பேடட் டெனிம்தானே
துவைப்பதே இல்லை ஒன்றிரண்டுவாரம்
இழுத்துவிட்ட தலையை
ஆங்கங்கே கலைத்துவிட்டுப்
சரியாக அரும்பாத தாடியில்
பிரஞ்சுவைக்கும் ஆசையோட
மாயப்பிரம்மாபோல்
விரல்சுத்தும் கொப்பியுடன்
மியூசிக்கென்றும் மொசாட்டென்றும் பேஸ்கிற்றார் என்றும்
கஸ்டப்பட்டுக்கேக்கும் ஹிப்ஹொப்பென்றும்
நோமலாகத்தான் இருந்தான்.
இன்றும் இருந்து அழித்தேன் ஹிஸ்ட்டிரியில்
போர்ன் யுஅர்எல் கள்.
நான் பரிசாகக்கொடுத்த
பிரஞ்சுமொழிபெயர்ப்புகள்
தேத்தண்ணிக்கோப்பையின் வட்டத்தளும்புடன்
சரியாக அடுக்காமல் அறைமுழுதும் சிதறி..
மெத்தையில்
கவிண்டு கிடந்த டெனிஸ்ஷ_வும் கிரிக்கட்பெட்டுமாக
அவன் உலகம்
சரியாகத்தான் இருந்தது.
மறக்காமல் அலுமாரிக்குக்கீழ் தள்ளிவைத்தேன்
சிகரட்டுக்கட்டைகளை.
ஆவன்குடித்தால் என்ன
அம்மா பாவம்.
-சேரன்கிருஷ்