இறங்கினேன்
களைப்பாய் இருந்தது.
வெள்ளவத்தைச்சந்தி என்றும் போல்
விறுவிறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.
கையைஇறுக்கிய முழுக்கைச்சட்டையை
பிடுங்கி எறியவேண்டும் போல்
உடம்பெல்லாம்
வியர்வைப்பிசுபிசுப்பு
டிங் டிங்..
டிங் டிங்..
யாருமில்லையோ?
மாற்றுத்திறப்பைக் கண் தேடியது.
பூச்சாடியின் பின்னா.. மீட்டர்பொக்சுக்குள்ளா?
காலறுறைகள்
உள்வெளிமாறி
புகுந்துகொண்டன காலணிக்குள்.
நேர்த்தியாக இருந்தன
சூ றக்குக்குள் அடுக்கிய
காலணிகள் இரண்டும்.
வெள்ளிக்கிழமை என்ன?
சாம்பிராணிமணம் கேட்டது.
காலணிக்குகைக்குள் இருந்து
சூடாய் சாதுவன ஈரமாய்
வெளிவந்த கால்கள்
குளிர்ந்த மாபிள்தரையை
ஒத்திக்கொண்டன.
முகத்தை நிமிர்த்தி
எதிர்கொண்டேன்
குழாயில் இருந்துகொட்டும்
பூநீர்த்துவாலையை.
காதோரம் சூடாய்ப்பாய்ந்து
குளிராய் இறங்கியது கீழே.
கண்களைத்திறந்து நீர்வாங்கி
களைப்புத்தொலைத்தேன்.
சவர்ஜெல்லின் பூச்சில்
அழுக்கெறிந்து மீண்டது உடல்
மின்விசிறியின் கீழ்
வெள்ளைத்துவாயின் ஒத்தடத்தில்
சிலிர்த்துப்போய்
ஆப்டர்சேவின் கொஞ்சத்தை
இரண்டு கையிடுக்கிலும் தெளித்துக்கொண்டேன்.
உள்ளாடையில்லாமல்
நீலடெனிம்.
அயன்பண்ணாமல் மொடமொடவென
ஏன் துவைத்தாய் என்று
அடம்பண்ணியது.
கையில்;லாத வெள்ளை பெனியன்
யார்வரப்போகிறார்கள் இந்தநேரம்.
கட்டிலில் தாவியவுடன்
கைதுழாவும் றிமோட்.
கால்மேல் மடிந்து எறியது
மறுகால்.
கோலங்களா..கலசமா?
வாசலில்கேட்டது
செருப்பின் சரசரப்பு.
கையில் மரக்கறிக்கூடையுடன்
தலைஅறைக்குள் நீண்டது.
கண்ணைக்கூசிச்சிரிப்புடன்
கைகளை இடுப்பில் ஊன்றி
ஒருபார்வை.
பின்னேரம் முழகியிருந்தாள்.
இன்னும் ஈரமான தலையிலிருந்து
ஷம்பூ மணம் இழுத்தது.
வுpரித்திருந்த தலையிலிருந்து
நீர்பரவி
ஈரமாயிருந்த இளநீலச்சருகைச்
சுடிதார்.
சின்னிவிரலின் துணையுடன்
ஸ்டைலான சின்னத்திருநீற்றுப்பூச்சு.
என்ன பாக்கிறாய்?
சிரித்தபடிகேட்டாள்.
பதிலின்றி
சுட்டுவிரல் மட்டும் ஆடி
அருகே அழைத்தது.
என்ன?
சிணுங்கி வந்தது குரல்.
மீண்டும் சுட்டுவிரல்.
ஆ இப்பசொல்லு என்ன?
கைகளைக்கோர்த்து மெதுவாக
அருகேயிருந்தாள்.
தலையைக்கோதியது மறுகை.
கண்களுக்கு குறுக்கால் அசைந்துசெல்லும்
கைகளில் கோர்த்த காப்புக்கள்.
அப்படியே இழுத்து
நெங்சில் சரித்துக்கொண்டேன்.
மார்புகுழைய என்னுள் ஒடுங்கிக்கொண்டாள்.
முதுகுதடவிய கையைக்கோர்த்து
கண்களுக்குள் பார்த்துக்கொண்டாள்.
எனக்காகப் பார்த்துக்கொண்டிருந்தியா?
சக்திரீவி ஓடிக்கொண்டிருந்தது.
புர் புர்ரென் போனில் நீயூஸ் அலேட்கள்.
நின்மதியாகச்சொல்லிக்கொண்டேன்
நாளைக்குச்சனிக்கிழமை.
-(தனிமையில்)சேரன்கிருஷ்
8 comments:
என்ன ராசா ரொம்ப பீல் பண்ணிறியோ….. என்ன செய்யிறது வேலைக்கு போயிட்டு வந்ததும் இப்பிடியெல்லாம் நடக்க வேண்டும் எண்டு எனக்கும் ஆசைதான்…. அதுக்கு இன்னும் வழியைத்தான் காணேல்ல…… நல்ல பீல் பண்ணிறா…. வாழ்த்துக்கள். நல்லது நடக்கவும், எதிர்பார்ப்பது கிட்டவும்.
//////நின்மதியாகச்சொல்லிக்கொண்டேன்
நாளைக்குச்சனிக்கிழமை.////
சனிக்கிழமை லீவோ??????? நல்ல பிளானெல்லாம் போட்டிருக்கிறாய்…. எப்பிடி இதெல்லாம் உனக்கு மட்டும் வருது……இது ரொம்ப நல்லாயிருக்கு………
//எப்பிடி இதெல்லாம் உனக்கு மட்டும் வருது//
இதுல உள்குத்தொண்டும் இல்லையே..
////இதுல உள்குத்தொண்டும் இல்லையே..////
ஒரு உள் கூத்தும் இல்ல…. ஆனா என்னவோ இருக்கு
நல்ல கவிதை நண்பரே!
ஆனால் இவ்வளவு நீளமான கவிதைகளை சிரத்தை எடுத்து வாசிக்கும் பொறுமை நம் மக்களிடம் குறைந்து விட்டது இப்போது.
கொஞ்சம் குறைத்தால் இன்னும் மெருகேரும்
Sorry for writing in English :)
//நல்ல கவிதை நண்பரே!
Thank you. we can see a lot of poetic happenings in our daily live.If you want to put that out in words you have to write a bit longer.Otherwise simply you can't express the actuality
ya i agree...
வணக்கம் நண்பரே
இலங்கையிலிருந்து வலைப் பதிவு செய்யும் தங்களை கொழும்பு வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாத இறுதியில் நடாத்த திட்டமிட்டுள்ளோம், தங்களின் வருகை மற்றும் ஏனைய விமர்சனங்கள் கருத்துக்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ(vanthidevan@gmail.com) அல்லது புல்லட்டின் மின்னஞ்சலுக்கோ (bullettheblogger@gmail.com) தெரிவிக்கவும்.
நன்றி
அன்புடன்
வந்தியத்தேவன்
Post a Comment