Thursday, December 01, 2011

நந்திதா

குளிர், கூதல்..
தோலைத் தடவும் இதமான வெப்பம்
மங்கல் மெளுகுதிரிகள்

மனதைத்தின்றுவிட்டுப்போன
ஒரு முன்னிரவில்
என்மனைவிக்கு "நந்திதா"
என்று பெயரிட்டேன்.

பெண்உடலின் குழைவோ
நெடுநேரம் கண்களைப் பார்த்திருந்து
திடீரென வெடித்து வெளிப்பட்ட புன்னைகiயின் அழகோ
ஓன்றும் சொல்லவேண்டாம் என்றெனது வாய்மூடும்போது பட்ட
கையின் மென்ஸ்பரிசமோ
பெண்களுக்கே ஒரிய என்னமோ ஒன்று
உச்சமான
அவளுக்குள் வெளிந்தெரிந்த அந்தநேரம்
ஏனோ அந்தப்பெயர்
மனதில் வந்துவிட்டுப்போனது.

நந்திதா என்ற அழகி
கெஞ்ச நேரம் என் கைகளுக்குள்
ஒடுங்கியிருந்தாள்..

எனது மகளுக்கு வைத்துவிடு
இந்தப்பெயரை...
"எனதுபொக்கிஷங்களெல்லாம்
அவளுக்காகவே சேர்க்கிறேன்"

மார்பிலிருந்து
தலைநிமிர்த்தி என்னைப்பார்த்தபடி
சொன்னாள்.
Loops solutions - Social media marketing in Sri lanka