஆதிசங்கரன் அத்வைதத்தை ஆராய்ந்து விளக்கியதுபோல நாற்தவங்கள் நால்வேதங்கள் ஆராயப்படவேண்டும்.உண்மையான ஆர்வமுள்ளவன் வேதங்களினதும் மந்திரங்களினதும் மேன்மையுணர்ந்தவன் வழிப்படுத்தப்படவேண்டும்.காலம் கடந்தது சைவம்.ஜைனத்தையும் பௌத்தத்தையும் தத்துவங்களாக உள்வாங்கிவளர்ந்தது சைவம். வான்முகில் பெய்க , வளங்கள் சுரக்க ,முறையாக மன்னன் ஆட்சி செய்க,குறைவில்லாமல் உயிர்கள் வாழ்க, நான் மறைவேதங்கள் ஓங்குக ,
இவையெல்லாவற்றுடனும் சைவமும் தழைக்க என்று தானும் வளரர்ந்து உலகை வளர்த்த சைவத்தை பின்பற்றுவபர்கள் நாங்கள்.
வேதத்தின் மேன்மைகள் பரப்பப்படவேண்டும்.றிக்வேத சாகைகளின் பொருள்கள் நிகழ்காலத்தின் தன்மைகளுடன் ஒத்துப்போகும் வடிவத்தையும் அதமூலமான வளிகாட்டல்களும் மக்களுக்கு விளங்கவைக்கப்படவேண்டும். யசுரும் சாமமும் அதர்வணினதும் சாரங்கள் கோவில்களூடாகப் பரப்பப்டவேண்டும.இது கட்டாயம் நடக்க வேண்டும்.ஓம் தத் ஸத்.
………………………………………………………………………………………….
யாழ்ப்பாண்தில் வேதப்பாடசாலை அமைப்பதற்கான இந்துக்கலாச்சார அமைச்சையும் அரசாங்கத்தையும் தூண்டுவதற்கான ஆரம்ப நிலையின் தாக்கத்தில் எழுதப்பட்டது.



எம்மை ஒரு நேர்கோட்டிலே கொண்டுசெல்ல உதவுவதுதான் மதம்.அதற்கு மேலான மதம் பற்றிய சிலாகிப்பு எனக்கு இல்லை. ஆனால் மதங்கள் ஆழமானவை என்பதும் பல சமூகக்கட்டமைப்புகள் மதம்சார்தே உருவாகியிருக்கின்றன என்பதும் , அவை தனிமனித , சமூகமான மனித வாழ்;கையில் தனிப்பிரிக்க முடியாமல் பிணைந்துபோயிருக்கின்றன என்பதையும் நான் விளங்கிக்கொண்டிருக்கிறேன்.
மதம் இறைவனை அடையும் வழி என்றோ மேன்மைகளைப் பெற்றுத்தரும் என்பதை விட மதத்தைப்பின்பற்றும் மனிதர்களின் இணைப்பும் அந்த இணைப்பினால் கிடைக்கும் போதையும் தைரியமும் பாதுகாப்புணர்வும் மதத்திற்கான இருப்பை மேலும் ஊக்குவிக்கிறது. மதத்திற்கு கிடைக்கும் அவமானம் உடனடியாக அதனைப்பின்பற்றுபவர்களை பாதிக்கிறது. அவர்களை பிணைத்திருந்த பாதுகாப்பு பிம்பம் அசைத்துப்பார்க்ப்படுகிறது.
அந்த அவமானத்தில் இருந்து விடுபடும் வழிiயை உடனடியாக அறிந்துகொள்ளவும் ,எந்த உச்ச அளவிற்குபோனால் அந்த அவமானம் துடைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ள முடியாத கையாலாகதத்தனம் கோபத்தையும் வன்முறைiயும் குறுகியகாலத்தீர்வாக காண்பிக்கிறது.



-சேரன்கிருஷ்

--


Sunday, January 03, 2010

தம்பி


பேடட் டெனிம்தானே

துவைப்பதே இல்லை ஒன்றிரண்டுவாரம்

இழுத்துவிட்ட தலையை

ஆங்கங்கே கலைத்துவிட்டுப்

சரியாக அரும்பாத தாடியில்

பிரஞ்சுவைக்கும் ஆசையோட

மாயப்பிரம்மாபோல்

விரல்சுத்தும் கொப்பியுடன்

மியூசிக்கென்றும் மொசாட்டென்றும் பேஸ்கிற்றார் என்றும்

கஸ்டப்பட்டுக்கேக்கும் ஹிப்ஹொப்பென்றும்

நோமலாகத்தான் இருந்தான்.

இன்றும் இருந்து அழித்தேன் ஹிஸ்ட்டிரியில்

போர்ன் யுஅர்எல் கள்.

நான் பரிசாகக்கொடுத்த

பிரஞ்சுமொழிபெயர்ப்புகள்

தேத்தண்ணிக்கோப்பையின் வட்டத்தளும்புடன்

சரியாக அடுக்காமல் அறைமுழுதும் சிதறி..

மெத்தையில்

கவிண்டு கிடந்த டெனிஸ்ஷ_வும் கிரிக்கட்பெட்டுமாக

அவன் உலகம்

சரியாகத்தான் இருந்தது.

மறக்காமல் அலுமாரிக்குக்கீழ் தள்ளிவைத்தேன்

சிகரட்டுக்கட்டைகளை.

ஆவன்குடித்தால் என்ன

அம்மா பாவம்.

-சேரன்கிருஷ்

Monday, October 19, 2009

சேர்ப்பவன்



இளநீலம் பச்சை

இருள்கறுப்பு

கடல்நுரையின் வெண்மை


வண்ணங்கள் என்னை இழுக்கின்றன.

அவன் முணுமுணுத்தான்.


இவ்வண்ணக்கலப்புடன்

இணைந்து அதிரும் மென் டிஜிட்டல்

இசையில்

உலகின் உச்சசோகத்தை

உருவாக்க முடியும் என்று சொன்னான்


அடிவானத்தில் சேருவதாய்த்தெரியும்

தண்டவாளக்கோடுகளைநோக்கி

நம்பிக்கையுடன் நடக்கும்

குழந்தையின் ஏமாற்றத்தையும்

ஏ ஆர் ரகுமானின் காதல் தோல்வியையும்

தூரத்தில் தனிமையில் இசைக்கும்

சாகிர்உசைனின் ஒற்றைத் தபேலாவையும்

சேர்த்துக்கொள்

யோசனை சொன்னேன்.

நன்றியுடன் ஏற்றுக்கொண்டான்.

கைக்காய்ப்புக்களைத்தடவிப்பார்க்கும்

முதிர்ந்த உழைப்பாளியின்

இயலாமை..

முதிர்கன்னியின் பெருமூச்சுடன் கலந்த

இளவயதுக் காதல் நினைவுகள்

மகனின் சின்னவயதுக்குறும்புகளை

அவனுக்கே சொல்லும்

ஞாபகம்தொலைத்த முதிய தாய்..

விடியும் நேரம் மங்கத்தொடங்கும்

குருட்டுத்தெருவிளக்கு..


இன்னும் வேண்டும் சோகம் என்றான்.


அப்பிடியானால் சரி

ஊரடங்கிய யாழ்ப்பாணத்தின் பின்னிரவுகளில்

வைமன்வீதியால் ஊர்ந்துபோகும் -ஒற்றை

மோட்டார்வண்டியின் சத்தத்தையும்

சேர்த்துக்கொள்

நான் விலகிநடந்தேன்.



-சேரன்கிருஷ்

Loops solutions - Social media marketing in Sri lanka