Thursday, February 09, 2012

வெள்ளிக்கிழமை



கண்களைச்சொறிந்துகொண்டு
இறங்கினேன்
களைப்பாய் இருந்தது.
வெள்ளவத்தைச்சந்தி என்றும் போல்
விறுவிறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.
கையைஇறுக்கிய முழுக்கைச்சட்டையை
பிடுங்கி எறியவேண்டும் போல்
உடம்பெல்லாம்
வியர்வைப்பிசுபிசுப்பு

டிங் டிங்..
டிங் டிங்..
யாருமில்லையோ?
மாற்றுத்திறப்பைக் கண் தேடியது.
பூச்சாடியின் பின்னா.. மீட்டர்பொக்சுக்குள்ளா?

காலறுறைகள்
உள்வெளிமாறி
புகுந்துகொண்டன காலணிக்குள்.
நேர்த்தியாக இருந்தன
சூ றக்குக்குள் அடுக்கிய
காலணிகள் இரண்டும்.

வெள்ளிக்கிழமை என்ன?
சாம்பிராணிமணம் கேட்டது.
காலணிக்குகைக்குள் இருந்து
சூடாய் சாதுவன ஈரமாய்
வெளிவந்த கால்கள்
குளிர்ந்த மாபிள்தரையை
ஒத்திக்கொண்டன.


முகத்தை நிமிர்த்தி
எதிர்கொண்டேன்
குழாயில் இருந்துகொட்டும்
பூநீர்த்துவாலையை.
காதோரம் சூடாய்ப்பாய்ந்து
குளிராய் இறங்கியது கீழே.
கண்களைத்திறந்து நீர்வாங்கி
களைப்புத்தொலைத்தேன்.
சவர்ஜெல்லின் பூச்சில்
அழுக்கெறிந்து மீண்டது உடல்


மின்விசிறியின் கீழ்
வெள்ளைத்துவாயின் ஒத்தடத்தில்
சிலிர்த்துப்போய்
ஆப்டர்சேவின் கொஞ்சத்தை
இரண்டு கையிடுக்கிலும் தெளித்துக்கொண்டேன்.

உள்ளாடையில்லாமல்
நீலடெனிம்.
அயன்பண்ணாமல் மொடமொடவென
ஏன் துவைத்தாய் என்று
அடம்பண்ணியது.
கையில்;லாத வெள்ளை பெனியன்
யார்வரப்போகிறார்கள் இந்தநேரம்.

கட்டிலில் தாவியவுடன்
கைதுழாவும் றிமோட்.
கால்மேல் மடிந்து எறியது
மறுகால்.
கோலங்களா..கலசமா?


வாசலில்கேட்டது
செருப்பின் சரசரப்பு.
கையில் மரக்கறிக்கூடையுடன்
தலைஅறைக்குள் நீண்டது.
கண்ணைக்கூசிச்சிரிப்புடன்
கைகளை இடுப்பில் ஊன்றி
ஒருபார்வை.
பின்னேரம் முழகியிருந்தாள்.
இன்னும் ஈரமான தலையிலிருந்து
ஷம்பூ மணம் இழுத்தது.
வுpரித்திருந்த தலையிலிருந்து
நீர்பரவி
ஈரமாயிருந்த இளநீலச்சருகைச்
சுடிதார்.
சின்னிவிரலின் துணையுடன்
ஸ்டைலான சின்னத்திருநீற்றுப்பூச்சு.


என்ன பாக்கிறாய்?
சிரித்தபடிகேட்டாள்.
பதிலின்றி
சுட்டுவிரல் மட்டும் ஆடி
அருகே அழைத்தது.
என்ன?
சிணுங்கி வந்தது குரல்.
மீண்டும் சுட்டுவிரல்.

ஆ இப்பசொல்லு என்ன?
கைகளைக்கோர்த்து மெதுவாக
அருகேயிருந்தாள்.
தலையைக்கோதியது மறுகை.
கண்களுக்கு குறுக்கால் அசைந்துசெல்லும்
கைகளில் கோர்த்த காப்புக்கள்.
அப்படியே இழுத்து
நெங்சில் சரித்துக்கொண்டேன்.
மார்புகுழைய என்னுள் ஒடுங்கிக்கொண்டாள்.
முதுகுதடவிய கையைக்கோர்த்து
கண்களுக்குள் பார்த்துக்கொண்டாள்.
எனக்காகப் பார்த்துக்கொண்டிருந்தியா?
சக்திரீவி ஓடிக்கொண்டிருந்தது.
புர் புர்ரென் போனில் நீயூஸ் அலேட்கள்.
நின்மதியாகச்சொல்லிக்கொண்டேன்
நாளைக்குச்சனிக்கிழமை.

-(தனிமையில்)சேரன்கிருஷ்
Loops solutions - Social media marketing in Sri lanka