Saturday, August 15, 2009

வெள்ளவத்தை கடற்கரையும் அவசரப்பட்ட காதலர்களும்

மேல்பொத்தான்திறந்த மேல்சட்டையின் ஒரு கையில்புகுந்து மறுகையல் வந்தது காற்று.காலிவீதியிலேயே கடற்கரையின் உப்புக்காத்து மணம் கசிந்துகொண்டிருந்தது. வெள்ளவத்தை காலி கலர்லைட்டில் நண்பர் பிரசாத்திற்காக பார்த்துக்கொண்டிருந்தேன். புளுக்கடித்ததுபோல திடீரென ஒரு கடற்கரைப்பயணத்திற்கு ஆசைவந்தது.நீச்சலுக்குபுறப்பட்டுக்கொண்டிருந்த நண்பர் பிரசாத்தை மறித்து கடற்கரைபோக ஆயத்தமானோம்.


புpரசாத் தன்னுடைய கமராவையும் தன்னுடன் கொண்டுவந்தார்.நெடுகிலும் பயன்படுத்தும் ஸ்ரேசன் வீதியைத்தவிர்த்து மனிங்பிளேஸ_க்கு முன்னால் உள்ள வீதியால் கடற்கரையைநோக்கி நடைபோட்டோம்.ஐந்தரை மணிவெய்யில் கணகணப்பாக இருந்தது.உச்சவெம்மையிலிருந்து தணிந்து கொண்டிருக்கும் தருணம் உலகம் இளமாலைப்பொழுதில் மினிங்கிக்கொண்டிருந்தது.கடற்கரையெங்கும் தண்டவாளத்திற்கு இந்தப்பக்கமாக நெடுகிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் வந்த சுற்றுலாப்பயணிகளில் கடைசித்தரிப்பைப்போல இருந்தது. ஆங்கேயும் இங்கேயும் பட்டங்கள் பறக்க கலகலப்பாக இருந்தது கடற்கரை.

rரி இந்த அருமையான மாலைப்பொழுதை நண்பர் பிரவீன் இழக்கக்கூடாது என்ற நல்லெண்zj;தில் அவரையும் தெலைபேசியில் அழைத்தால் பிரவீன் பின்னேரம் உண்ட மயக்கமும் உறங்கிய மயக்கமும் தெளியாத நிலையில் தொலைபேசியில் தூங்கிவிழுந்தார்.சரி இவர்வந்தால் கடற்கரையில் குப்பறப்படுத்தாலும் படுத்துவிடுவார் என்று பயந்து தெலைபேசியைத்துண்டித்துவிட்டு நடையைத்தொடர்ந்தோம். வேள்ளவத்தை கடற்கரை புதுமையானது.அதில் நீங்கள் ஓடிவிளையாட முடியாது.ஆனால் ஒளிந்து விளையாடலாம்.(படத்தை பாருங்கள் புரியும்.(பதிவர் மருதமூரான் இங்குதான் வீட்டுப்பாடம் செய்வதாகச்சொல்கிறார்கள்). அதையும் விட அடித்துப்பிடித்து விளையாடலாம்.தண்டவாளத்தில் கும்பலாக கும்மியடிப்பவர்கள் ரெயின் வந்ததும் இந்த விளையாட்டை விளையாடுவார்கள்.

அப்படியே நடந்துபோனால் நண்டுக்கும் கடல்அலைக்கும் நடக்கும் யுத்தத்தை பார்கலாம்.என்ன நீங்கள் கால்சட்டையை சுருட்டிவிட்டு வளுக்கும் பாறைகளில் பல்லை பந்தயம் வைத்து இறங்கவேண்டும். இடைக்கிடை நீங்கள் வித்தியாசமான ஆமைகளைப்பார்க்கலாம்.இந்த ஆமைகள் குடைகளுக்குள் குந்தியிருக்கும்.டெனிமும் பஞ்சாபிக்கால்களும் சிலவேளைகளில் வெளியே தெரியலாம்.பாறைகளில் பாiறைகளாய் ஒட்டியிருக்கும் இந்த ஆமைகள் சிலநேரம் வினோதமான சத்தங்களை எழுப்பும்.’ம்ம்ம்… ஸ்ஸ்..’. நீங்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளவே கூடாது.அப்படி நீங்கள் அடக்கமுடியாத ஆமைரசிகரா,அப்படியானல் ஆமைகளை ரசிப்பதற்கு சில தந்திரங்கள் இருக்கின்றன. சன்ரீவி பார்ப்பதுமாதிரி அதைப்பார்க்கக்கூடாது.ஆமைகள் இன்னமும் தங்களை உள்ளே இழுத்துவிடும்.குடைஓட்டுக்குள் தங்களை ஒளித்துக்கொள்ளும்.சக்திரீவி பார்ப்பதுமாதிரி பார்த்தால் உங்கள் கண்ணுக்கு ஏதாவது சிக்கலாம்.அப்படியும் முடியவில்லையா.கவலையைவிடுங்கள் கடற்கரையெல்லாம் இந்த ஆமைகள்தான்.போறவழியெல்லாம் பார்த்துக்கொண்டே போகலாம்.

கடல்அரிப்பைத்தடுப்பதற்கு போடப்பட்டிருகும் பாறைகள் பிரமாண்டமாக வழியெல்லாம் கருமையாக விளிம்புகட்டியிருக்கும்.அலைஅடிக்கும் போது நீல அலை வெள்ளைப்பாலாக இந்த பாறைகளுக்கிடையே வழிகிறது.கடற்கரைமுடியும் இடத்தில் ஏதோ ஒரு ஜப்பானிய தன்னார்வத்தொண்டுநிறுவனம் அருமையாக சீமெந்து பெஞ்சுகளையும் சிறுவர் விளையாடும் வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.இலக்கியச்சந்திப்புகளுக்கு அருமையான இடம் இது.கையில் கால்ஸ்பேக்குடன் கடற்கரையில் கவிதைபேசும் காலம்பற்றி நாங்கள் நீண்டநேரம் உரையாடினோம்.கடற்கரையில் இருந்து ஒரு நூறுமீற்றர்களுக்கப்பால் நிரைத்துச்செல்லும் கப்பல்கள் மினுங்கியபடி எங்களுக்கு துணைநின்றன.






இருளிலும் ஒளிரும் பட்டம்

தண்டவாளத்தில் வளர்ந்த வெள்ளைப்பூக்கள்

கடற்கரையை அண்மித்துள்ள தொடர்மாடிகளில் ஒன்று




வீ வோன்ற் றிவென்ஜ்ஜூ

றயிலுக்கு டாட்டா..




அவசரப்பட்ட காதலர்கள்
அவசரப்பட்ட காதலர்கள்






காதலர்கள் ?? சந்திக்கும் தாளைமரத்து குகைமறைவு
பதிவர் சந்திப்புக்கு லொக்கேஷன் பார்க்கப்படுகிறது


ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடிநிற்கும் கொக்கு


அலையுடன் சண்டையிடும் நண்டு




பாறையுடன் மோதி பாலாய் வழியும் அலைகள்












4 comments:

maruthamooran said...

/////சரி இந்த அருமையான மாலைப்பொழுதை நண்பர் பிரவீன் இழக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவரையும் தெலைபேசியில் அழைத்தால் பிரவீன் பின்னேரம் உண்ட மயக்கமும் உறங்கிய மயக்கமும் தெளியாத நிலையில் தொலைபேசியில் தூங்கிவிழுந்தார்/////

என்னுடைய வாழ்நாளில் (விபரம் தெரிந்த நாள் முதல்) பகலில் தூங்கிய நாட்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அதற்கு காரணம் பகலில் எனக்கு தூக்கம் வருவதில்லை. மச்சி நீ குறிப்பிட்ட தினத்தில் எங்களுடைய பகுதியில் மின்தடை. இதனால் விகடனைப் புரட்விக்கொண்டு சோபா செற்றியில் சாய்ந்த எனக்கு 2 மணித்தியாலத் தூக்கம் ஆட்க்கொண்டது. தூக்கத்திலிருந்து மீண்ட என்னைப் பார்க்க ஏதோ மாதிரியாக எனக்கே இருந்தது. அதுதான் உங்களுடன் வர முடியவில்லை.

அதுசரி மச்சி..... அந்த ‘ஆமை’ விடயங்களை யாழிலிருந்து கொழும்புக்கு வந்த புதிதில் காலிமுகத் திடலில் நண்பர்களுடன் அதிகளவில் பார்த்துள்ளேன். (அது பார்ப்பதற்காகவே சென்ற தருணங்களும் உண்டு)..... நாளாக நாளாக அது பெரிதாகத் தெரிவதில்லை.

மச்சி..... உனக்கு ஆமைகளாக மாறிய அனுபவம் உண்டோ? அதையும் எழுதியிருக்கலாமே... படங்கள் அருமை.... பாதுகாத்து வைத்துக்கொள் எதிர்காலத்தில் மிக உச்ச பயனைக்பெற முடியும்.

மகேஷ் பிரசாத் ஏன் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கிறார்.... அவரும் ஆமையைப் பார்த்து ஆதங்கப்பட்டுட்டாரோ???????? முயற்சி செய்ய சொல் சாத்தியப்படும். (எனக்கு சில உண்மைகள் தெரியும்)

வந்தியத்தேவன் said...

சேரன் நேற்றுப் பின்னேரம் நானும் வெள்ளவத்தையில் தான் நின்றேன்(கடற்கரையில் அல்ல) எனக்கும் ஒரு தகவல் தந்திருக்கலாம். ஆமாம் அவசரப்பட்ட காதலர்கள் போட்டோவில் காதலர்கள் எங்கே?

ம்ம்ம் நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ஹிஹிஹி

cherankrish said...

//ம்ம்ம் நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்க//

சேச்சே.. அது நான் இல்லை வந்தி. அதுவும் கடற்கரையிலேயா..

ம.கஜதீபன் said...

மணியா இருக்கு பதிவு!

Loops solutions - Social media marketing in Sri lanka