Monday, October 19, 2009

சேர்ப்பவன்இளநீலம் பச்சை

இருள்கறுப்பு

கடல்நுரையின் வெண்மை


வண்ணங்கள் என்னை இழுக்கின்றன.

அவன் முணுமுணுத்தான்.


இவ்வண்ணக்கலப்புடன்

இணைந்து அதிரும் மென் டிஜிட்டல்

இசையில்

உலகின் உச்சசோகத்தை

உருவாக்க முடியும் என்று சொன்னான்


அடிவானத்தில் சேருவதாய்த்தெரியும்

தண்டவாளக்கோடுகளைநோக்கி

நம்பிக்கையுடன் நடக்கும்

குழந்தையின் ஏமாற்றத்தையும்

ஆர் ரகுமானின் காதல் தோல்வியையும்

தூரத்தில் தனிமையில் இசைக்கும்

சாகிர்உசைனின் ஒற்றைத் தபேலாவையும்

சேர்த்துக்கொள்

யோசனை சொன்னேன்.

நன்றியுடன் ஏற்றுக்கொண்டான்.

கைக்காய்ப்புக்களைத்தடவிப்பார்க்கும்

முதிர்ந்த உழைப்பாளியின்

இயலாமை..

முதிர்கன்னியின் பெருமூச்சுடன் கலந்த

இளவயதுக் காதல் நினைவுகள்

மகனின் சின்னவயதுக்குறும்புகளை

அவனுக்கே சொல்லும்

ஞாபகம்தொலைத்த முதிய தாய்..

விடியும் நேரம் மங்கத்தொடங்கும்

குருட்டுத்தெருவிளக்கு..


இன்னும் வேண்டும் சோகம் என்றான்.


அப்பிடியானால் சரி

ஊரடங்கிய யாழ்ப்பாணத்தின் பின்னிரவுகளில்

வைமன்வீதியால் ஊர்ந்துபோகும் -ஒற்றை

மோட்டார்வண்டியின் சத்தத்தையும்

சேர்த்துக்கொள்

நான் விலகிநடந்தேன்.-சேரன்கிருஷ்

Sunday, October 04, 2009

செவிட்டுப் பீத்தோவன்
உள்ளம் நிறைந்த காதல்
கிடக்கிறது என்னுள்ளே..
பெண்ணே
சொன்னால்
நம்பமாட்டாய் நீ
என்றும் காதலிக்கப்படாத
என்னுள்
உள்ளம் நிறைந்த காதல் கிடக்கிறது.


நடு இரவில் தூரத்தில் கேட்கும்
பென்சு+ரியின் கனமான நாதமாக
அதிகாலையில் கேட்கும்
இளையராஜாவின் குரலாக
ஏதோ புனிதமாக மனதைக்கனமாக்கும்
தூய்மையுடன்
என்னுள் அது கிடக்கிறது.


அழகிய பெண்ணுக்கு
ஆம்பிளைப்பெயர் மாதிரி
எனக்குப்பொருத்தமில்லாமல்
கடல்போல ஆனால்
ஆர்g;பரிக்காத அமைதியான
காதல்
கொட்டிக் கிடக்கிறது என்னுள்ளே.

சிங்காரப்பெண்களின்
இடைவளைத்து
வலிக்கப்புணர்ந்தபின்
அவள் தலைமயிர்கோதும்
அந்தச்சின்ன நிமிடங்களில்
எந்த வேசியும் அதைக்கண்டுவிடுறாள்.
அவளுக்குள்ளும் ஏதோ ஒரு விகிதத்தில்
அப்படிக்காதல் கிடக்கலாம்.
நள்ளிரவில்
களைத்துக்கிடக்கும்
அவள் சுவாசச்சத்jj;தை இமைகொட்டாமல்
உற்றுக்கேட்டவாறு எனது
ஏமாற்றங்களை சீரணித்துக்கொள்கிறேன்.


இசையின் ஏற்ற இறக்கங்களில்
மறைந்துகிடக்கும்
மனதை அலைக்கழிக்கும் வலிமையுடைய
காதல்
எனக்குள் ஒழுகிக்கொண்டே இருக்கிறது.
Ng];fpw;uhwpd; me;j kaf;Fk; mjpu;it vdf;Fs;
gug;gpf;nfhz;Nl
ஒருவருக்கும் கொடுக்கப்படாமல்
அது பெருகிக்கோண்டே இருக்கிறது.
எனக்குத்தெரிகிறது
அது என்னை விளுங்கிவிடும்.

அது
என்னை எதையோ தேடவைக்கிறது.
செய்வினைசெய்ததுமாதிரி
கூலாகூப்ஆடும் ஒல்லிச்சிறுமியின்
மேலேசொருகிக்கொள்ளும்
சாம்பல் விழிகள் போல்
துடித்தவாறு என்னைத்தேடவைக்கிறது.
உச்சமடையும்
கிழட்டுப் பெண்பூனையின் கதறல்போல
மூலைமுடுக்கெல்லாம் பட்டு
முழங்கும் எதிரொலியாய்
ஓயாமல் என்னை அலைக்கழிக்கிறது.


இது ஒரு உணர்வு.
எந்தப்பெண்ணுக்கும்
அதைநான்கொடுக்கமுடியும்.
உண்மைதான் உனக்கு மட்டும்சொல்கிறேன்.
ஆவளின் நன்றிப்பார்வையிலும்
rpன்ன இதழ்முத்தத்திலும்
பல லட்சமாக
பெருகியல்லவா விடுகிறது அது.

என்னசெய்வேன் நான்
உள்ளம் நிறையப்பொங்கும்
காதலை வைத்துக்கொண்டு.
வெற்றுச்சொற்கள் கவிதையாகும்
பனிப்பூக்கள் உதிரும் ஒற்றையடிப்பாதையின்
இளங்காற்று வீசும் அதிகாலைத்தருணங்களில் இருக்கும் காதலை
உனக்கு விளங்கவைப்பதில்
நான் தோற்றுப்போனேன்.


இது பெருகிக்கொண்டே இருக்கிறது
என்னுள்ளே.
என்னை சீரஞ்சீவியாக்குவதற்கு
செவிட்டுப்பீத்தோவன் போல.

Loops solutions - Social media marketing in Sri lanka