Sunday, January 03, 2010

தம்பி


பேடட் டெனிம்தானே

துவைப்பதே இல்லை ஒன்றிரண்டுவாரம்

இழுத்துவிட்ட தலையை

ஆங்கங்கே கலைத்துவிட்டுப்

சரியாக அரும்பாத தாடியில்

பிரஞ்சுவைக்கும் ஆசையோட

மாயப்பிரம்மாபோல்

விரல்சுத்தும் கொப்பியுடன்

மியூசிக்கென்றும் மொசாட்டென்றும் பேஸ்கிற்றார் என்றும்

கஸ்டப்பட்டுக்கேக்கும் ஹிப்ஹொப்பென்றும்

நோமலாகத்தான் இருந்தான்.

இன்றும் இருந்து அழித்தேன் ஹிஸ்ட்டிரியில்

போர்ன் யுஅர்எல் கள்.

நான் பரிசாகக்கொடுத்த

பிரஞ்சுமொழிபெயர்ப்புகள்

தேத்தண்ணிக்கோப்பையின் வட்டத்தளும்புடன்

சரியாக அடுக்காமல் அறைமுழுதும் சிதறி..

மெத்தையில்

கவிண்டு கிடந்த டெனிஸ்ஷ_வும் கிரிக்கட்பெட்டுமாக

அவன் உலகம்

சரியாகத்தான் இருந்தது.

மறக்காமல் அலுமாரிக்குக்கீழ் தள்ளிவைத்தேன்

சிகரட்டுக்கட்டைகளை.

ஆவன்குடித்தால் என்ன

அம்மா பாவம்.

-சேரன்கிருஷ்

5 comments:

tharshayene said...

அருமையான கவிதை நடை. கவிதையின் முழு வரிகளும் பிடித்தமாயிருக்கிறது....!

maruthamooran said...

பல தம்பிமார்கள் கண்முன் வருகிறார்கள். என் அண்ணக்களுக்கு நானும் தம்பிதானே.

cherankrish said...

Thanks friends tharshayene,Maruthamooran.

//மருதமூரான்
எல்லாரும் அந்த வயது கடந்துதானே வரவேண்டும்.

தர்ஷாயணி
மூன்று நான்கு நாட்களுக்கு முன் உங்களது காகங்கள் கதை படித்தேன். கதையின் முடிவு தலைக்குள் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது அடுத்த நாளும்.
நன்றாக வருவீர்கள். தொடர்ந்து வாசிக்கிறேன்

இலங்கன் said...

அண்ணா உறுத்துது........
நன்றாக படம் பிடிக்கிறீர்கள்..

கிருத்திகன் said...

பாத்துண்ணே கிறுக்குப்பயல் கெட்டுப்போயிரப்போறான் உங்களைப்போல :)

Loops solutions - Social media marketing in Sri lanka