Tuesday, May 19, 2009

நீசெய்த எல்லாத்தீமையும் மறந்து கண்ணீர் துளிர்கிறது மலையாய் இருந்த நீ வீழ்ந்திருப்பதைப்பார்த்து

இன்றய்தமிழர்களின் நிலையை அச்சொட்டாகச்சொல்கிறது இரயாகரனின் இந்த அலசல்.


அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.

இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தின் மேலான இனவெறுப்பையும், அலட்சியத்தையும் அருவருக்கத்தக்க முறையில் பேரினவாதம் விதைக்கின்றது.

தமிழினமோ செய்வதறியாது கூனிக் குறுகி நிற்கின்றது. பயப்பீதியில் உறைந்து, நிலை தடுமாறுகின்றது. தனிமனிதரிடையே பழிவாங்கும் உணர்வு வன்மமாகி, கொப்பளிக்கின்றது.

மறுபக்கத்தில் தமிழினம் துயரமடைந்து நிற்கின்றது. துன்பம் தாங்காது அழுகின்றது. இந்த மரணங்கள் எதுவும் நடக்கவில்லை என்று நம்ப முனைகின்றது. மண்ணிலிருந்து புலம்பெயர் தமிழ் சமூகம் வரை, இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குள் தவிக்கின்றது. இது ஒரு இனத்தின் ஓலமாக எழுகின்றது.

தனிப்பட்ட ரீதியில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எனெனின் அது இனம் மீதான இனவழிப்பின் ஊடாகவே அரங்கேறியுள்ளது. தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் உணர்வு கொண்டவர்கள்; தான், இந்த மரணத்தில் மகிழ்ச்சி கொள்கின்றனர். அத்துடன் அரசியல் ரீதியாக அரசுடன் நிற்கின்றவர்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் குதூகலிக்கின்றனர்.

ஆனால் தமிழ் சமூகம் இந்த மரணத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலை தான் எமது நிலையும் கூட. ஏன்?

தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையும், அதைத் தொடர்ந்து வந்த போராட்டத்தில் புலிகள் என்ற இயக்கம் உருவானது. இந்த இயக்கம் வலதுசாரிய அரசியல் அடிப்படையில், தனிமனித சர்வாதிகார அமைப்பை நிறுவியதுடன், அதை முழு சமூகம் மீதும் திணித்தது. அதற்காக அது பாசிச மாபியா என்ற அரசியல் வழியை தேர்ந்தெடுத்தது. இதை அது தமிழ் மக்கள் மேல் திணிக்க, தமிழ்மக்கள் மேலான பேரினவாத இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தான் உறுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. இதற்காகத்தான், பாசிச மாபியா என்ற அரசியலை செய்வதாக கூறிக்கொண்டது.

இந்த அடிப்படையில் தான், தமிழ் சமூகத்தை புலியின் பின் நிற்கவைத்தது. இயக்க அழிப்பின் பின், இதற்கு மாற்றாக மக்களை அணிதிரட்டக் கூடிய எந்த மாற்று சக்தியும், மக்களை அரசியலை முன்வைத்து மக்களுடன் நிற்கவில்லை. மாறாக அவை இலங்கை இந்தியக் கூலிக் குழுக்களாக மாறி, தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கியது.

தமிழ் மக்களோ தம் மீதான புலிகளின் ஒடுக்குமுறையை விடவும், அரசுடன் சேர்ந்து நின்று ஒடுக்கியவர்களை வெறுத்தனர். எதிரியுடன் நின்றவர்களை, ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்படி எதிரி பற்றி மக்கள் மதிப்பீடும், புலிகள் மேலான நம்பிக்கையீனங்கள் புலிகளை தனிமைப்படுத்திவிடவில்லை.

இதற்கு வெளியில் மாற்று என்று கூறிக்கொண்டவர்கள், எந்த மக்கள் அரசியலையும் முன் வைக்கவில்லை. மாறாக அரசியலற்ற இலக்கியம், மாற்று அரசியல் இன்மை என்று, தனிநபர்களின் சீரழிவுடன் கூடிய கொசிப்பு கோஸ்டியாக மாரடித்தது. உதிரியான தனிநபர்களின் எல்லைக்குள், மக்கள் அரசியல் எஞ்சிக் கிடந்தது.

இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் புலிக்கூடாகவே தேசியத்தைப் பார்த்தனர். பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைப் பார்த்தனர். தமிழ் மக்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைக் கண்டனர். இதற்குள்தான் தமிழ் மக்கள் மேலான புலிகளின் ஒடுக்குமுறையும் காணப்பட்டது.

ஒருபுறம் போராடும் புலி, மறுபக்கம் ஒடுக்கும் புலி. இதற்கு ஊடாகவே மக்கள் மத்தியில் புலி பற்றிய நம்பிக்கைகள், பிரமைகள், விரக்திகள், வெறுப்புகள், கோபங்கள் என்று எல்லா மனித உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்பட்டது.

புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தாங்களே என்று சொன்னார்கள். இதைவிட வேறு எதுவுமில்லாததால், தமிழ் மக்கள் இவர்கள் ஊடாகவே கடந்த 25 வருடமாக நன்மை தீமை என்று, அனைத்தையும் பார்த்தார்கள்.

இப்படி தமிழ்மக்கள் மரணித்துப் போன இந்த புலித் தலைவர்களின் கீழ் வாழ்ந்தார்கள். இதனால் அவர்களின் மரணத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இனவழிப்பு நடத்தி, தம் தலைவர்களை கொன்றதை அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை.

தம் இனத்தின் மேலான ஒரு இனவழிப்பு யுத்தத்தில், அவர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் புலிகளுடன் நின்றனர். அவர்கள் அரசுடன் சேர்ந்து நிற்கவில்லை. புலிகள் தமிழ் மக்களுடன் நிற்கா விட்டாலும், அவர்களுக்கு எதிராக செயற்பட்ட போதும், எதிரிக்கு எதிராக புலியுடன் நிற்கவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்த அரசியல் எதார்த்தத்தை நாம் அங்கீகரித்துதான் ஆகவேண்டும். மக்கள் நம்பிய அந்த தேசியத்துக்காக, துரோகம் செய்யாது புலித் தலைவர்கள் போராடி மடிந்துள்ளனர். இந்த மக்கள் அதற்குத்தான் தலைசாய்க்கின்றனர்.

நாம் இந்த எதார்த்தத்தை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் இந்த எதார்த்தத்தின் பின்னால், வால்பிடித்து அங்கீகரித்து செல்ல முடியாதுள்ளது. ஏன்?

புலிகளின் தவறுகள் தான் தோல்வியாகியுள்ளது. புலிகளின் அரசியல் தான், இன்று தமிழ் மக்களை நடுரோட்டில் அரசியல் அனாதையாக்கியுள்ளது. மொத்தத்தில் தங்கள் தவறுகளை அவர்கள் கடுகளவு கூட சுயவிமர்சனம் செய்யவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கூட கோரவில்லை. இந்த நிலையில் நாம் அவர்களின் தவறுகளை அங்கீகரிக்க முடியாது. பொறுப்புள்ள வகையில் அதை சுட்டிக்காட்டி விழிப்புற வைப்பதன் மூலம் தான், மக்களின் எதிரியை வீழ்த்த முடியும். மீண்டும் அதே தவறுகளுடன் தமிழினம் பயணிக்க முடியாது.

இந்த தியாகமும், இந்த அவலமும் தவறான ஒரு அரசியல் வழிகாட்டலின் கீழ் நிகழ்ந்துள்ளது. எதிரி நண்பன் என்ற மக்கள் அரசியல் அடிப்படை இன்றி நிகழ்ந்துள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் எதிராகவே, இது தன்னை நிலைநாட்டிக் கொண்டது. அனைத்துவிதமான மக்கள் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கூட இது மறுதலித்தது. தேசிய பொருளாதாரத்தை சிதைத்தது. பல ஆயிரம் அப்பாவிகளின் உயிர்களை காவு கொண்டது. தேசியத்துக்காக, மக்களின் உரிமைக்காக நின்றவர்களை கொன்று குவித்தது. ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் எதையெல்லாம் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் செய்துதான் அது தற்கொலை செய்து அழிந்தது.

இந்த விடையத்தை இன்று புரிந்துகொள்ள முடியாத எல்லையில் தமிழ் சமூகம், இந்த மரணத்துக்கு தலை சாய்க்கின்றது. நாங்கள் இதற்காக அல்ல. மாறாக எதிரியிடம் சரணடைந்து ஒரு துரோகத்தை செய்ய மறுத்து, தம் இலட்சியத்துக்காக இறுதிவரை போராடி மடிந்ததற்காக, புலியில் இருந்து ஒரு துரோகத்தை புலியின் பெயரால் இனி செய்ய முடியாத வண்ணம் தம் மரணம் மூலம் பதிலளித்த அந்த நேர்மைக்காக, நாங்கள் தலைவணங்குகின்றோம்.

இறந்தவர்கள் எம் எதிரி வர்க்கம் என்ற போதும், பிரதான எதிரிக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நின்ற அந்த தனித்தன்மை என்றும் மதிப்புக்குரியது. எல்லா வர்க்கத்தையும் தன் பின்னால் பலாத்காரமாக திரட்டிவைத்துக்கொண்டே, இந்த அரசியல் தற்கொலையை செய்துள்ளது. புலிகள் போராட்டத்தில் சரி, பிழை என்று கற்றுகொள்ள நிறைய விடையங்கள் உண்டு. புலிகளை எதிர்மறையில் உள்வாங்கி, அதை சமூகத்தின் முன் உடைத்துப் போடுவது அவசியமாகின்றது.

மக்களின் எதிரி, புலியை முன்னிறுத்தி தன்னை தூய்மைப்படுத்த முனைகின்றது. எல்லாம் புலிகளால் என்று சொல்ல முனைகின்றது. எல்லாம் பிரபாகரன் என்று காட்ட முனைகின்றது. எல்லா அரசியல் வேஷதாரிகளும்; இதற்குள் தான் புழுக்கின்றனர். நாம் இதைத் தெளிவாக மறுக்கின்றோம்;. இந்த இடத்தில் புலிகளின் தவறுகளை ஈவிரக்கமின்றி சரியாக இனம் காட்டி, எதிரியே இவை அனைத்துக்குமான அரசியல் காரணம் என்பதை அம்பலப்படுத்திப் போராட வேண்டியுள்ளது. எதிரிகள் பலர் என்பதால், இதற்கான உழைப்பு அதிகமானது. இதைச் செய்ய உங்களை தோழமையுடன் அழைக்கின்றோம்.

பி.இரயாகரன்
18.05.2009


இந்தக்கட்டுரை jkpo;Nrf;fps; இணையத்தளத்திலிருந்து நன்றியுடன் பெற்றுக்கொள்ளப்பட்டது

Tuesday, May 12, 2009

இது ஒரு வெண்பாவாக்கும்- தளைதட்டினால் சொல்லுங்கோ

பேதமையும் கூனும் குமிழ்முலையுஞ் சீரல்ல
வாட்க்கூர்க் கவிவாய்கொள் வஞ்சியர்க்கு
சீலம் குழையும் சிறுதட் குவழைமலர்
கண்ணினெழிலோ அழகல்ல -பொன்
முத்துதிர்த்தே செப்பும் பழமிள காய்ப்
பழிக்கும் இதழ்கூ டழகல்ல
பாவையர்க்கு பார்வியக்கும் மேதமைப் பட்டறிவின்
மேற் படிப்பறிவே மேல்.



Attach your blog with http://www.yaaldevi.com/ and share it with friends by SMS.

Saturday, May 09, 2009

முகில்விலகி.....

மாதா கோவிலின் சிலுவை
சிவப்பாக வழிகிறது.
கூம்பு மரங்களுடே
அணைக்கமறந்த சிகரட்டின்
கங்குகளாய் துடிக்கின்றன பூச்சிகள்
கூதல்காற்றை உறிஞ்சி
இறுகிப்போகின்றன
என் மார்புக்காம்புகள்.
முழுதாகச்சாத்தப்படப் போகின்ற
ஐன்னல் இடுக்கில் விரிகிறது என் உலகம்.

விசிறிவாழை இலை
நேற்றுச்சொன்னது
உன்னைத் தொடுவேனென்று.
மௌனக்குழம்பை பூசியவாறு
இருளைவிலக்கிப்பார்கிறது-அதன்
வாய்புலம்பல் ஓயவில்லை இன்னமும்!
மின்னி மின்னி மறையும் பென்னம் பெரிய
கொக்கக் கோலா..
இருட்டுப்புறாக்கள் அடிக்கடி
அலகுகோதுகின்றன.

மெல்லமறையும் தலைவலிபோல
எங்கேயோ மூலையில்
விடிந்துகொண்டிருந்தது
பொழுது.
தன் வெள்ளை
மேலாடையயை
காற்றுக்கு பறிகொடுத்து
என் ஜன்னலின் வெளியே
காற்றில் நடந்து போனாள் அவள்


எங்கள் மருதமூரான் இங்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.அதை இன்னமும் மென்மையாகச்சொல்லும் முயற்சியாக இருக்கும் இது



Attach your blog with www.yaaldevi.com and share it with friends by SMS.

Friday, May 08, 2009

அய்யோ! அது நான் தொலைத்த வாழக்கை…

இந்தியா இலங்கையில் மத்தியதர வறிய குடும்பங்களில் பெரும்பாலும் இதனை அவதானிக்கலாம்.திருமணத்திற்குப்பிறகு தாயும் தந்தையும் மிஞ்சிப்போனால் ஒரு இரண்டு வருடங்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.வெளியே சுற்றித்திரிவர் விiளாயாட்டாக அடித்துக்கொள்வர் சொந்தங்களின் வீடுகளுக்கு ஜோடியாக போய்வருவர்.பிள்ளைகள் பிறந்ததும் ஆரம்பிக்கிறது சனி. தங்களை எப்படியெல்லாம் ஆகவேண்டும்என்று கனவுகண்டார்களோ அதெல்லாவற்றையும் தங்கள் பிள்ளைகள் மேல் கவிழ்த்துக்கொட்டுவார்கள்.அந்த வார்ப்புருவில் இருந்து மகனோ மகளோ சற்று விலகினாலும் தங்களது கனவுக்கோட்டைகள் தகர்;ந்துவிட்டது போல ஏக்கப்பெருமூச்சு விடுவார்கள்.சிலவேளைகளில் அவை வார்த்தைகளாலும் வெடித்து கேட்பவரை சங்கடத்துக்கும் குடும்பங்களில் நிம்மதிக்குலைவுகளையும் ஏற்படுத்துகின்றன.ஆனால் இந்த அபந்தத்ததை சரியென்றும் பாசமென்றும் வாதிடுவோரும் உள்ளனர்.


யாழ்ப்பாணக்குடும்பங்களில் ஒரு பழக்கமிருக்கிறது.ஒரு சின்னப்பிள்ளையிடம் "நீ என்னவாக வரப்போகிறாய் ? டோக்டராகவா அல்லது இன்ஜினியராகவா? " என்று தான் கேட்பார்கள்.மிகுதித்தெரிவு கிடையாது.பெற்றோரின் தெரிவு இந்த இரண்டு வகைகளுக்குமிடையே முற்றுப்பெற்று நிற்கிறது.அதற்குமேல் மிஞ்சிமிஞ்சிப்போனல் "பைலட்டாகவா" என்று இன்னும் அபந்தமான தெரிவைக்கொடுப்பார்கள்.பிள்ளைகளின் மனதில் இந்த இரண்டும்தான் சிறந்தவை மற்றவை எல்லாம் அவற்றிலும் பார்க்க குறைந்தவை என்ற உணர்வை தங்களை அறியாமலே ஏற்படுத்திவிடுகிறார்கள்.
இந்த உணர்சியுடனே வளரும் குழந்தைகள் சில துறைகளில் அவர்களுக்கு பிரத்தியேகமான திறமைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்கொணர்வதிலோ மெருகேற்றுவதிலோ கவனத்தை செலுத்துவதில்லை.சுவர்களில் சித்திரம் வரைவதிலோ துண்டு;ச்சீட்டில் கவிதை கிறுக்குவதிலோ நின்று விடுகிறார்கள். ஆனால் மனதில் தாங்கள் தெரிந்த பாடத்தைவிட இவற்றில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.கற்பனை வளம் கூடிய மாணவர்களால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது.பாடங்கள் விரிவுரைகள் அங்கால் நடக்க இவர்கள் தங்கள் கனவுலோகத்தில் மூழ்கியிருப்பார்கள்.பரீட்சை முடிவுகள் வந்ததும் “எனக்கு உது சரிவராதெண்டு சொன்னான் தானே? என்று மகனும் “உவனுக்கு ரீயூசனுக்கு காசைக்கொட்டின நேரம் நாலு தென்னம் பி;ள்ளை நட்டிருக்கலாம்.இவனுக்க என்ன குறைவச்சனான்..நாங்கள் சாப்பிடாமலெல்லா இவனை படிப்பிச்சனான்.” என்று தகப்பனும் பாட்டுக்கள் பாடுவர்.

இதெல்லாம் சரி தவறென்று வாதிடுவதற்கு முன்னர் பிள்ளைகளின் விடயங்களில் ஒரு அளவிற்கு மேல் தலையிடுவது எந்த அளவு சரியானது?தனது கனவுகளையோ அல்லது தான் முயன்று தோற்றுப்போனதையோ தனது சந்ததிகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளப்பார்ப்பது அருவருக்கத்தக்கதாயல்லோ இருக்கிறது.என்னுடைய பெரியப்பா ஒருவர் நான் வளரும் மட்டும் அவரிடம் நான் பார்த்தது இரண்டே இரண்டு காற்சட்டைகள் தான்.இப்பொழுதும் எனக்கு ஞாபம் இருக்கிறது அந்த முழங்காலில் வெளிறியதும் கிழிந்ததுமான டெனிம்.( இப்ப அதுதான் நாகரீகமாகப்போகிறதென்று அவருக்கு அப்பவே தெரிந்திருக்கிறது  ) பிள்ளைகளை சயிக்கில் கரியரில் ஏற்றி இந்த யாழ்பாபண முடக்குகளில் உள்ள ரீய+சனக்கெல்லாம் கொண்டு திரிவார்.பையில் சாப்பாடும் சுடுதண்ணிப்போத்தலில் பாலும் கொண்டு வலு கரிசனையாக பிள்ளைகளுக்கு சாப்பாடுகொடுப்பார்.திரும்பவும் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு ரியூசனுக்கு வெளிக்கிடுவார். கணிதத்தில கொஞ்சம் புள்ளி குறைந்தால் அன்றைக்கு மாட்டடிதான்.இரத்த்தைச்சிந்திப்படிப்பிக்கிறன் என்று அடிக்கடி சொல்லுவார்.பெரியவனுக்கு இஞ்சினியராகவும் சிறியவனுக்கு டொக்டராகவும் இரண்டு தட்டுக்களை தன்னுள் வைத்திருந்தார்.உலகத்தில் உள்ள வாத்தியங்களை எல்லாம் பிள்ளைகளுக்கு பழக்கவேண்டுமென்ற அவாவில் திரிந்தார்.பின்னாளில் என்னவாயிற்று என்றால் பிள்ளைகள் அவருக்கு கிட்ட வரவே பயப்பட்டன.அவரில் இருந்து மனத்தளவில் தூரவிலகத்தொடங்கின.அவருக்குள் இருந்த உண்மையான தந்தைப்பாசத்தை இந்த போலியான நடவடிக்கைகளால் பிள்ளைகள் உணரத்தவறிவிட்டன.
கடைசிவரை பிள்ளைகளை அவர் சொந்தக்காலில் நிக்கவோ சுயமாகச்சிந்திக்கவோ விடவேயில்லை.அவருடை இளைய மகனுக்கு ட்றம்ஸ் வாசிப்பதில் அபாரமோகம்.இருப்பது கொழும்பில் பக்கத்துவீடுகள் எல்லாம் நெருக்கமாக இருக்கின்றதே என்று நினைக்காத அளவுக்கு ஒரு ட்றம்ஸ்செட்டை வாங்கி ஓங்கிக்குத்திக்கொண்டிருந்தான்.பெரியப்பா அவனை ஒஸ்ரேலியா அனுப்பினார் பட்டப்படிப்புக்காக.ஆனால் அங்கு அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.ட்றம்ஸ் சத்தத்துடனே அவனது காதுகள் நின்றுவிட்டன.பெரியப்பாவுக்கு இங்கு வட்டியும் பிறஷரும் ஏறியதுதான் மிச்சம்.தங்கள் முழவாழ்கையையும் பி;ள்ளைகளின் முழவாழ்கையையும் நாறடிக்கும் இந்தச்செயலைச்செய்ய அவர் சில காரணங்கள் வைத்திருந்தார்.ஓயாமல் இன்னொருவரின் பிள்ளையுடன் தன் பிள்ளைகளை ஒப்பிடுவார்.தன்பி;ள்ளைகள் டொக்டர் இஞ்சினியர் என்று சொல்லித்திரிவதற்காக என்ன செய்யவும் தயாராக இருந்தார்.அதேபோல் அவர்களும் தங்களது தோல்விகளுக்கெல்லாம் இவரையே கைகாட்டிவிட்டனர்.இத்தனைக்கும் பார்த்தால் அவரும் மனைவியும் சந்தோஷமாக இருந்ததில்லை.எல்லாம் பிள்ளைகளுக்கா என்று ஒரு கோடு கீறி ஏறிநின்றுவிட்டார்.
தனது வாழ்க்கைக்கும் தனது மற்றய சந்தோஷங்களுக்கு அர்தம் ஒன்றைக்கற்பிக்கவும் குற்ற உணர்வுகளில் இருந்து விடுபடவும் அவர் இந்த ‘இரத்தம்சிந்திப் படிப்பிப்பதை’ ஒரு காரணமாகக்கொண்டார்.சாதாரண வாழ்க்கை வாழ்கிறோமே என்ற குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காக ‘பிள்ளைகளை படிப்பித்தல் பயிற்றுவித்தல் ‘ என்ற போர்வையைப்போர்திக்கொண்டார்.அது அவருடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்தது அவருக்கு நிம்மதியை கொடுத்தது.அனால் அவரது பிள்ளைகள் கூடிய புள்ளிகள் எடுக்கும் போது பி;ள்ளைகளைவிட அதிகம் சந்தோஷப்பட்டார்.ஆனால் பிள்ளைகள் அப்படியிருக்கவில்லை.குறைய புள்ளிகள் எடுத்தால் மாட்டடியும் கூடிய புள்ளிகளில் தந்தையின் துள்ளிக்குதிப்பிலும் பிள்ளைகளுக்கு தங்களின் நிலை என்ன என்று புரிபடவில்லை.கூடியபுள்ளிகள் எடுக்கும் போது தந்தையின் மகிழ்ச்சியையும் குறைந்த புள்ளிகள் எடுக்கும் போது அதற்குகாரணமாக தந்தையையும் கைகாட்ட அவை பழகிக்கொண்டன.தானகப்படித்து அதில் குறைந்த புள்ளிகள் எடுக்கும் போது கிடைக்கும் மனவேதனையை பிள்ளைகள் உணர்ந்துகொள்ளவும் அவற்றை அடுத்தமுறை திருத்திக்கொள்வோமென்று பிள்ளைகளாக நினைக்கவுமான சந்தர்ப்பத்தை வழங்க அவர் தவறிவிட்டார்.
இது பிள்ளைகளின் படிப்பில் மட்டுமல்ல வேறுவிடயங்களிலும் நடக்கிறது.தந்தை பிள்ளை உறவில் மட்டுமல்ல அண்ணன் தங்கை அக்கா தங்கை அம்மா மகள் போன்ற ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் குடும்பச்சங்கிலிகளில் இதனை காணலாம்.தங்கையையோ தம்பியோ படிப்பதற்காக திருமணம் செய்யாமல் தாங்கள் படிக்காமல் இருப்பவர்ளை அடிமுட்டாள்கள் என்றுதான் சொல்லவேண்டும்.தான் பாழாவது மட்டுமில்லாமல் தேவையற்றமுறையில் அடுத்தவனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதும்தான் இதன் முடிவாக அமையுமே அல்லாது இதில் மற்றவருக்கு எந்த நன்மையும் இல்லை.

முனிதர்களில் ஒருவரை ஒருவர் அடிமைகொள்வது ஜீன்களில் படிந்திருக்கிறது.போர்கள் மட்டுமல்ல பணம் பதவி அன்பு ஆகியவைகளும் அவற்றில் அடக்கம்.மேல்சொன்னது அன்பால் அடிமைகொள்வது.இந்தப்பூமியில் நீங்கள் அனுபவிப்பதையெல்லாம் தானும் அனுபவிக்க எல்லாவற்றையும் தனது சொந்தப்புலன்களால் உணர்ந்துகொள்ள பிறந்தவர்களை உங்களுக்கேற்ற மாதிரி உங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கான தந்திரமான பிரயோகம்தான் இந்த அன்பினால் அடிமைகொள்தல்.சாதகமான ஒன்றை மற்றவர்களுக்கு அறியத்தரவிரும்பினால் மெல்லிய அறிவுரை போதுமானது.அதையும் மீறினால் அவர்கள் அதன் கெடுதியை அனுபவத்தால் தெரிந்து கொள்ளட்டும்.அது இதிலும் பார்க்க கெடுதியானதிலிருந்து தப்புவதற்கு அவர்களுக்கு உதவும்.இவற்றுக்கு நடுவே நீங்கள் புகுவதனால் வாழ்க்கை முழக்க அவர்களை தற்காக்க வேண்டிய பொறுப்பை நீங்களே தலைமேல் போட்டுக்கொள்கிறீர்கள்.எனது மகனுக்காக மகளுக்காக நான் இதைச்செய்வேன் எனது வாழ்க்கையை அர்பணிப்பேன் என்று மறைகழண்டவனாகப்புலம்பினால் அவர்களின் எல்லாத்துயரங்களுக்கும் இயலாமைகளுக்கும் தலைமைத்துவக்குறைவுக்கும் நீங்களே அத்திவாரம் போடுவீர்கள்.

பாவம் எனது பெரியப்பா கடைசிவரை அவர் அதனைப்புரிந்து கொள்ளவில்லை.போனமுறை நான் விடுமுறையில் போயிருந்தபோது பேருனுக்காக முங்கில் தடிவளைத்து பிரம்பு செய்துகொண்டிருந்தார்.



Attach your blog with www.yaaldevi.com and share it with friends by sms.

Saturday, May 02, 2009

சிங்களவர்கள் எனது நண்பர்கள்

எனது அலுவலகத்தில் எனது சிங்களநண்பன் ஒருவனின் ஸ்கைப் புரொபைலில் 'றிபியூட் அவர் வொறியர்ஸ' என்றிருந்தது.
அவனை நேரில் சந்திக்கும் போது இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.கிளிநொச்சியை கைப்பற்றியதற்காக அவர்ளுக்கு கொடுக்கும் மரியாதை என்று சொன்னான்.

அப்ப கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் செத்த பொதுச்சனத்திற்கும் சேர்த்துத்தானா இதைப்போட்டிருக்கிறாய் என்று கேட்டேன்.அவனது கோபத்தை கிளறவும் ஆரோக்கிய மான விவாதம் ஒன்றைத்தொடங்குவதுமே எனது நோக்கமாக இருந்தது."இந்தக் குரும்பட்டி பிளேன் சுத்தினதுக்கே நீங்கள் எப்படிஎல்லாம் பயந்தநீங்கள்...வன்னியில் இருப்பதுவும் மனிதர்கள்தானே அவர்களுக்கு மிக்கும் சுப்பர்சொனிக்கம் சுத்துவதும் மல்ரிபரல் மழைபொழிவதும் பயத்தை உண்டாக்காதா?அக்வாவும் அண்ணாவும் தனக்கு முன்னால் பிணங்களாக விழுவதும் தந்தை தாய் துண்டுகளாக்கப்படுவதும் எப்படிச்சீரணித்துக்கொள்ள முடியும் என்று கேட்டேன்.

. பயங்கரவாதம் நீங்கள் சொல்லும் புலிகளிடம் மட்டுமில்லை என்பது உனக்குப்புரியவில்லையா என்று கேட்டேன்.அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதென்பது நல்லது தான் ஆனால் அதற்காக அரசாங்கம் மிகஅவசரப்படுவதாகத்தெரிகிறது என்று சொன்னான்.இப்பொழுதும் உண்மையாகவே அரசாங்கம் பாதுகாப்பு வலையங்கள் மீது குண்டு போடுகிறதா என்று அப்பாவியாக்கேட்டான்.

சிங்களவர்கள் உண்மையான சுபாவம் பழிவாங்குவதோ இனத்துவேசம் பாராட்டுவதோ இல்லை.சிங்களவர்கள் ஆதிகாலம் தொட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.அவர்களுக்கும் வேறு நாட்டவர்களுக்குமான பூர்வீகத்தொடர்புகள் குறைவாக இருந்தன.நான் அறிந்த மட்டில் சிங்களமொழியும் மாலைதீவில் வழக்கில் இருக்கும் மொழியும் மட்டுமே கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன.யாழ்;பாணத்தமிழர்களைப்போல இந்திய தமிழ் ப்புத்தகங்களை வாசிக்கும் பாக்கியமோ அல்லது பண்டைய கலாச்சாரத்தொடர்புளை இலக்கியங்களை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறாதவர்களாகவே இருந்தார்கள்.

வெளியுலகுடனான அவர்களது தொடர்புகள் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களைப்போலல்லாது மிகவும் குறுகியதாகக்காணப்பட்டது.சிங்களவர்கள் கடல்கடந்து போனதாகவோ வியாபாரங்களில் ஈடுபட்டதாகவோ சரித்திரங்கள் குறைவே.அதே போல்தான்
அரசதொடர்புகளும் காணப்பட்டன.

குவைநி பாண்டிநாட்டு இளவரசன் மற்றும் புத்தமதபரவல் பிக்குணி சங்கமித்தை வரவு என்பன இங்கு விதிவிலக்குகளாகும்.இந்தச்சிங்கள மக்களின் உலகஞானமில்லாப்போக்கினைத்தான் யாழ்பாபணத்து மேட்டுக்குடியினரால் 'மோட்டுச்சிங்களவன் என்றும் இளநிவெட்டி என்றும்" இகழ்ச்சியாகப்பேசப்பட்டன.ஆனால் சிங்களமக்கள் தங்களுக்கான எல்லாவற்றையும் தாங்களே வளர்த்துக்கொண்டார்கள்.

கலைகள் உணவுகள் பண்டிககைள் எல்லாம் சிங்களவர்களுக்கே தனித்துவமானதாக இருந்தது.சிங்கள சினிமாத்துறைகூட இன்னமும் வளர்சியடையாததாகவும் இந்தி ஆங்கில படங்களின் பிரதிபலிப்புகளுடனும் தான் வருகின்றன.காமத்தை தூண்டும் காட்சிகள் சிங்கள சினிமாவில் சர்வசாதாரணம்.பெயர்சொல்லக்கூடிய சிங்களபடங்கதை;தவிர மற்றெல்லாம் குப்பையென்றே ஒதுக்கத்தகும்.சிங்கள சினிமாத்துறைமட்டும் இன்னமும் குறைவளர்சியடைந்ததாகவே காணப்படுகிறது.

சிங்களப்பெண்களும் மிகவும் மகிழ்ச்சி விரும்பிகள்.திருமணத்திற்கு முன் காதலிப்பது உடலுறவு கொள்ளவதென்பது சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.பெண்காதலிப்பதும் தனக்கான ஆணைத்தெரிந்து கொள்வதும் சிங்களசமூகத்தில் சாதாரணம்.இந்த மகிழி;ச்சி விரும்பும் தன்மையால் சிங்கள சமூகத்தில் பல இனங்களின் கலப்பு தென்டுகின்றது.

சிங்களவர்கள் பெரும்பாலும்; வறியவர்கள்.சிறு சிறு வியாபாரங்களில் மாத்திரம் ஈடுபடுபவர்கள். பெரும்பாலும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிங்களமக்களும் சிங்கள அரசியல் கட்சிகளால் கொம்புசீவிவிடப்பட்டவர்களும் மாத்திரமே.இவர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு முழுச்சிங்களவர்களையும் இனத்துவேசம் பட்டம் கட்டுவது வைக்கோ போன்ற சைக்கோக்களுக்குதான் ஏற்புடையது.சிங்கள மக்களிடையே நம்பிக்கை என்பது மிகவும் குறைவு.ஒரு மனிதனை முழுதாக நம்ப மாட்டார்கள்.வீடுகளை எப்போழுதும் பூட்டியேவைத்திருப்பார்கள்.மிகவேடிக்கை என்னவென்றால் யாழ்பாணத்தில் இருந்து வந்து சிங்கள மக்கள் நிறைந்து கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுடைய வீடு எந்நேரமும் திறந்திருக்கும் ஆனால் தலைமுறை தலைமுறையாக அப்பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்களின் வீடுகள் சாத்திய கதவுகளுடனே காணப்படும்.வேலை இடங்களில் சிங்கள மக்கள் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை.மச்சாங்(தமிழில் மச்சான்) என்று மற்றவரை அழைத்துக்கொள்ளுவார்கள்.

ஒரு கடந்த பத்து ஆண்டுகளில் சிங்களவர்கள் அடைந்த முன்னேற்றம் நாலுகால் பாச்சல் என்றே சொல்லவேண்டும்.இன்று கொழும்பில் தொழில் நுட்பத்திலும் சரி பட்டப்படிப்புகளிலும் சரி சிங்களமக்களின் வளர்சி அளப்பரியது.அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்படமையும் வெளியுலகத்தொடர்புகளும் மற்றும் வடஇந்திய கலாச்சாரத்தை பின்பற்றத்தொடங்கியமையுமே காரணமாகும்.

இன்று நடக்கும் யுத்தம் தமிழர்களைப்போலவே கொழும்பில் படித்த சிங்களவர்களாலும் விசனத்துடனே பார்க்ப்படுகிறது.யுத்தவெற்றிகள் புதிதாக சிங்களமக்களிடையே போலியான நாட்டுப்பற்றொன்னினை திட்டமிட்டு வளர்து வருவதுபோல் தெரிகிறது.தமிழர்களைப்போலல்லாது படித்த சிங்கள மக்கள் கருத்துக்களைக்கேட்பதிலும் மற்றவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் அகன்ற பார்வை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சின்ன உதாரணம்..

"மட்டக்களப்பில் ஒரு சிங்கள போலிஸ் அதிகாரி துப்பாக்கி முனையில் தாயை சமையல்அறையில் அடைத்து வைத்துவிட்டு மகளை பாலியல் பலாத்காரம் செய்தான்".இதை கேள்விப்பட்டது முதல் எனக்கு வேலையில் கவனம் செய்யவில்லை.இவ்வளவு யுத்தங்களுக்குபிறகும் உயி;ர் உடைமை இழப்புகளுக்கு பிறகும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமானால் இதற்கு முடிவுதான் என்ன.. என்னுடன் வேலைசெய்யும் சிங்கள இளைஞனிடம் எனது அங்கலாய்பைச்சொன்னேன்.என்னிடம் மட்டும் துப்பாக்கியிருந்தால் முதல்வேலை அவனை சுடுவதாகத்தான் இருக்கும் என்று வார்த்தைகளைக்கொட்டினேன்.

அவன் சொன்னான் இதை தமிழ் சிங்கள யுத்தமாக பார்க்காதே.இது மனித குலத்துக்கு எதிரான குற்றம்.
அதை முதலில் உணர்ந்துகொள்.இதை அரசாங்கம் மறைக்க முயலுமானால் மக்களுக்கிடையே அரசாங்கத்தைப்பற்றிய நம்பிக்கை அற்றுப்போகிறது.அதுவும் இது ஒரு குறித்த சிறுபான்மையினத்துக்கு நடக்கும் போது அரசாங்கத்தின் பாராமுகத்தால் அவர்கள் அதற்கான நீதியை பிறவளிகளில் தேடவெளிக்கிடுவார்கள்.அவ்வாறு தேடும் கூட்டத்திற்கு ஒரு தவறான கூட்டம் வழிகாட்டுமானால் ஆயிரமென்ன லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் நடக்கத்தான் செய்யும்.இவை முழுநாடும் சேர்ந்து எதிர்த்தழிக்க வேண்டிய செயற்பாடாகும்.
அவன்சொன்ன தெளிவையும் குரலின் உறுதியையும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை . .எங்களுடைய மாமன் மச்சான் சித்தப்பா சேர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள் அதற்கான சுவடுகளே தெரியாமல் அழித்தொழிக்படத்தான் போகிறதா அவ்வளவு உயிர்களும் விழலுக்கு இறைத்த
நீரா..



Wednesday, April 29, 2009

உங்களுக்கு சுரணயே கிடையாதா?

பூனை கண்ணை மூடினால் பூலோகமே இருண்டு விட்டதாம் என்பது போல இருக்கிறது 'நாங்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் ஆடலறி மற்றும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்த வில்லை என்பது.".அன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையில் 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்".ஜேயலலிதா அதைச்சொன்ன விதம் பிழையாக இருக்கலாம்.ஒரு பணக்கார விபச்சாரியை 'முகத்திற்கு நேர நீ ஒரு வேசை" என்று சொல்லுவது போல கேட்கும் மக்களை காயப்படுத்தினாலும் அதில் உள்ள உண்மையை மறுக்கமுடியவில்லை அன்று அப்படிச்சொன்ன ஜெயலலிதாவை தமிழினத்துரோகி என்று சொன்ன அதே வாய்கள்தான் இன்று அமெரிக்கத்தமிழ்ச்சங்கத்தினூடாகவும் ஜெர்மனி இளையோர் அமைப்புளுடாகவும் 'நன்றி அம்மணி நன்றி' என்று கண்ணீர் வழியக்கத்துகின்றன.என்னத்தை சொல்வது? மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடிதானா... மட்டக்களப்பிலும் யாழ்பாணத்திலும் வன்னியில் முல்லைத்தீவில் உள்ள பெற்றோரின் உற்றார் உறவினர் சகோதரர்கள் காதலன்கள் காதலிகள் நிலை தெரியாமல் யாழ்பாபண பல்கலைக்களக வாசலில் ஒவ்வொருநாளும் விடியமுதல் உதயன் பேப்பருக்கா நிக்கும் சகோதர சகோதரிகளே நீங்கள்

சொல்லுங்கள்



Thursday, February 05, 2009

கரக் .. என்ற சப்தம் நிசப்தம் கிழித்தது

கரக் .. என்ற சப்தம் நிசப்தம் கிழித்தது.பிரிய மறுத்த இமைகள+டே சன்னமான வெளிச்சத்தில் நகர்ந்து முன்னேறியது முதலாவது உருவம்.
புரிந்துகொள்ள நேரம் ஆகவில்லை.ஆபாயம் என்றது அவனது மூளை.
நரம்பு முடிவுகளில் வேர்வை துளிர்த்தது.அசுர கதியில் இயக்கவேகத்தை அடைந்தது உடல்.
அவசரப்படாமல் ஜன்னலருகே பதுங்கியது இரண்டாவது உருவம்.
குளிரடித்தது போல நடுங்கியது உடம்பு.சிந்தனை செய்வதை மறந்து போனான்.போர்வை மூடியிருந்த உடம்புக்குள் துவண்டுபோய்க்கிடந்தன கைகள். தலைக்குநேரே மூச்சுக்காற்றின் சப்தம் உலுப்ப துள்ளிவிலகினான்.ஷசலன்சர் பூட்டாத துப்பாக்கி கிளப்பிய வெடியொலி ஊரை எழுப்பியது.தோள்மூட்டுக்குகீழ் ஊளைவு எடுத்தது.மெதுவான எரிவு மூட்டிலிருந்து பரவத்தொடங்கியது. குறிப்பில் இருட்டில் பாய்ந்தவனது கைளுக்கு கிடைத்தது சுட்டவனின் கழுத்து.பாயும்போது அவனை என்ன செய்வதென்று தெரியவில்லை.முழுஉடம்பின் பாரத்தாலும் அவன் அசைவைநிறுத்த முயன்றான்.இவன் சொன்னதை கேட்க மறுத்தது இடதுகை.ஊன்றிய நிலத்தில் இருந்து பெயர்ந்த கற்கள் முழங்கையை வளுந்தின. துலையைத்தூக்கி இரண்டாமவனை அடையாளம் காணமுயன்றான்;.பேய்க்காற்று பிடரியை உத்தியது.மெக்கானிக்ஷெட்டின் எண்ணைத்தரையில் சுவற மறுத்து கெட்டியாக தரையில் ஊர்ந்தது கருஞ்சிவப்புத்திரவம்.தன்னைச்சுட்ட சத்தம் கேட்குமுன்னே தலைசாய்ந்து இறந்து போனான் டும்பாச்சுரேஸ்.



சுரேசண்ணா புறா ஒண்டு தாறிங்களா? ஆப்பாவின் சைக்கிள் கரியரில் இருந்தவாறு சுரேசண்ணாவைப்பார்த்துக் கேட்டான் அவன்.அப்பாவுடன் இருக்கும்போது கேட்டால் சுரேசண்ணா தந்துவிடுவான் என்ற நினைப்பு அவனுக்கு.
‘போறுங்கோ தம்பி.புதுசா ஒண்டும் இறக்கேல்ல.இறக்கினவுடன ஈக்கிலடிச்சுப்போட்டுத்தாறன்’.அந்தா பாத்தீங்களே ‘பொஸ்கோப்பள்ளிக்குடத்துச்சீற்றில..’
அடுத்து உயரமான மூண்டுமாடிக்கட்டடத்தில் தெரிந்தன வெள்ளையும் மண்ணிறமுமான இரண்டு புறாக்கள்.
ஏன்ரதான் இரண்டும்.பொஸ்க்கோப்பள்ளிக்குடத்து முகட்டுக்குள்ளயே கூடுகட்டி இருக்குதுகள்.கூட்டுக்க வாறேல்ல.. தீனுக்கு மட்டும் வரும் ரெண்டும்.சுரேஸண்ணாவின் விசிலுக்கு அசைவைக்காட்டின புறாக்கள் இரண்டும்.
கூட்டுக்க குஞ்சொண்டும் பொரிக்கேல்லயே சுரேசண்ணா.
அதுக்குப்பதில் சொல்லாமல் அப்பாவுடன் கதைத்துக்கொண்டிருந்தார் சுரேசண்ணா.ஆட்வான்ஸ் லெவல்ல ஆட்ஸ் எடுத்தாச் சுகம் என்ன தம்பி.
இல்ல மாமா கொமேஸ் எடுக்கப்போறன்.
இதில நிக்கேக்க ஷேட்ஒண்டைப்போட்டுக்கொண்டு நில்லும் சுரேஸ்.கட்ட மதிலுக்கு மேலால் தெரிந்த மெல்லிய தோள்களில் தட்டினார் அப்பா.
புதிதாக முளைக்கத்தொடங்கிய மீசையுடன் பற்கள் தெரிய அழகாக சிரித்தார் சுரேசண்ணா.





இஞ்சேருங்கோ! சூமாரண்ண வந்திருக்கிறார்.
தம்பி சூமார்மாமா வந்திருக்கிறார் இருக்கச்சொல்லு வாறன்.ஈரவிறகு சவத்த புகைஞ்சுகொண்டே இருக்கு.பொசு;சுமட்ட வண்டில்காரன் போனா மறியடா தம்பி.இஞ்சேருங்கோ…
அப்பா கிணற்றடியில் இருந்து வருவது கேட்டது.கதிரைக்குள் புதைந்திருந்தார் சூமார் மாமா.வத்திப்போன மூங்கில் போல மெல்லிய உறுதியான உடம்பு.வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டையுடன் செருப்பை மறந்து பலகாலமான பித்தவெடிப்புக்கால்கள்.ஒன்றைத்தூக்கி ஒன்றுக்குமேல் போட்டுக்கொண்டு முன்காலை ஆட்டிக்கொண்டிருந்தார்.
அண்ண வாங்கோ.. - அப்பா சாக்கில் ஈரம் துடைத்தார்.
தம்பி சந்தப்பக்கம் போகேல்லயே..
வெளிக்கிடோணும் அண்ண.கிணத்தடி வாழ இரண்டுக்கும் கொஞ்சம் தண்ணி விடுவம் எண்டிட்டு..
எனக்கொரு இருநூறுருவா வேணும் தம்பி.
மனம் புண்படுவதைதவிர்க்கும் சிரிப்பு அப்பாவின் முகத்தில்.‘என்னட்டையும் இல்ல அண்ண.இருநூறு ருவா வெளியால வாங்கி வச்சிருக்கிறன் சந்தக்குப்போவம் எண்டிட்டு.நூறுருவாவை நீங்கள் கொண்டுபோங்கோ..’
பட்டடய விட்டாப்பிறகு இப்ப கொஞ்சம் கரச்சலா இருக்குத்தம்பி.இவன் சுரேஸ் எழும்புமட்டும் சாமாளிக்கத்தான் வேணும்.நான் வாறன்…
சூமார்மாமாவுடன் கேற்றுமட்டுக்கும் நடந்தார் அப்பா.





‘இந்தா ஒண்டுதான் தம்பி மிச்சம்’.சக்கரை கலந்த அரிசிமாரொட்டியை என்பக்கம் நகர்த்தின சுருங்கிப்போன இரண்டு கைகள்.வெட்டாத நகத்தில் இருந்த பழுப்பு நிறத்தை தாண்டி என்னை இழுத்தது ரொட்டியின் மணம்.
‘அன்ரி உங்கட வீடு கிடுகாலதானே மேஞ்சிருக்கொன்ன..ஒழுகிறேல்லயே. – அம்மா.
பதிஞ்ச வீடுதான பிள்ள. சீற்றுப்போட்டால் மனுசர் அவிஞ்செல்லோ செத்துப்போவினம்.மழைபெஞ்சால் முகட்டுக்கால கொஞ்சம் ஒழுகும்.குசினிதான் கொஞ்சம் ஈரம் கசியிது.பட்டடய விட்டாப்பிறகு அந்தச்சின்ன முத்தத்தில வெச்சுதான அந்தாள் வேலைசெய்யிறது.வீட்டிலை இப்ப கைவைக்கிறத யோசிக்கேலாது பிள்ள..
டும்பா இப்ப ஏஎல் எல்லோ அன்ரி செய்யிது..
ஓம்புள்ள.உந்த சான்ரிப்பள்ளிக்குடத்தில சேத்து அது படிக்கிறமாதிரித்தெரியேல்ல புறாத்தான் மேய்க்கிது.
அவன் வெளீல சுத்தாம வீட்டுக்க இருக்கிறதச் சொல்லாம நீங்கள்….
என்ன செய்யிறதண.இருக்கிறது ஒண்டே ஒண்டு. இவ்வளவு காலத்துக்குப்பிறகு பிறந்து எனக்கு ஒண்டும் முகத்துக்கு நேர சொல்ல ஏலுறேல்ல.உந்தப்பொடியங்களோட சேராத எண்டா கேக்கான். அந்தக்கறுவல் இயக்கப்பெடியனாம். இவனிட்டக்கேட்டா இல்ல என்டு சோல்லுறான்.உவனுக்கொண்டெண்டா நான் உயிரேட இருக்கன். மலையாள உச்சரிப்புடன் அந்த வயோதிகத்தொண்டை கரகரத்தது.கண்ணீர்ப்பளபளப்பை புறங்கை தேய்த்துக்கொண்டது.
சுரேஸ் அப்பிடியொண்டுக்கும் போகாது.நீங்கள் யோசிக்காதேங்கோ.உந்த வயசில எல்லாரும் இப்புடித்தான்.ஏங்கட பெரியதம்பி கேக்காத இயக்கப்பாட்டுக்களே..தகப்பன் அடிச்சாலும் அவன் இயக்கப்பாட்டுப்புத்தகங்கள கொண்டுதான் வாறான்.
ஆர் கொக்கான்ர மோனா..
ஓ.





பத்துநாள் லீவு என்னத்தை காணுமடா.. வருசக்கணக்கா அங்க இருந்திட்டு வாறது ஒரு கிழமை கூட எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமே..
ம்.. ஒரு மாதம் லீவெடுத்தா ‘ஓடு நாயே’ என்டு கலைச்சுவிடுவான்.பிறகு யாழ்ப்பாணத்தில வந்து புல்லுத்தான் புடுங்க வேணும்.விசர்க்கத கதைக்காதேங்கோம்மா…
யாழ்பாப்ணத்தில எல்லாரும் இஞ்ச புல்லுத்தானே புடுங்குகினம்.சூமாரண்ணேன்ர டும்பாச்சுரேசெல்லே வந்தது அண்டக்கு.சூமாரண்ண செத்துப்போச்சாம்.தாயும் இதுவும்தானாம்.நல்லா வளந்து பெரிய ஆம்பிளயாவிட்டுது.
உண்மையாவே.. என்ன செய்யிறாராம் சுரேசண்ணா..
வன்னீல மோட்டச்சயிக்கில் மெக்கானிக் கடையயொண்டு வச்சிருந்ததாம்.இப்ப உங்க ரெண்டாங்;குறுக்குத்தெருவில கடை ஒண்டு எடுத்து நடத்துதாம்.நல்லா ஓடுதெண்டு சொல்லிச்சுது.



சுமுது… எஸ்எம்எஸ்சீயில இருந்து ஐஎஸ்பிக்கு டெலிவர் பண்ணுப்பட்டிருக்கா எண்டு பார் இல்லாட்டி கீயுவில இருக்குதா எண்டு பார்.பைப்புகளும் கோடுகளும் சாட்டுகளுமாகவிருந்த மொனிட்டரை உத்துப்பார்த்துக்கொண்டே கதைத்துக்கொண்டிருந்தேன்.கைத்தெலைபேசி கிணுக்கியது.போறு என்று மற்றதை அமத்திவிட்டு கைத்தெலைபேசியுடன் ஜன்னல்பக்கம் நகர்ந்தேன்.

‘தம்பியே கதைக்கிறது..’ஓமம்மா சொல்லுங்கோ.

சுமாரண்ணேன்ர மகனயெல்லோ நேற்றுச்சுட்டுப்போட்டாங்கள்.

சுருங்கிப்போன கைகளுடனும் கண்ணீர்த்திரையிடும் முகத்தோடும் அந்தக்கிழத்தாயின் உருவம் கண்முன் தோன்றி மறைந்தது.’அவனுக்கு ஒண்டெண்டா நான் உயிரோட இருக்கமாட்டன்.’சோர்ந்துபோன உடலுடன் அருகிலிருந்த கதிரையில் இருந்துவிட்டேன்.

எப்பம்மா நடந்தது?

நேற்று இரவுதான்.கடேக்க படுத்திருக்கேக்க இரண்டு மூண்டுபேர் வந்து சுட்டிருந்கிறாங்கள்.நான் நெக்கிறன் வன்னியால வந்தாப்பிறகும் தொடர்புவச்சிருந்திருக்கிறான் போல..
தாய்க்குத்தெரியுமோம்மா?
ஆரோபோய்ச்சோன்னவங்களாம்.சண்டிலிப்பாயில இருந்து யாழ்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு அழுதழுது ஓடியேவந்ததாம் மனுசி. எரிச்சுப்போட்டு வந்தாப்பிறகு இரண்டுநாளயால ஒரு மத்தியானம் போல றோட்டில சென்றிக்கு நிண்ட ஆமிக்காரன்ர காலகட்டிப்புடிச்சுக்கொண்டு கேட்டுதாம்’தம்பி என்னயும் சுட்டுப்போடு என்னால தாங்கேலாமக் கிடக்கு’.

Monday, February 02, 2009

தம்பி என்னயும் சுட்டுப்போடு என்னால தாங்கேலாமக் கிடக்...கு

கரக் .. என்ற சப்தம் நிசப்தம் கிழித்தது.பிரிய மறுத்த இமைகள+டே சன்னமான வெளிச்சத்தில் நகர்ந்து முன்னேறியது முதலாவது உருவம்.
புரிந்துகொள்ள நேரம் ஆகவில்லை.ஆபாயம் என்றது அவனது மூளை.
நரம்பு முடிவுகளில் வேர்வை துளிர்த்தது.அசுர கதியில் இயக்கவேகத்தை அடைந்தது உடல்.
அவசரப்படாமல் ஜன்னலருகே பதுங்கியது இரண்டாவது உருவம்.
குளிரடித்தது போல நடுங்கியது உடம்பு.சிந்தனை செய்வதை மறந்து போனான்.போர்வை மூடியிருந்த உடம்புக்குள் துவண்டுபோய்க்கிடந்தன கைகள். தலைக்குநேரே மூச்சுக்காற்றின் சப்தம் உலுப்ப துள்ளிவிலகினான்.ஷசலன்சர் பூட்டாத துப்பாக்கி கிளப்பிய வெடியொலி ஊரை எழுப்பியது.தோள்மூட்டுக்குகீழ் ஊளைவு எடுத்தது.மெதுவான எரிவு மூட்டிலிருந்து பரவத்தொடங்கியது. குறிப்பில் இருட்டில் பாய்ந்தவனது கைளுக்கு கிடைத்தது சுட்டவனின் கழுத்து.பாயும்போது அவனை என்ன செய்வதென்று தெரியவில்லை.முழுஉடம்பின் பாரத்தாலும் அவன் அசைவைநிறுத்த முயன்றான்.இவன் சொன்னதை கேட்க மறுத்தது இடதுகை.ஊன்றிய நிலத்தில் இருந்து பெயர்ந்த கற்கள் முழங்கையை வளுந்தின. துலையைத்தூக்கி இரண்டாமவனை அடையாளம் காணமுயன்றான்;.பேய்க்காற்று பிடரியை உத்தியது.மெக்கானிக்ஷெட்டின் எண்ணைத்தரையில் சுவற மறுத்து கெட்டியாக தரையில் ஊர்ந்தது கருஞ்சிவப்புத்திரவம்.தன்னைச்சுட்ட சத்தம் கேட்குமுன்னே தலைசாய்ந்து இறந்து போனான் டும்பாச்சுரேஸ்.



சுரேசண்ணா புறா ஒண்டு தாறிங்களா? ஆப்பாவின் சைக்கிள் கரியரில் இருந்தவாறு சுரேசண்ணாவைப்பார்த்துக் கேட்டான் அவன்.அப்பாவுடன் இருக்கும்போது கேட்டால் சுரேசண்ணா தந்துவிடுவான் என்ற நினைப்பு அவனுக்கு.
‘போறுங்கோ தம்பி.புதுசா ஒண்டும் இறக்கேல்ல.இறக்கினவுடன ஈக்கிலடிச்சுப்போட்டுத்தாறன்’.அந்தா பாத்தீங்களே ‘பொஸ்கோப்பள்ளிக்குடத்துச்சீற்றில..’
அடுத்து உயரமான மூண்டுமாடிக்கட்டடத்தில் தெரிந்தன வெள்ளையும் மண்ணிறமுமான இரண்டு புறாக்கள்.
ஏன்ரதான் இரண்டும்.பொஸ்க்கோப்பள்ளிக்குடத்து முகட்டுக்குள்ளயே கூடுகட்டி இருக்குதுகள்.கூட்டுக்க வாறேல்ல.. தீனுக்கு மட்டும் வரும் ரெண்டும்.சுரேஸண்ணாவின் விசிலுக்கு அசைவைக்காட்டின புறாக்கள் இரண்டும்.
கூட்டுக்க குஞ்சொண்டும் பொரிக்கேல்லயே சுரேசண்ணா.
அதுக்குப்பதில் சொல்லாமல் அப்பாவுடன் கதைத்துக்கொண்டிருந்தார் சுரேசண்ணா.ஆட்வான்ஸ் லெவல்ல ஆட்ஸ் எடுத்தாச் சுகம் என்ன தம்பி.
இல்ல மாமா கொமேஸ் எடுக்கப்போறன்.
இதில நிக்கேக்க ஷேட்ஒண்டைப்போட்டுக்கொண்டு நில்லும் சுரேஸ்.கட்ட மதிலுக்கு மேலால் தெரிந்த மெல்லிய தோள்களில் தட்டினார் அப்பா.
புதிதாக முளைக்கத்தொடங்கிய மீசையுடன் பற்கள் தெரிய அழகாக சிரித்தார் சுரேசண்ணா.





இஞ்சேருங்கோ! சூமாரண்ண வந்திருக்கிறார்.
தம்பி சூமார்மாமா வந்திருக்கிறார் இருக்கச்சொல்லு வாறன்.ஈரவிறகு சவத்த புகைஞ்சுகொண்டே இருக்கு.பொசு;சுமட்ட வண்டில்காரன் போனா மறியடா தம்பி.இஞ்சேருங்கோ…
அப்பா கிணற்றடியில் இருந்து வருவது கேட்டது.கதிரைக்குள் புதைந்திருந்தார் சூமார் மாமா.வத்திப்போன மூங்கில் போல மெல்லிய உறுதியான உடம்பு.வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டையுடன் செருப்பை மறந்து பலகாலமான பித்தவெடிப்புக்கால்கள்.ஒன்றைத்தூக்கி ஒன்றுக்குமேல் போட்டுக்கொண்டு முன்காலை ஆட்டிக்கொண்டிருந்தார்.
அண்ண வாங்கோ.. - அப்பா சாக்கில் ஈரம் துடைத்தார்.
தம்பி சந்தப்பக்கம் போகேல்லயே..
வெளிக்கிடோணும் அண்ண.கிணத்தடி வாழ இரண்டுக்கும் கொஞ்சம் தண்ணி விடுவம் எண்டிட்டு..
எனக்கொரு இருநூறுருவா வேணும் தம்பி.
மனம் புண்படுவதைதவிர்க்கும் சிரிப்பு அப்பாவின் முகத்தில்.‘என்னட்டையும் இல்ல அண்ண.இருநூறு ருவா வெளியால வாங்கி வச்சிருக்கிறன் சந்தக்குப்போவம் எண்டிட்டு.நூறுருவாவை நீங்கள் கொண்டுபோங்கோ..’
பட்டடய விட்டாப்பிறகு இப்ப கொஞ்சம் கரச்சலா இருக்குத்தம்பி.இவன் சுரேஸ் எழும்புமட்டும் சாமாளிக்கத்தான் வேணும்.நான் வாறன்…
சூமார்மாமாவுடன் கேற்றுமட்டுக்கும் நடந்தார் அப்பா.





‘இந்தா ஒண்டுதான் தம்பி மிச்சம்’.சக்கரை கலந்த அரிசிமாரொட்டியை என்பக்கம் நகர்த்தின சுருங்கிப்போன இரண்டு கைகள்.வெட்டாத நகத்தில் இருந்த பழுப்பு நிறத்தை தாண்டி என்னை இழுத்தது ரொட்டியின் மணம்.
‘அன்ரி உங்கட வீடு கிடுகாலதானே மேஞ்சிருக்கொன்ன..ஒழுகிறேல்லயே. – அம்மா.
பதிஞ்ச வீடுதான பிள்ள. சீற்றுப்போட்டால் மனுசர் அவிஞ்செல்லோ செத்துப்போவினம்.மழைபெஞ்சால் முகட்டுக்கால கொஞ்சம் ஒழுகும்.குசினிதான் கொஞ்சம் ஈரம் கசியிது.பட்டடய விட்டாப்பிறகு அந்தச்சின்ன முத்தத்தில வெச்சுதான அந்தாள் வேலைசெய்யிறது.வீட்டிலை இப்ப கைவைக்கிறத யோசிக்கேலாது பிள்ள..
டும்பா இப்ப ஏஎல் எல்லோ அன்ரி செய்யிது..
ஓம்புள்ள.உந்த சான்ரிப்பள்ளிக்குடத்தில சேத்து அது படிக்கிறமாதிரித்தெரியேல்ல புறாத்தான் மேய்க்கிது.
அவன் வெளீல சுத்தாம வீட்டுக்க இருக்கிறதச் சொல்லாம நீங்கள்….
என்ன செய்யிறதண.இருக்கிறது ஒண்டே ஒண்டு. இவ்வளவு காலத்துக்குப்பிறகு பிறந்து எனக்கு ஒண்டும் முகத்துக்கு நேர சொல்ல ஏலுறேல்ல.உந்தப்பொடியங்களோட சேராத எண்டா கேக்கான். அந்தக்கறுவல் இயக்கப்பெடியனாம். இவனிட்டக்கேட்டா இல்ல என்டு சோல்லுறான்.உவனுக்கொண்டெண்டா நான் உயிரேட இருக்கன். மலையாள உச்சரிப்புடன் அந்த வயோதிகத்தொண்டை கரகரத்தது.கண்ணீர்ப்பளபளப்பை புறங்கை தேய்த்துக்கொண்டது.
சுரேஸ் அப்பிடியொண்டுக்கும் போகாது.நீங்கள் யோசிக்காதேங்கோ.உந்த வயசில எல்லாரும் இப்புடித்தான்.ஏங்கட பெரியதம்பி கேக்காத இயக்கப்பாட்டுக்களே..தகப்பன் அடிச்சாலும் அவன் இயக்கப்பாட்டுப்புத்தகங்கள கொண்டுதான் வாறான்.
ஆர் கொக்கான்ர மோனா..
ஓ.





பத்துநாள் லீவு என்னத்தை காணுமடா.. வருசக்கணக்கா அங்க இருந்திட்டு வாறது ஒரு கிழமை கூட எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமே..
ம்.. ஒரு மாதம் லீவெடுத்தா ‘ஓடு நாயே’ என்டு கலைச்சுவிடுவான்.பிறகு யாழ்ப்பாணத்தில வந்து புல்லுத்தான் புடுங்க வேணும்.விசர்க்கத கதைக்காதேங்கோம்மா…
யாழ்பாப்ணத்தில எல்லாரும் இஞ்ச புல்லுத்தானே புடுங்குகினம்.சூமாரண்ணேன்ர டும்பாச்சுரேசெல்லே வந்தது அண்டக்கு.சூமாரண்ண செத்துப்போச்சாம்.தாயும் இதுவும்தானாம்.நல்லா வளந்து பெரிய ஆம்பிளயாவிட்டுது.
உண்மையாவே.. என்ன செய்யிறாராம் சுரேசண்ணா..
வன்னீல மோட்டச்சயிக்கில் மெக்கானிக் கடையயொண்டு வச்சிருந்ததாம்.இப்ப உங்க ரெண்டாங்;குறுக்குத்தெருவில கடை ஒண்டு எடுத்து நடத்துதாம்.நல்லா ஓடுதெண்டு சொல்லிச்சுது.



சுமுது… எஸ்எம்எஸ்சீயில இருந்து ஐஎஸ்பிக்கு டெலிவர் பண்ணுப்பட்டிருக்கா எண்டு பார் இல்லாட்டி கீயுவில இருக்குதா எண்டு பார்.பைப்புகளும் கோடுகளும் சாட்டுகளுமாகவிருந்த மொனிட்டரை உத்துப்பார்த்துக்கொண்டே கதைத்துக்கொண்டிருந்தேன்.கைத்தெலைபேசி கிணுக்கியது.போறு என்று மற்றதை அமத்திவிட்டு கைத்தெலைபேசியுடன் ஜன்னல்பக்கம் நகர்ந்தேன்.

‘தம்பியே கதைக்கிறது..’ஓமம்மா சொல்லுங்கோ.

சுமாரண்ணேன்ர மகனயெல்லோ நேற்றுச்சுட்டுப்போட்டாங்கள்.

சுருங்கிப்போன கைகளுடனும் கண்ணீர்த்திரையிடும் முகத்தோடும் அந்தக்கிழத்தாயின் உருவம் கண்முன் தோன்றி மறைந்தது.’அவனுக்கு ஒண்டெண்டா நான் உயிரோட இருக்கமாட்டன்.’சோர்ந்துபோன உடலுடன் அருகிலிருந்த கதிரையில் இருந்துவிட்டேன்.

எப்பம்மா நடந்தது?

நேற்று இரவுதான்.கடேக்க படுத்திருக்கேக்க இரண்டு மூண்டுபேர் வந்து சுட்டிருந்கிறாங்கள்.நான் நெக்கிறன் வன்னியால வந்தாப்பிறகும் தொடர்புவச்சிருந்திருக்கிறான் போல..
தாய்க்குத்தெரியுமோம்மா?
ஆரோபோய்ச்சோன்னவங்களாம்.சண்டிலிப்பாயில இருந்து யாழ்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு அழுதழுது ஓடியேவந்ததாம் மனுசி. எரிச்சுப்போட்டு வந்தாப்பிறகு இரண்டுநாளயால ஒரு மத்தியானம் போல றோட்டில சென்றிக்கு நிண்ட ஆமிக்காரன்ர காலகட்டிப்புடிச்சுக்கொண்டு கேட்டுதாம்’தம்பி என்னயும் சுட்டுப்போடு என்னால தாங்கேலாமக் கிடக்கு’.

Friday, August 31, 2007

அரவிந்தன் என்ற அரவிந்து

திலகம் எங்கயடி முத்தத்தில நின்ட நாய்க்குட்டியள் ஒண்டையும் காணேல்ல.தாய் நாய் அந்தரப்படுது?..அம்மம்மாவின் சத்தம் குசினி மட்டும் கேட்டது.நாய் ஜன்னலுக்கு கிட்ட வருவதும் மூக்கை காற்றில் உயர்த்தி காற்றை உறிஞ்சுவதுமாக நின்றது.அது ஓடியபோது கனத்து நின்ற அதன் முலைகள் இடமும் வலமும் அசைந்தாடின.மூலைக்கிணற்றில் தொபுக் என்று எதோ விழுந்த சத்தம் கேட்டு சாப்பிட்டு விட்டு அம்மாவுக்குத்தெரியாமல் வெய்யிலுக்க் தும்பி பிடித்துக்கொண்டிருந்த பாபு பிடிச்சதும்பிகளையும் விட்டு விட்டு கிணற்றைப்பார்க்க ஓடினான்.வாழைச்சருகை பிய்த்துக்கொண்டு ஒடிப்போய் கால்நுனிகளை ஊன்றிக்கொண்டு கிணற்றுக்குள் பார்த்தான்.சேட்போடாத மேலெல்லாம் மண்ணும் வாழைத்தும்பும் ஒட்டியிருந்தது.கிணற்றுக்குள்மூன்றுநாய்க்குட்டிகள் துடித்துக்கொண்டிருந்தன.

பெரியண்ணா நாலாவது குட்டியை இரண்டுவிரலால் தூக்கி அதன் முகத்தை உற்றுப்பார்த்தான்.அது கொஞ்சம் குண்டு நாய்க்குட்டி.வாலை காலுக்குள் இடுக்கி க்கும் க்கும் என்று அனுங்கிவாறு கண்ணை மூடித்திறந்தது.பெரியண்ணா தாங்கோ நான் போடுறன் என்றான் பாபு.துடித்துக்கொண்டிருந்த மூன்று குட்டிகளுக்கு மேல் போய் விழுந்தது குண்டு நாய்க்குட்டி.அந்த ஒன்றையாவது பாபுவால் காப்பாத்த முடியவில்லை.பெரியண்ணா துடித்துக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.பாபு எட்டிப்போய் கிணற்றுக்குள் துப்பி எச்சில் நாய்க்குட்டிகள் மேல் விழுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். அம்மம்மாவின் குரல் குசினிக்குள்கேட்டது.

எடியேய் திலகம்! இவன் நாய்க்குட்டியள கிணத்துக்க போடுறான் போல கிடக்கு பாரடி.இவனுக்கு பாவமெல்லே கிடைக்கப்போகுது.
தம்பி டேய்! அரவிந்து.நாய்குட்டியள் பாவமடாதம்பிகிணத்துக்க போடாத..


செத்துக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளையே இமைக்காமல் பார்தக்கொண்டிருந்தான் பெரியண்ணா.அரவிந்தண்ணா ஏன் நாய்குட்டியள கிணத்துக்க போட்டனீங்கள் ? பாபு மெதுவாகக்கேட்டான்.
பெரியண்ணாவுக்கு இருபது வயது.பாபுவின் அம்மா இல்லா நேரங்களில் றெஜீனாமாமிசொல்லுவா
"அவன் கொஞ்சம் மூளவளர்ச்சி குறைஞ்ச பிள்ளதானே.."
நிச்சயமாக இது பாபுவின்அம்மாவின் காதுகளில் விளாது என்று தெரிந்த பிறகுதான் மாமியின் வாய்திறக்கும்.
பாபு பிறக்கமுதல் அவன் அம்மாதான் பெரியண்ணாவைவளர்த்தவ.அம்மாவின் காதுக்கு இது கேட்டால் அவள் சும்மா இருக்கமாட்டா என்று பாபுவுக்குத்தெரியும்.இவற்றையெல்லாம் வாய்திறவாமல் கேட்டுக்கொண்டிருப்பான்..சில நேரங்களில பெரியண்ணா அவனைக்கட்டிப்பிடித்துக் கொஞ்சுவான்.

"பெரியண்ணா சீ உங்கட எச்சில் மணக்குது சென்ற் அடிச்சு விடு".இரண்டுகையாலும் கன்னத்தை மாறிமாறித்துடைத்துக்கொள்வான் பாபு.பெரியண்ணாவுக்கு உள்ளங்கைகள் இரண்டும் பெரியவை.மென்மையானவை.பாபு அவற்றை தடவிப்பார்த்துக்கொள்வான்.பெரியண்ணாவின் முதுகில் கொப்பளம் கொப்பளமாக காய்கள் இருக்கும்.அவனது உள்ளங்கைகளைப்போலவே அந்தக்காய்களும் தொடுவதற்கு மென்மையானவை அழுத்தமில்லாதவை.

ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியண்ணா வீடியோப்படங்களுடன் வருவான். சண்டைப்படங்களில் அவனுக்கு ஒரே மோகம்.ஒவ்வொரு சண்டைக்கும் "பாபு பார்த்தியே பாபு பார்த்தியே" பெரியண்ணாவின் குரல் இடைக்கிடை உசுப்பிக்கொண்டிருக்கும்.பாபு ரீவியையும் பெரியண்ணாவையும் மாறிமாறிப்பார்த்துக்கொண்டிருப்பான்.தீபாவளி பொங்கல்நேரங்களில் பாபுவும் பெரியண்ணாவும் சைக்கிள் வால்வுக்கட்டைகளில் வெடிசெய்வார்கள்.

இரபது வயதுப்பெரியண்ணாவும் பாபுவும் பெரியப்பா வரும்போது அவர் திடுக்கிடும் படி எப்படி வெடிஅடிப்பது என்று தீவிரமாகத்திட்டமிடுவார்கள்.பெரியண்ணாவின் எல்லாத்திட்டங்களும் கடைசிநேரம் மட்டும் நன்றாகவே வேலைசெய்தாலும் பெரியப்பாவின் கைகளால் கிடைக்கும் மாட்டு அடிகளுடனேயே அவை முடிவடைந்திருக்கின்றன..பாபு பெரியப்பாவின் பின்னால் ஒளித்துக்கொள்வான். பெரியண்ணா தோள்களுக்குள் ஒடுங்கிய தலையுடன் பரிதாபமா முணுமுணுப்பான்.பாபுவுக்கு அவனை தடவிக்கொடுக்கவேண்டும் போல் இருக்கும்.

ஆனால் பெரியப்பா கோபித்துக்கொண்டால்?
பெரியப்பா அங்கால போனதும் மெதுவாக பெரியண்ணாவின் கால்களைக் கட்டிக்கொள்வான்.அதிலேயே அவனது வலிஎல்லாம் சரியாகப்போகும் எனபது பாபுவின் எண்ணம். பெரியண்ணா கண்களில்இருந்து வழியும் கண்ணீரைத்துடைத்தபடி அம்மாவுக்கு இதைப்பற்றி புகார்சொல்ல மெதுவாக குசினிக்கு நடப்பான்.அவனது முதுகில் ஐந்தாறு கையின் அடையாளங்களாவது சிவப்பாக பதிந்திருக்கும்.

அன்று சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவு.பாபு விடியவே பெரியம்மாவீட்ட வந்துவிட்டான்.அங்க ஏற்கனவே சனமாக இருந்தது.சீலா மச்சாள் வந்திருந்தாள்.சீலா நல்ல வெள்ளை நிறம்.அவளைக்கிள்ளிப்பாரக்க வேண்டும் என்று பாபுவுக்கு நெடுக ஆசை.கொடுப்புக்குள் இருக்கும் தெற்றுப்பல்லு அவள் சிரிக்கும் போது மின்னி மறையும். விதம் விதமாக அழகாக உடுப்பு போடுவாள்.அவள் வந்து விட்டால் பெரியண்ணா பெரியமனுசனாகிவிடுவான். பாபுவைக்கண்டுகொள்ள மாட்டான்.

பாபு ஜன்னலில் ஏறிஇருந்து கொண்டு பால்குடித்தபடி ஒவ்வொருவரின் வாயையும் பார்த்துக்கொண்டிருந்தான்.சீலா சிரித்துச்சிரித்து பெரியம்மாவுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.பெரியண்ணா அவளுக்கு படம்போட்டுக்காட்டுவதற்காக ரீவியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்.

"தம்பி டேய' "

பெரியப்பாவின் குரல் பாத்ரூமிலிருந்து கேட்டது.பெரியம்மாவுக்குத்தெரியாமல் ஜன்னலுக்கு கீழே நின்ற எறும்புகளுக்கெல்லாம் பால் ஊற்றிக்கொண்டிருந்த பாபு திடுக்கிட்டுப்போனான்.தடக்குத் தடக்கென்று பெரியப்பா நடந்து வரும் சத்தம் கேட்டது.

"டேய் தம்பி கக்கூசுக்குப்போனாத் வடிவாத் தண்ணி ஊத்துறேல்யாடா? "
புளுத்த நாத்தம் நாறுது.மூதேசி உனக்கு எத்தின தரம் சொல்லுறது. உள்ளுக்க போகேலாமக் கிடக்கு"


பெரியண்ணா கூசிப்போனவனாய் நிமிர்நதான்;.சீலா மச்சாள் சிரித்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
சீலா எப்ப வந்தனி? .பெரியப்பா சீலாவுடன் கதைக்கத்தொடங்கினார்.பெரியண்ணா கையிலிருந்த படக்கொப்பியை புரட்டிப்பார்த்தான்.என்ன செய்யவேண்டுமென்பதை மறந்து விட்டவன் போல கையைத்தொங்கப்போட்டுக்கொண்டான்.

"டேய்"

-பெரியப்பா மறுபடியும் திரும்பினார்.பெரியண்ணா சாறத்தை மடித்துக்கட்டிக்கொண்டு பாத்ரூமைநோக்கி நடந்தான்.
"சீலா போகேக்க கற்பூரவள்ளி இலபுடுங்கித்தாறன்.அம்மாட்டக்குடுத்துவிடு.சூட்டுக்கு நல்லது.நீயும் விடியஎழும்பினவுடன தண்ணிகுடியடியப்பா.பிறகு பார்.."

பெரியப்பா தொடர்ந்துகொண்டிருந்தார்.
யாழ்பாபணத்தில் கரண்டில்லாத காலம் அது.தண்ணித்தொட்டிக்கெல்லாம் குழாய்கிணத்தில இருந்துதான் தண்ணிநிரப்பவேணும்.பெரியண்ணா இரைக்கஇரைக்க கிணத்திலதண்ணயடிப்பான்.பெரியப்பா குளிப்பார்.பெரியப்பாவின் மயிரடர்ந்த பெரிய கருப்பு முதுகு வெளிச்சத்தில் மினுங்கும்.பரபரவென்று சவர்க்காரம் தேய்த்துக்கொள்வார்.கால்நிகமெல்லாம் துப்பரவாக இருக்கவேண்டும் அவருக்கு.ஆறுதலாக அழுக்குத்தேய்துக்குளிக்க சூரியன் நடுவானத்துக்கு வந்து விடும்.பெரியண்ணா பின்னுக்கு கால்களை வளைத்துக்கொண்டு இடைக்கிடை ஓய்வெடுப்பான்.பிறகு பெரியப்பா சாப்பிடப்போய்விடுவார்.
"பாபு பார்த்தியே!அந்த முளியன் ஒருநாளும் தண்ணியடிச்சு விடமாட்டான்.இவர் பேயர் அவனைஒண்டும்சொல்ல மாட்டார்.இவர் பயமடா அவனுக்கு."
பெரியண்ணா கிசுகிசுப்பான்.அவன் முளியன் என்டு அன்பாகச்சொல்வது பெரியப்பாவின் இரண்டாவது மகன் கண்ணனைத்தான்.பெரியண்ணாவின் கோபத்திற்கு காரணம் இல்லாமலில்லை.முளியன் என்ற கண்ணன் நன்றாகப்படிப்பான்.தேவையில்லாமல் மற்றவருடன் கதைவைத்துக்கொள்ள மாட்டான்.பெரியப்பா அவனை வேலை ஒன்றும் செய்யச்சொல்லுவதில்லை.அவனை அதட்டிக்கூட பாபு பார்த்ததில்லை.பெரிண்ணாவுக்கு அவனிடம் பெறாமைதான்.அனால் கோபமில்லை.பெரியண்ணாவின் விளையாட்டுக்கள் எல்லை தாண்டும்போது அண்ணா என்ற கண்ணனின் அதட்டும்குரல் ஒன்றே அவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்..பெரியண்ணா அத்துடன் அடங்கிவிடுவான்.

எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.திடீரென்று பெரியண்ணாவைக்காணவில்லை.
காணவில்லையென்றால் காணவில்லை.

ஊரெல்லாம் பச்சை சீருடை அணிந்தவர்கள் காவலுக்கு நின்றும் பெரியண்ணாவைக்காணவில்லை.பண்ணைக்கடற்கரையோரமாக மெல்லெனத்தவள்ந்து வந்த ஈரலிப்பான பருவப்பெயர்ச்சிக்காற்றுடன் கலந்து மறைந்து விட்டான் பெரியண்ணா.அப்பா எங்கெல்லாமோ ஒடினார்.பாபுவுக்கு முதல் ஒன்றும் தெரிய வில்லை.அப்பாவுடன் சேர்ந்து சைக்கிளில் சவாரிவிட்டான்.

"எப்ப நடந்தது "

அடங்கிப்போனவராய்க்கேட்டார் அப்பா.

"மத்தியானம் சாப்பாடெடுக்க வந்தவன்.ஆரிய குளத்தடியில வைச்சுப்புடிச்சிருக்கிறாங்கள் - நாளைக்கு பின்னேரம் மட்டும் பார்ப்பம்.இவனப்புடிச்சு என்ன செய்யப்போறாங்கள் போசு!!-அப்பாவையே உற்றுப்பார்த்துக்கொண்டு சொன்னார் பெரியப்பா.

அடுத்தநாள் வந்தது.அதற்கு அடுத்தநாளும் வந்தது. அடுத்த மாதமும் வந்தது.முகில் கறுத்து மழைபெய்தது.வயிற்றுக்காற்றையெல்லாம் வாயால் ஊதித்தள்ளும் அளவுக்கு வியர்த்துவடியும் கோடைக்காலம் வந்துபோனது. .பல்கிடுகிடுக்க மாசிப்பனி பொழிந்து தள்ளியது.இப்பொழுதும் முற்றத்து மாமரத்தில் இரட்டைவால்குருவி விடியற்காலத்தில் பாடும் சலசலப்புக்கேட்கிறது.எல்லாம் அந்தந்த இயல்பில் வழுவாமல் நடந்து கொண்டுதான் இருந்தது.பெரியண்ணா மட்டும் வரவில்லை.
டேய்தம்பி என்று கூப்பிட்டு பழகிய குரலுக்கு மற்றப்பெயர்கள் இணங்கவில்லை.தனக்கு நெருக்கமான அந்த பெயருக்குரியவன் இப்போது இல்லை என்று உணர்ந்துகொள்ள பெரியப்பாவுக்கு கொஞ்சக்காலம் பிடித்தது.

காருக்குள் நசுங்கியும் கடுவன்நாய்களிட்ட கடிவேண்டியும் நாய்க்குட்டிகள் தொலைந்துபோயின.பாபு பெரியம்மாவீட்டுக்கு போனால் தென்னம் மரங்களுக்கு கீழ்திரிந்துகொண்டிருப்பான்;.இடக்கிடை போய்கிணற்றை எட்டிப்பார்பான்.அவனுடையதும் பெரியண்ணாவினதும் சொத்துகளான வால்வுக்கட்டை வெடிகள் கவனிப்பாரற்று கிடந்தன.பெரியப்பா இரைக்க இரைக்க குழாய்கிணற்றில் தண்ணியிறைப்பார்.


ஒருகிழமை லீவில் கொழும்பிலிருந்து யாழ்பாணம் வந்திருந்தான் பாபு.பெரியம்மா வீடு வெளிக்கு அப்படியே தான் இருந்தது.அவ்வளவு பெரிய வீட்டில் பெரியம்மா மட்டும் குசினிக்குள்ஏதோ செய்து கொண்டிருந்தா.திரும்பும் போது பெரியம்மாவின் குரல் கேட்டது.தம்பி உந்த நாபிடிகாரர் வந்தா.உந்த குட்ட நாயைப்புடிச்சுக்குடுத்துவிடடா.பெரிய உபத்திரவமாக்கிடக்கு.பாபு ஒன்றும் சொல்லவில்லை. மெதுவாக நகர்ந்தான்.பெரியண்ணாவுக்கு பிடித்தமான வேலைகள் இவை...முற்றத்து விளாட்மரத்துக்குகீழே குருவிக்கூடென்று விழுந்து காற்றில் அலைந்தது.பாபுவுக்கு அழவேண்டும்போல் இருந்தது.

-சேரன் கிருஷ்ணமூர்த்தி

எனக்குப்பிடித்த கவிஞர் திருக்குமரனின் கவிதைத்தெகுப்பிலிருந்து மனதை உருக்கிய ஒரு கவிதை ஒத்திசைவாக


உனக்காகச்சாப்பிட்டு
உனக்காக முலைபெருத்து
உனக்காக உடையவனை
ஒதுக்கிவிட்டுச் சிலநேரம்
தனக்கான விருப்பங்கள்
தவிர்த்திருந்து கண்விழித்து
உட்பசலை படர்ந்திருப்பாள்

எண்ணெய்க்குள் தோய்த்தெடுத்து
இழுத்திழுத்துப் பிடித்துவைத்த
சின்னக் கூர்மூக்கு
சிரட்டைபோல் உருண்டதலை
அசையிலே அவள் நுள்ளும்
சதைபிடித்த பின்பக்கம்
கூசி நீ சிரக்க விரல்தடவும்கீழ் வயிறு

அடையாளம் தெரியாமல்
நீ புதைந்து போயிருக்க
கடைவாயில் பூவரசு
வைரவரில் பூவைத்து
உன்னை எதிர்பார்த்தபடி
உயிர்பிடித்துக்காத்திருப்பாள்
-நன்றி திருக்குமரன் கவிதைகள்

Sunday, August 12, 2007

பின்னிரவின் தூய்மை கலைக்கும்

பின்னிரவின் தூய்மை கலைக்கும்
பழுப்பு இலைகளின்- உதிர்வு
சில நிமிடம் வாங்கி
மீண்டும் உதிரும்,
கறுப்பில் தொலைந்துபோகும்-அவற்றின்
அவசர..இலைக்காம்புகளின்
பிடிப்பு விலகும் சத்தம்
ஒலிக்கீறலாய் இதயம் துளைக்கிறது.

அசைவுகள் ஓய்ந்த உலகத்தின்
பெருமூச்சில் நடுங்கியபடி
பூமி நொக்கி ஒரு சின்னப்பயணம்
முகில் விலகிய

ஒரு சில நிமிடங்களில்
தங்கமாய் தகதகக்கும்
பழுப்பு இலைகள்
நிலவைப்பழிக்கும்.

பூட்டிய ஜன்னல்களின் பின்னே
உடல்தளர்ந்து நரம்புகள்விளிம்பில்
வேர்வைதுளிகளின்,
கோலங்களுடன் நான்மட்டும் தனியாக

காதோரம் உனக்கொரு கவிதைசொல்லவா நண்பா
























வயலும் வரப்பும்
வகிடெடுத்து விரியும்-
வல்லை நிலத்தின்
எல்லை வெளிக்குள்
அமிளும் சூரியன்
எமக்கு மட்டும்

மண்சட்டியில் குத்தரிசிப்
பழஞ்சோறு-காலையில்
நிலங்களின் தலைகோதும்
சுதேசித் தமிழ் உழவனின்
உல்லாசப் புலம்பல்கள்
வியர்வை தளுவிக்கொண்டு.
நாற்றுவேர்களுக்கு காற்று
படுகிறது.
ஈரச்செம்புலம்... கால்பட
மேல் சிலிர்க்கிறது.


ஞாயிறு விடியல்
பளுப்புவெள்ளை
முத்தத்துப் பனங்கள்ளு
கூடிக்குமிந்து நிற்கும்
கொய்யாமரத்துநிழல்
கொஞ்சங் காரமாக
பங்குக்கிடாயிறைச்சி
முத்தத்துக் கொட்டுமண்
விளக்குமாற்றின் வரித்தடங்கள்
தொன்னைகள் கூடத்தோரணம்காட்டும்-இந்த
”அழகுசொல்லமுடியவில்லை”


கைகூவின் கருத்தேயறியாது…
கூத்துக்கூத்தென்று நாமும் கலைவளர்த்தோம்
எங்களுக்குள்ளும் கவிதைகள் வாழ்ந்தன.

எங்களோடு எங்களாய்
நாமே கவிதைகளாய்..


கதியால் சண்டைகளுடனும்
கவுண்ட மணியின் கதைகளுடனும்
காலம்கழிக்கும் மண்ணின் மூத்த
குடிகள்..
இன்றோ,
மட்கிப்போயிற்று எங்கள் கனவுக்காலம்
இன்னமும் கூட
எங்களுக்குள் உறங்கிப்போன
பணடைய தமிழனின்
எச்சங்களின் வாசத்தை
நான்- சிலநேரம்
கனவுகளில் உணர்ந்துகொள்கிறேன்

இலங்கையன் என்ற
இலக்கணம் துறந்து
தமிழனாய்த் தலைகுனியும்
சிலநேரம்
வேலிக்கதியால் முட்களுக் கிடையே
தொலைந்துபோன
இலங்கையனை..
கண்கள் தேடிக்கொண்டேயிருக்கிறது.
நண்பா
சிவப்பான உனது கண்கள்
கனவிலும் உன்னை வெறிக்கும்.
பல்கடிக்கும் சத்தமோ
எனக்குப் பயமாக உணர்கிறேன்.
நண்பா..
உனக்குத் தெரியுமா
உனக்குள் உறைந்து போனவை
உனக்குத் தெரியுமா
உனக்குள் மறக்கடிக்கப்பட்டவை
முற்றுத்து மல்லிகையின்
சின்ன வெள்ளைப்பூக்குளுக்குள்
வாசமொன்று கசியுமே
கொஞ்சம் ஈரலிப்பாக.
விரித்துக்கூடப்பார்க்காத
கவிதைப்புத்தகங்களின்
பேனாமை வாசங்கள்
மூச்சிளுக்கும் ஒவ்வொரு
தரமும் - மூளைசிலிர்க்கும்
உன்..
கண்கள் சொருகும்
இமைகள் திறவாதே.
கண்ணீர்த் துளிகள்
கதவுடைக்கும் நானறிவேன்.
நண்பா
நீ கொஞ்சம் நீயாகும் போது
நான்.
காதோரம் கொஞ்சம் கவிதை சொல்லவா??

Friday, August 10, 2007

தினம் தினம் புதிதாய்


இன்றைக்கு வெள்ளிக்கிழமை.நாளைக்கு வேலையில்லையென்றுநினைக்கும் போதே சந்தோஷம் பொங்கியது.அந்த சந்தோஷத்துடனே காலமைவிடிய பக்கத்தில் இருக்கிற கிரவுண்டில் ஓடவேளிக்கிட்டேன்.மெல்லிய ஈரக்காற்றில்இ விடிந்தும் விடியாத நேரத்தில் யாருமில்லாத வெளியில் ஓடுவதே தனிஇன்பம்.இந்த உலகத்தில் இருப்பவர்களுக்குச் சம்பந்தமில்லாத இடத்திலஇ; எனக்குமட்டும் சொந்தமான இடத்தில் தனியனாக கட்டற்று இருக்கும் ஒரு உணர்வு ஒருபுதுஉற்சாகம் பொங்கிவரும்.ஓடிக்களைத்த பிறகு இரைக்க இரைக்க வியர்வை காயும்வரைக்கும்; புல்தரையில் படுத்துக்கொண்டு கண்டதையும் நினைத்துக்கொண்டிருப்பேன்.சோம்பல் கலைந்து தகதகக்கும்சூரியவெளிச்சத்தில் பச்சைப்புல்தரைகளில் வந்து குதிக்கும் மைனாக்களையும் புறாக்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுசிகரட்புகைப்பதைப்போல் சந்தோஷம் இந்த உலக்த்தில் இல்லையென்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

விடியற்காலை.. விடிந்தும் விடியாத இளங்காலைப் பருவம் என்னுடைய சின்ன வயது முதலே என்னுள் பதிந்து விட்ட ஒன்று.என்னுடைய சந்தோஷமான தருணங்கள் எல்லாமே பெரும்பாலும் அதிகாலையிலேயே நடந்திருக்கிறது.கொளும்பில் எங்கு வீடுமாறினாலும்; எனக்கு ஒரு புல்வெளி கிடைத்துவிடும்.புல்வெளிகளைக் கண்டவுடனே உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் தும்பிகளைக்கலைத்த பத்துவயதுச்சிறுவனுக்கு இருப்புக்கொள்வதில்லை.அங்கு செய்தது போல் புல்வெளிகளில் தும்பி பிடிக்க இப்பொளுது அவனுக்கு முடிவதில்லை.புல்லில் படுத்துக்கொண்டு தும்பிகளையும் பறவைகளையும்;பார்பதில் அந்த சந்தோஷம் அவனுக்கு கிடைத்துவிடுகிறது.
தூரத்தில் புத்தவிகாரத்தில் இருந்து பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள்.எல்லாரும் வெள்ளை நிற ஆடைகளில் மெதுவாகஇநிதானமாக வெளிவரும் பெண்கள். புத்தகோயில்களின் அருளையெல்லாம் தங்களுடன் எடுத்துச்செல்வது போல ஓளிரும்முகங்களுடன் தங்களுக்குள் பேசிக்கொண்டு கிரவுண்டை கடந்து போனார்கள்.கோபுரங்களில் இருந்து வெள்;ளைப்புறாக்கள் சிறகடித்துப்போனது போல ஈர்க்கும் தடயங்களை தங்களின் பாதைகளின் பின்னேவிட்டுக்கொண்டு அவர்கள்போனபிறகும் மங்கல் வெள்ளை ஒளியொன்று பாதையில் கசிவதுபோல பிரமை.புல்லிலிருந்து தலையை நிமிர்த்திப்பார்த்துக்கொண்டிருந்ததில் கழுத்தில் நோகிறது.பெண்களைப்பார்த்துக்கொண்டிருப்பதில்தான் என்ன சந்தோஷம் பேசவேண்டாம் சிரிக்கவேண்டாம்.வெறுமனே பார்துக்கொண்டிருந்தாலே போதும் சந்தோஷமும் உற்சாகமும் தானே வந்துவிடும்கிரவுண்டில் இன்னும் நாலுதரம் சுற்றிஓடலாம்போல…என்ன இருக்கிறதோ தெரியவில்லை பெண்களிடம்.

என்னுடைய உலகம்கூட பெண்கள் சூழ்ந்த உலகம். வீட்டிலேயே நான்கு பெண்கள் அம்மம்மாவையும் சேர்த்து.அப்பாவுக்குப்பிறகு நான்மட்டுமே வீட்டுக்கு வீரமான ஆண்மகன்..நால்வரின் விதம்விதமான அன்பையும் நான்மட்டுமே சுமக்கமுடியாமல் சுமந்து வளர்ந்தேன்.அவர்களை அதிகாரம் செய்வதிலேயே என் நாட்களைக்கழிந்திருக்கின்றன..நான் பாடசாலைக்கு கிளம்புமுன் எல்லாரும் களைத்துசோர்ந்து விடுவார்கள்.ஆட்டிவைத்துவிடுவேன். எனது சத்தம் றோட்டுவரைக்கும் கேட்கும்எனது சின்னத்தங்கச்சி கூட நான்கத்துவதைப்பார்த்துசிரித்துக்கொண்டு எனது சப்பாத்தை துடைப்பது ஞாபகம் வருகிறது,.அப்படி அன்பார்ந் அதிகாரங்கள்சிலநேரங்களில் இப்போளுதும் வேண்டியிருக்கிறது.ஆபத்தற்றஇஅன்பானவர்களிடம் மட்டுமே காட்டக்கூடிய அதிகாரங்கள்.கொளும்பில் எங்கு போய்க்காட்டுவது… பெண்கள் இல்லாத உலகத்தை கற்கனைசெய்யவே கசக்கிறது.

கழுத்தில் ஒட்டிக்கொண்டிருந்த புல்லின் மிச்சங்களையும் பனிநீரின் கசிவையும் உள்ளங்கையால் தேய்த்து பரப்பிக்கொண்டேன் குளித்துவிட்டு அயன் பண்ணிஇன்னமும் சூடாகவே இருந்த உடைகளை போட்டுக்கொண்டு கோல்றோட்டை நோக்கி நடந்தேன்.ஆழ்ந்து மூச்சிழுத்து விடும் ஒவ்வொருதரமும் ஏழு மணிவெயிலுடன் கலந்த குளிர் காற்று நுரையீரலை நிரப்புகிறது.

இன்னும் கொஞ்சம் ஆவ்ரஷேவ் அடித்திருக்கலாம்…

றோட்டின் இரண்டு பக்கங்களிலும் அறிமுகமில்லாத மனிதர்கள் கடந்து போகிறார்கள்.விரைவாகஇ செல்போனுடன் போர்சை துளாவிக்கொண்டு உடைகளைசரிசெய்துகொண்டு பயணப்படும் மனிதர்கள்.ஒவ்வொருவராக கடந்து செல்லும் போதும் அவர்களின்மனதைப் படிக்கமுனைவது போல அவர்களின் முகங்களை மெதுவாக பார்க்கிறேன்.எனது நடப்பு அவர்களில் ஏதும் மாற்றத்தை காட்டுகிறதா என்று அவர்களின் முகக்குறிகளை தெரிந்துகொள்ள முனைகிறேன்.இயற்கையும் மனிதர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டவர்ளை போல அமைதியான காலைநேரத்தில் சப்தமில்லாமல் ஒருவரையொருவர் கடந்து செல்லும் மனிதர்கள்.தொலைவில் திருட்டுத்தனமாக ஒருவரையொருவர் நோட்டமிட்டுக்கொண்டும் அருகில் வரும்போது தலையைக்குனிந்கொண்டும் முகத்தை செயற்கையாக இறுக்கிக்கொண்டும் கடந்துசெல்லும் மனிதர்கள்.என்ன இருந்தாலும் கலைநேரம் குளித்து சுத்தமான உடையில் செல்லும் சகமனிதர்களை பார்க்கும்போதுவரும் இயல்பான உற்சாகத்தில் இந்த வெறுமையை ஒளித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

கணபதியின் கடையில் சாப்பிடும் போது கணபதி எதோ புதுப்படத்தைபற்றி சொல்pக்கொண்டிருந்தான்.மாத்தையா..சொதிகொஞ்சம் போடவா.? கேட்டுக்கொண்டே சொதியை விடடான். அவன் பதிலை எதிர்பார்ப்பதில்லை.என்னுடைய யூகம்அது.அவன்கேட்டு வாய்மூடமுன்னம் இலையில் கவிழ்ந்து படுத்தால்தான் அவன்சொதிவிடுவதை தடுக்கமுடியம்.சொதிக்குள்ளே மூழ்கித்தொலைந்து போய்விட்ட இடியப்பத்தை துழாவிக்கொண்டு கணபதிசெல்வதை கேட்டுக்கொண்டிந்தேன்அவனுக்கும் என்னுடையவயதுதான்.இருபத்தொன்று.எஸ்டே;காரன்.கணபதி ஏதோ சொல்லிவிட்டு சிரித்தக்கொண்டு என்னைப்பார்தான்.பதிலையோ சிரிப்பையோ எதிர்பார்த்த முகத்துடன்.என்னுடைய சிந்தனை ஏழு நதிகள் ஏழு மலைகள் ஏழுகடல்கள் தாண்டி துருக்கி ராஜகுமாரியின் கால்சலங்கைகளை நோண்டிக்கொண்டிருந்தது.மெதுவாக சாப்பிட்டு விட்டு எழுந்தேன்.நான் ரிப்சுக்கு வைத்த காசையே கணபதி உத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.முகம் தொங்கிப்போய் இருந்தது.புறாக்களும் தும்பிகளும் பறந்து போன காய்ந்த புல்வெளிமாதிரி அவனது முகம் மங்கிப்போய்த்தெரிந்தது.ஒரு வேளை கணபதி நான் எதாவது சொல்லுவேன் என்று எதிர்பார்த்தானோ…

“மண்ணிறமான பட்டமரம்!
நிறமிழக்கத்தொடங்குறது…
பச்சை ஓணான்”
சம்பந்தமேயில்லாமல் ஒருஹைக்கூ மின்னலடித்து மறைந்துபோனது எனக்கு.

எனக்கு முன் அந்தப்பெண் மும்முரமாக வேலைசெய்துகொண்டிரந்தாள்.குளிர்மையான இளப்பச்சைநிறத்தில் மேல்சட்டையுடன் கழுத்தோரம் சிறிதுவிலகி வெண்பழுப்புத்தோள்கள் தெரிந்தன.கழுத்தின் அசைவுளில் விலகிய தலைமயிரின் அசைவுகளில் வெட்டிவெட்டி மின்னிய வெண்நிறம் கண்ணைபறித்தது.நளினமாக அசைந்துகொண்டிருந்த விரல்களுடன் கண்கள் கணனித்திரையை மேய்ந்துகொண்டிருந்தன.தெலைதூரத்து நெல்வயல்களின்
நடுவேநிமிர்ந்து நிற்கும் ஒற்றைத்தென்னைமரம்போல சோகமாக கம்பீரமாக தெரிந்தாள்.கண்ணைத்திருப்புவதற்கு கடினமாகஇருந்தது.
முந்திய நாள் டிசைன்பண்ணிய கிளையன்ரின் டேட்டாபேசை சேவருக்கு அப்லோட் பண்ணியாக வேண்டும்.ஒரு அனுமதிமின்னஞ்சலை அமரிக்காவுக்கு சுட்டு விட்டு சுகமாக உட்கார்ந்திருந்தேன்.நிச்சயமாகத்தெரியும் அடுத்த இரண்டுமணிக்கு எந்த வேலையுமே எனக்கு கிடையாது.சோம்பலுடன் இணையத்தில் தமிழ் பக்கங்களை கூகிள் பண்ணிக்கொண்டும் மைக்றொசொவ்ட்டில் Nலைகிடைப்பதாய் பகல் கனவுகண்டுகொண்டுமிருந்தேன்.கறுப்பு பூசிய கண்ணாடி ஜன்னலுக்குவெளியே பதினொருமணிவெய்யில் சாம்பல் பூசியதுமாதிரி சோம்பலாகத் தெரிந்தது.கணனிகளின் விசிறிச்சத்தம் மட்டும் மெதுவாகக்காதைக்குடைகிறது.கணினித்திரைகளை வெறித்துப்பார்த்தபடி சுற்றிலும் மனிதர்கள்.யாரோ அவர்களை பயப்படுத்தி உட்காரவைத்ததுபோல வெறித்தகண்களுடன்உட்கார்ந்திருக்கிறார்கள்.ம்..ம்..பதினொருமணிவெய்யில் என்னுடைய பனித்துளிகள் எல்லாம் காய்ந்து போயிருக்கும்.
கணினித்திரைநடுங்கத்தொடங்கியது.கைத்தெலைபேசியைப்பார்த்தேன்.யாழ்பாணத்துநம்பர்.அம்மாவாத்தான் இருக்கும்.அம்மாதான்.சுற்றிலும் மனிதர்களை வைத்துக்கொண்டு போனில் பேசுவது எப்போதுமே எனக்கு பிடிக்காது.உண்மையில் சரியாக போன்பேசுவது ஒரு திறமை.எனக்கு கண்ணாமூச்சிகாட்டும் விஷயங்களில் இதுவும் ஒன்று.ஒன்று அதிகம் பேசுவேன்.இல்லாவிட்டால் பேசாமல்கேட்டுக்கொண்டிருப்பேன்.அம்மாவின் அழைப்புக்கள் பெரும்பாலும் எப்பொழுதும் ஒரேமாதிரியே தொடங்கம்.”தம்பி எப்படி இருக்கிறாய்..நீங்கள்சொல்லுங்கோ..நாங்கள் இருக்கிறமப்பு..சாப்பிட்டியே..இப்படித்தான் ஆரம்பிக்கும்.பொதுவாக எப்பொழுதும் முதலாவது கேள்வி சாப்பிட்டியா..என்பதாகத்தான் இருக்கும்.என்னுடைய பசியையெல்லாம் தான் அனுபவிப்பள் போல பலநாள் தண்ணிர்தாகம் தொண்டையை அடைப்பதுபோல கரகரக்கும் அம்மாவின் குரல் தெலைபேசிக்குள் ஒலிக்கும்.தொலைசியூடாக என்னை தழுவமுனைவது போல இயல்பான அம்மாவின் பேச்சு.இன்னும் ஏதாவது பேசிக்கொண்டே இருங்கோம்மா..என்று மனதுக்குள் சொலலிக்கொள்ளுவேன்.
குளிர்கால மார்களி.அமைதியான ஆறுமணி விடியற்காலை..ஊமையான ஒலிபெருக்கியுடன் மருதடிப்பிள்ளயாரின் பச்சைக்குளத்துக்கு முன்னால்தென்னோலை வேய்ந்த வீட்டில் புறாக்களின் சடசடப்பு.பனிக்குளிரில் துயிலெளும்பும் 1998 யாழ்பாணம்.
அம்மாவின் குரல் இவற்றையெல்லாம் தன்னுடன் கொண்டுவந்தது.காலமைமுதல் உள்ளுக்குள் பினைந்துகொண்டிருந்து வெறுமையும் ஏக்கமும் கண்முன்னே உருகி காணாமல்போவது போல உற்சாகமாக உணர்ந்தேன்.ஈரமும் பசுமையமான என்னுடைய வாழ்க்கை இன்னமும் எஞ்சியிருக்கிறது.அன்பும் அக்கறையுமான மனிதர்களுடன் சேர்ந்த என்னுடைய எனக்கே சொந்தமான வாழ்கையைஅந்தச்சில நிமிடங்களில்; அம்மாவின் ஆழ்ந்த கரகரப்பான குரல் எனக்கு நினைவுபடுத்திவிட்டுப்போனது.

அமரிக்காவிலிருந்து பதில் மின்னஞ்சல் வந்திருந்தது.றாகா.கொம்மில் இளையராஜாவைத்தேடிப்பிடித்து ஹெட்போனை மாட்டிக்கொண்டேன்.உயர்சாதி ஸ்ரீரியோ ஹெட்போனிலிருந்து“ஜனனி ஜனனி ஜகம்நீ அகம் நீ” பாட்டு சிலிர்த்து உதிர்ந்தது.மனதுக்குள் சந்தோஷமாக… இளம்பெண்ணின் குளிர்ந்த மெல்லிய விரல்கள் தலையின்முன்மயிரை கோதிவிடுவது போல உணர்ந்தேன்.அலுவலகமே வெளிச்சமாக சந்தொஷமாக மாறிவிட்டது போல.பக்கத்து மொனிட்டரில் தலையைப்புதைத்துக்கொண்டிருந்த அந்தப்பெண் என்னைப்பார்த்து
மெதுவாகச்சிரிந்தாள்.இரவில் நிலவின் மங்கிய வெளிச்சத்தில் வல்லை வெளியில் பரந்துகிடக்கும் காட்டுப்புற்களின் வாசம் போல இதமான மென்மையான மனதைத்தொடும் சிரிப்பு.

சசி.கிருஷ்ணமூர்த்தி சேரன்
மென்பொருள் வடிவமைப்பாளர்

Saturday, September 30, 2006

ஜென்மங்கள் தோறும் தோடரும்...


அந்திவானம் மஞ்சள் வயிற்றுடன்!
இறந்துகொண்டிருக்கும் சூரியனுடன்
நிறமிழக்கும் பச்சைப்புல்வெளி
முடிவருடும் குளிர்காற்றுஉடல்குளிர்ந்து இமைமூடவைக்கும்
தொலைவில்
வெள்ளையாய் மௌனமாய்
முகில் சூழ்ந்த மலைவிளிம்புகள்-எல்லை கட்டி
பண்டைய எச்சங்களின் இரகசியங்களை
பாறையிடுக்குகளில் புதைத்துக்கொண்டு
அடக்கமாய் அமைதியாய்

சேரநாட்டு அரண்னைகளில்;
அந்திநேரக் கேளிக்கைகளின் ஆரம்பநேரம்
இன்றும்
காதோரம் உரசிச்செல்லும்
துந்துபி நாதங்களில்முற்பிறப்பு ஞாபகங்களின்
கறுப்புவெள்ளை அசைவுகள்.
அடிமனதில் அமிழ்ந்து கிடக்கும்
மெல்லிய கவலைகளின்சிலிர்ப்பு

வானம் தெலைந்துகொண்டிருக்கிறது
நீலமாய் அருகிலிருந்து
கறுப்பாய் விரிந்து..
மன்மினிப்பொத்தல்களுடன்நிறமிழந்து.
நாற்புறம் சூளும்கருப்பின் படையெடுப்பு
இருளின்கண்கள்திறக்கின்றது.
எல்லாத்திக்கிலும்கறுப்புத்தெளிக்கும் இருள்.
கறுப்பே இருளாய்
இருளே எல்லாமுமாய்


சேரநாட்டு அரண்மனைச்சுவர்கள்
இருளின் பகைகள்
நிலவின் ஒளியுறிஞ்சும்
தண்ணொளி இருள்விரட்டும்
மையிருட்டில்
தெலைவெளிகளைக் கடந்து
ஒளிரும் அரண்மனை- இருள்வெல்லும்
இரவிலும் நடக்கும் சேரன் ஆட்சி

விணையொலியின் அதிர்வில்
இலைவிரிக்கும் புல்
நந்தவனப்பாதைகளில்
அரண்களின்இடுக்குளில்.
சலங்கையொலிகளில்பலம் பெற்ற- சேரநாட்டு
அந்தப்புரத் தூண்களுடன்தேவதைகளின் இருப்பு
பனிநீர் நிரம்பும் வாவிகளில்
உடல் களுவும் ஆடையற்ற தேவதைகளின்
சிரிப்பின் சிந்து
துள்ளிவிளும் மீன்களின்
நீர்ச்சலசலப்புடன்காற்றில் கரையும்
தடாகங்களின் தங்கப்படிகளின்கரையோரம் மிதக்கும்
சிலநூறு பூக்களின்தேன்கலந்த குளத்து நீர்
சேரன் காவலில் பயம்மறந்து
நிச்சலனமாய்குறும்புசெய்யும்
வெண்துகில்தேவதைகளின்
இருப்பால் உயிர்கொண்ட உலகம்


ஒலம் நிறைந்த இடத்தில்
விலகிநிற்கும் புல்வெளி
நிசப்த்தமாய் காற்றை மட்டும்வரவேற்கும் விந்தை
மலையுச்சிகளில் மட்டும் மிஞ்சிநிற்கும்
ஒளியின் மிச்சங்கள்.
மலையின் கீழ்
பீடபுமியில்
காட்டில் புகும் மந்தைகளின் நிழலுருவங்கள்
ஏதோ ஒன்று உயிர்பெறப்போவதானஉணர்வு
நெற்றியில் வெடிக்கிறது.
காலின் கிழ் விரிந்துகிடக்கும்உலகத்தின் எல்லைகள்
உச்சியில் நான்மட்டும்
முற்பிறப்புநினைவிலும் புற்களின் நடுவிலும்
தொண்டை கிழிக்கும் ஒலியால்
மலைகளை தகர்க்கவேண்டும் போலமதர்ப்பு
காலின் கீழ்த்தூசியாககிடக்கும்உலகத்தை
இமைகளை இடுக்கிப்பார்கிறேன்.
என்றோ ஒருநாள்
சேரநாட்டுமக்களின்வாழ்விடமாக இருந்ததை.
சேரமன்னனின்
ரதங்கள் சென்ற பாதையின்தடங்கள்-இங்குதான்
எங்கோ அருகேஇருந்தது.
ஆக அதிககாலமில்லை
கீழ்க்காட்டில் குத்திட்டுவிழும்
கழுகின் சத்தம்!
பட்டமரங்களுக்கூடேஅதிர்ந்து செல்கிறது.
புதியசேரமன்னன் வரவுடன்

-சேரன் கிருஷ்

Sunday, March 26, 2006

பிடித்த கவிதை

சிகரங்களைத்தெடுவதல்ல
எங்கள் நோக்கம்
அடுத்தவன் பாதங்கள்
பணியாதிருப்பதும்
அவன் வாயுபறியும் போது
ஆனந்தமே என்று அள்ளிப்பருகாதிருப்பதுமே
எங்கள் பாதை
நான் இரவுகளின் அரசன்


நான் இரவுகளின் அரசன்
இரவுகள் என்னுடயவைஎனக்கு மட்டும்
இரவு. . .
சொல்லுக்குள்ளேயேநிசப்தமும் அமைதியும்நின்மதியும்
ஒளிந்திருக்கிறதோஎன்னமோ....!!
இரவுகளை -நான்இழப்பதேயில்லை
அனுபவித்துக்கொண்டேயிருக்கிறேன.;
காலடி ஒசைகள்தேய்ந்து கொண்டேபோகிறதுமெதுவாக....
கவனத்தைக்கலைக்காமல்தெருக்களில்வாகனங்கள்ஒன்றோ இரண்டோ
மணிக்கொன்றோ....
மணிக்கூட்டுச்சத்தம்ஸ்வரம்கூடிக்கொண்டேபோகிறது.
காற்று எங்கிருந்தோஇதமாக
ஜேர்மன் தேசத்துகவிதைகளைசுமந்கொண்டு
தங்கமும் பச்சையுமான
அல்ப்ஸ்மலைப் பூக்களின்தேன்வாசம்
இரவுகள்போதையூட்டுகின்றன..
இரவுகளின்அரசன் நான்-அவை
என்னைப்புரிந்து கொள்கின்றன.
பணிந்துபோகின்றன.
ஆனால்
எனது இரவுகள்கடனாளிகள்
எவ்வளவு வாங்கிவிட்டன!!
எனது கவிதைகளை கதைகளைசில நேரம்
எனது கண்ணீரையும் கூட..எனது கோபத்தையும் புலம்பல்களையும் வாய்திறவாமல் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
உதவமுடிவதில்லை அவற்ரால்
என்னை இறுகத்தளுவிக்கொள்வதைத்தவிர
இரவுகள்அம்மாவைப்போலசாந்தமானவை
எல்லாவற்றையும்தனக்குள்ளே புதைத்துக்கொள்ளும்
ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் சில நேரம்
என்னுடன் மட்டும்!!
மாசிமாத இரவுகள் எனதுகாதலிகள்
உறங்கவிடுவதில்லை என்னை
தலைகோதும் இரவுகளின்.......
பூவாசம் வீசும்- குளிர்ந்தகைகளுக்குள்
நான்தொலைந்து போகிறேன்
அவற்றின் கறுப்பானஇளமார்புச்சூட்டிலிருந்துமீளமுடிவதில்லை என்னால்
நிர்மலமான தெளிந்த அவற்றின்கண்களில்
எனது அசைவுகளின்அபினயங்களை என்னால் பார்க்கமுடியும்.
மௌனமான இரவுகளின்துகில்அசைவுகளில்
எனது உணர்வுகளின் பாதிப்பை-என்னால்உணரமுடியும்.
எனது நண்பர்கள் எனது காதலி அன்பான எல்லோரிடமும்
எனதுஇரவுகளின் முகங்கள்தடயங்களாக அமைதியாகப்படிந்திருக்கிறதுஎன்னால் தவிரபிறரால் கவனிக்கப்படாமலே!நான் இரவுகளின் அரசன்.

-சேரன்கிருஷ்
Loops solutions - Social media marketing in Sri lanka