Saturday, May 02, 2009

சிங்களவர்கள் எனது நண்பர்கள்

எனது அலுவலகத்தில் எனது சிங்களநண்பன் ஒருவனின் ஸ்கைப் புரொபைலில் 'றிபியூட் அவர் வொறியர்ஸ' என்றிருந்தது.
அவனை நேரில் சந்திக்கும் போது இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.கிளிநொச்சியை கைப்பற்றியதற்காக அவர்ளுக்கு கொடுக்கும் மரியாதை என்று சொன்னான்.

அப்ப கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் செத்த பொதுச்சனத்திற்கும் சேர்த்துத்தானா இதைப்போட்டிருக்கிறாய் என்று கேட்டேன்.அவனது கோபத்தை கிளறவும் ஆரோக்கிய மான விவாதம் ஒன்றைத்தொடங்குவதுமே எனது நோக்கமாக இருந்தது."இந்தக் குரும்பட்டி பிளேன் சுத்தினதுக்கே நீங்கள் எப்படிஎல்லாம் பயந்தநீங்கள்...வன்னியில் இருப்பதுவும் மனிதர்கள்தானே அவர்களுக்கு மிக்கும் சுப்பர்சொனிக்கம் சுத்துவதும் மல்ரிபரல் மழைபொழிவதும் பயத்தை உண்டாக்காதா?அக்வாவும் அண்ணாவும் தனக்கு முன்னால் பிணங்களாக விழுவதும் தந்தை தாய் துண்டுகளாக்கப்படுவதும் எப்படிச்சீரணித்துக்கொள்ள முடியும் என்று கேட்டேன்.

. பயங்கரவாதம் நீங்கள் சொல்லும் புலிகளிடம் மட்டுமில்லை என்பது உனக்குப்புரியவில்லையா என்று கேட்டேன்.அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதென்பது நல்லது தான் ஆனால் அதற்காக அரசாங்கம் மிகஅவசரப்படுவதாகத்தெரிகிறது என்று சொன்னான்.இப்பொழுதும் உண்மையாகவே அரசாங்கம் பாதுகாப்பு வலையங்கள் மீது குண்டு போடுகிறதா என்று அப்பாவியாக்கேட்டான்.

சிங்களவர்கள் உண்மையான சுபாவம் பழிவாங்குவதோ இனத்துவேசம் பாராட்டுவதோ இல்லை.சிங்களவர்கள் ஆதிகாலம் தொட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.அவர்களுக்கும் வேறு நாட்டவர்களுக்குமான பூர்வீகத்தொடர்புகள் குறைவாக இருந்தன.நான் அறிந்த மட்டில் சிங்களமொழியும் மாலைதீவில் வழக்கில் இருக்கும் மொழியும் மட்டுமே கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன.யாழ்;பாணத்தமிழர்களைப்போல இந்திய தமிழ் ப்புத்தகங்களை வாசிக்கும் பாக்கியமோ அல்லது பண்டைய கலாச்சாரத்தொடர்புளை இலக்கியங்களை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறாதவர்களாகவே இருந்தார்கள்.

வெளியுலகுடனான அவர்களது தொடர்புகள் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களைப்போலல்லாது மிகவும் குறுகியதாகக்காணப்பட்டது.சிங்களவர்கள் கடல்கடந்து போனதாகவோ வியாபாரங்களில் ஈடுபட்டதாகவோ சரித்திரங்கள் குறைவே.அதே போல்தான்
அரசதொடர்புகளும் காணப்பட்டன.

குவைநி பாண்டிநாட்டு இளவரசன் மற்றும் புத்தமதபரவல் பிக்குணி சங்கமித்தை வரவு என்பன இங்கு விதிவிலக்குகளாகும்.இந்தச்சிங்கள மக்களின் உலகஞானமில்லாப்போக்கினைத்தான் யாழ்பாபணத்து மேட்டுக்குடியினரால் 'மோட்டுச்சிங்களவன் என்றும் இளநிவெட்டி என்றும்" இகழ்ச்சியாகப்பேசப்பட்டன.ஆனால் சிங்களமக்கள் தங்களுக்கான எல்லாவற்றையும் தாங்களே வளர்த்துக்கொண்டார்கள்.

கலைகள் உணவுகள் பண்டிககைள் எல்லாம் சிங்களவர்களுக்கே தனித்துவமானதாக இருந்தது.சிங்கள சினிமாத்துறைகூட இன்னமும் வளர்சியடையாததாகவும் இந்தி ஆங்கில படங்களின் பிரதிபலிப்புகளுடனும் தான் வருகின்றன.காமத்தை தூண்டும் காட்சிகள் சிங்கள சினிமாவில் சர்வசாதாரணம்.பெயர்சொல்லக்கூடிய சிங்களபடங்கதை;தவிர மற்றெல்லாம் குப்பையென்றே ஒதுக்கத்தகும்.சிங்கள சினிமாத்துறைமட்டும் இன்னமும் குறைவளர்சியடைந்ததாகவே காணப்படுகிறது.

சிங்களப்பெண்களும் மிகவும் மகிழ்ச்சி விரும்பிகள்.திருமணத்திற்கு முன் காதலிப்பது உடலுறவு கொள்ளவதென்பது சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.பெண்காதலிப்பதும் தனக்கான ஆணைத்தெரிந்து கொள்வதும் சிங்களசமூகத்தில் சாதாரணம்.இந்த மகிழி;ச்சி விரும்பும் தன்மையால் சிங்கள சமூகத்தில் பல இனங்களின் கலப்பு தென்டுகின்றது.

சிங்களவர்கள் பெரும்பாலும்; வறியவர்கள்.சிறு சிறு வியாபாரங்களில் மாத்திரம் ஈடுபடுபவர்கள். பெரும்பாலும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிங்களமக்களும் சிங்கள அரசியல் கட்சிகளால் கொம்புசீவிவிடப்பட்டவர்களும் மாத்திரமே.இவர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு முழுச்சிங்களவர்களையும் இனத்துவேசம் பட்டம் கட்டுவது வைக்கோ போன்ற சைக்கோக்களுக்குதான் ஏற்புடையது.சிங்கள மக்களிடையே நம்பிக்கை என்பது மிகவும் குறைவு.ஒரு மனிதனை முழுதாக நம்ப மாட்டார்கள்.வீடுகளை எப்போழுதும் பூட்டியேவைத்திருப்பார்கள்.மிகவேடிக்கை என்னவென்றால் யாழ்பாணத்தில் இருந்து வந்து சிங்கள மக்கள் நிறைந்து கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுடைய வீடு எந்நேரமும் திறந்திருக்கும் ஆனால் தலைமுறை தலைமுறையாக அப்பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்களின் வீடுகள் சாத்திய கதவுகளுடனே காணப்படும்.வேலை இடங்களில் சிங்கள மக்கள் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை.மச்சாங்(தமிழில் மச்சான்) என்று மற்றவரை அழைத்துக்கொள்ளுவார்கள்.

ஒரு கடந்த பத்து ஆண்டுகளில் சிங்களவர்கள் அடைந்த முன்னேற்றம் நாலுகால் பாச்சல் என்றே சொல்லவேண்டும்.இன்று கொழும்பில் தொழில் நுட்பத்திலும் சரி பட்டப்படிப்புகளிலும் சரி சிங்களமக்களின் வளர்சி அளப்பரியது.அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்படமையும் வெளியுலகத்தொடர்புகளும் மற்றும் வடஇந்திய கலாச்சாரத்தை பின்பற்றத்தொடங்கியமையுமே காரணமாகும்.

இன்று நடக்கும் யுத்தம் தமிழர்களைப்போலவே கொழும்பில் படித்த சிங்களவர்களாலும் விசனத்துடனே பார்க்ப்படுகிறது.யுத்தவெற்றிகள் புதிதாக சிங்களமக்களிடையே போலியான நாட்டுப்பற்றொன்னினை திட்டமிட்டு வளர்து வருவதுபோல் தெரிகிறது.தமிழர்களைப்போலல்லாது படித்த சிங்கள மக்கள் கருத்துக்களைக்கேட்பதிலும் மற்றவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் அகன்ற பார்வை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சின்ன உதாரணம்..

"மட்டக்களப்பில் ஒரு சிங்கள போலிஸ் அதிகாரி துப்பாக்கி முனையில் தாயை சமையல்அறையில் அடைத்து வைத்துவிட்டு மகளை பாலியல் பலாத்காரம் செய்தான்".இதை கேள்விப்பட்டது முதல் எனக்கு வேலையில் கவனம் செய்யவில்லை.இவ்வளவு யுத்தங்களுக்குபிறகும் உயி;ர் உடைமை இழப்புகளுக்கு பிறகும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமானால் இதற்கு முடிவுதான் என்ன.. என்னுடன் வேலைசெய்யும் சிங்கள இளைஞனிடம் எனது அங்கலாய்பைச்சொன்னேன்.என்னிடம் மட்டும் துப்பாக்கியிருந்தால் முதல்வேலை அவனை சுடுவதாகத்தான் இருக்கும் என்று வார்த்தைகளைக்கொட்டினேன்.

அவன் சொன்னான் இதை தமிழ் சிங்கள யுத்தமாக பார்க்காதே.இது மனித குலத்துக்கு எதிரான குற்றம்.
அதை முதலில் உணர்ந்துகொள்.இதை அரசாங்கம் மறைக்க முயலுமானால் மக்களுக்கிடையே அரசாங்கத்தைப்பற்றிய நம்பிக்கை அற்றுப்போகிறது.அதுவும் இது ஒரு குறித்த சிறுபான்மையினத்துக்கு நடக்கும் போது அரசாங்கத்தின் பாராமுகத்தால் அவர்கள் அதற்கான நீதியை பிறவளிகளில் தேடவெளிக்கிடுவார்கள்.அவ்வாறு தேடும் கூட்டத்திற்கு ஒரு தவறான கூட்டம் வழிகாட்டுமானால் ஆயிரமென்ன லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் நடக்கத்தான் செய்யும்.இவை முழுநாடும் சேர்ந்து எதிர்த்தழிக்க வேண்டிய செயற்பாடாகும்.
அவன்சொன்ன தெளிவையும் குரலின் உறுதியையும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை . .எங்களுடைய மாமன் மச்சான் சித்தப்பா சேர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள் அதற்கான சுவடுகளே தெரியாமல் அழித்தொழிக்படத்தான் போகிறதா அவ்வளவு உயிர்களும் விழலுக்கு இறைத்த
நீரா..



15 comments:

வெத்து வேட்டு said...

you are going to be labeled as another anti-tamil
post something to praise ltte :)

cherankrish said...

I hope so. coz most of the people who are trying to show them as 'Jaffna tamil lovers' are horses with eye guard.no words to say then.. :(. Thanks for the comment dude.

Anonymous said...

how much you got from Mahinda?

Anonymous said...

மகிந்தவின் சூத்து நக்கிகள் எல்லாம் பதிவெளுதினால் இப்படித்தான்

cherankrish said...

Bloggers!! do not reply to above kind of comments please.See .. the level of Lanka tamil lovers... :(

Anonymous said...

your profile shows a Tharanga-Sinhala Buddhist Female from kegalle too. Which one is you?

By the way, Some of the things that you have said aboutn Sinhala people are very true. Their culture is nothing less to any other culture. Some Tamils should be ashamed of themselves to call Sinhala as moodu sinhala. That calling is purely racist like you say,as "'Jaffna tamil lovers' are horses with eye guard."

However you have forget two points here.

1. Tamils haven't got the chances that Sinhala get to leap in technology at this point. Look around you

2. Did All what you said about Sinhala change anything where we are at?


வெத்துவேட்டு has his own Indian Agenda. Pinch his Proud Indian brown ass, you will find his oozing racism :)

Anonymous said...

இதுவரை பெரும்பாலும் தமிழ் இனவாதவெறி கக்கும் பதிவுகளையே இங்கே படித்து கொண்டிருந்த எங்களுக்கு உங்கள் பதிவு மிகவும் வித்தியாசமாக இருந்தது. பாராட்டுக்கள்.

Anonymous said...

தமிழர் கொலை செய்யப்படுகின்றார்கள் என்ரால் இனவாதம் கக்குதல்

இந்தியாவிலே தமிழர்களின் குரல் கேட்காவிட்டாலும் பரவாயில்லை. இந்தியா என்றால் போதும் என்பது தேன் போல வித்தியாசமான இனிப்பு செய்தி

cherankrish said...

//Did All what you said about Sinhala change anything where we are at

None.But i simply couldn't be mute while all the people shouting like 'All the Sinhalese are racist'.

A little incident i wanted to point out is ' ,here in colombo people were trying to collect some dry foods like biscuits and water battles from people to send that to vanni.you don't believe, two ore three Muslim people and one or two Tamils gave the donation.But most of the donation they got from Sinhalese.All the offices and companies ,they are collecting funds to help these people.Even though GOV has hide all of their week points from the public.

I wanted to publish the real face of Sinhalese which has been misunderstood by our people all the time

Anonymous said...

மனித நேயம் வலியுறுத்தும் நல்ல பதிவு.

சிங்களர்களில் மட்டுமல்லாது எல்லா இனங்களிலும் தீவிரவாதிகளும் உண்டு நல்லவர்களும் உண்டு.

கன்னடரை பற்றி முடிந்த அளவு துவேசம் பரப்புகிறார்கள் தமிழக திராவிட கண்மணிகள்.ஆனால், ஒரு கன்னடர் புலிகளுக்கு ஆதரவாக எடுத்த படத்தை பிரபாகரனே பாராட்டியுள்ளார்.

சிங்களவர் ஈழவர் ஒற்றுமை எனில் தமிழகத்தில் புலிகளை ஆதரிக்கும் சீமான், வைகோ இவர்கட்கு கசக்கத்தான் செய்யும். இதை நம்பித்தானே இவர்கள் பிழைப்பே இருக்கிறது.உம்மை தமிழ் துரோகி எனத் தூற்றத்தான் செய்வர்.

maheshpirassath said...

well said cherankrish. i agree with you. the sinhales are not enemy for tamils. Power loving peoples only created the cirsis between tamils and sinhales

Gobi said...

தம்பி சேரா !!

உன்னுடைய தமிழ் வீரம் எனக்கு நன்றாக தெரியும் !
கல்லூரியில் தமிழ் வகுப்பு நடக்கும்போது அதை வெளிநடப்பு செய்வதையே
வழக்கமாக கொண்டிருந்தாலும் , எமது தமிழ் மக்கள் அங்கே செத்து மடிகின்ற போது அதனை ஒருபோதும் தட்டி கேட்காமல் இருக்கபோவதில்லை.

இன்று மேற்க்கத்தைய உலகுகள் தீவிரவாதம் பற்றி பல நல்ல கருத்துக்களை கூறுகின்றன ஆனால், அந்த தீவிரவாதத்தையும் விடுதலை போராட்டத்தையும் பிரித்து பார்க்க தவறிவிட்டன என்பதுதான் எனது ஆதங்கம்.

இன்று உலகமெங்கும் எமது மக்கள் ஓர் குரலாய் ஒலிப்பது கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைய முடிகிறது. இந்த ஒற்றுமை எமது உலக தமிழ் மக்கள் அனைவருக்குமான சுதந்திர காற்றை அனுபவிக்கின்ற ஒரு சொந்த பூமியை அடையும் வரையிலும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பது எம் எல்லோரினதும் அவாவும் ஆசையும் கூட.

ஆகவே , என் அன்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே, நாம் உலகில் எந்த மூளையில் இருந்தாலும் இந்த மனித பேரவலத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முழு முயற்சியுடன் செய்வோம் என்று கூறி உங்களிடம் இருந்து விடைபெற்று கொள்கிறேன்.


உன் அன்பன்
கோபி

cherankrish said...

அண்ணா கோபி..
"எல்லாத்திலும்" நீ தான் எங்கள் வழிகாட்டி.. ஆனால் பார் இந்த இரண்டு விசயங்ளை நீ கவனத்தில் எடுக்கவேண்டும்.
ஒன்று நான் இன்னமும் கொழும்பில் தான் இருக்கிறேன்.. இரண்டாவது உலகநாடுகள் பிறடிக்குள் கண்ணை வைத்துக்கொண்டு திரியவில்லை.

சபைக்கூச்சம் கொஞ்சமும் இல்லாத உனது மேடைப்பேச்சின் ரசிகர்கள் நாங்கள்.ஒரு தமிழ் வலைப்பூவை திறந்து உனது கருத்தை சொல்லலாமே..
எல்லோருக்கும் அதைக்கேட்கும் "பாக்கியம"; கிடைக்கட்டும்

Gobi said...

அன்பிற்குரிய என் இனிய தமிழ் உள்ளங்களே !

உங்கள் அனைவரதும் சிறந்த ஆற்றல்கள் கண்டு உள்ளம் மகிழ கூடியதாய் உள்ளது.
நம் தமிழின வரலாற்றில் என்றுமே இல்லாத ஓர் ஒற்றுமையை இன்று நம் தமிழர்களிடையே காணமுடிகிறது .
எனது நண்பி ஒருவர் கேட்ட கேள்வி நினைவிற்கு வருகிறது ,

" 10 ஆண்டுகள் போராடி 3000 உயிர்களை இழந்த கொசோவோ இன்று தனிநாடு. ஆனால் அரை நூற்றாண்டுப் போர். இலட்சம் உயிர்களை இழந்த ஒரு நாட்டை தனி நாடு என அங்கீகரிக்க ஏன் தயக்கம் ?? "

ஆம் இது ஒரு நல்ல கேள்வி ,
கொசோவோ , தமிழீழம் என்கின்றன இரண்டு தேசத்தினதும் போராட்டங்களில் சில ஒற்றுமையும் பல வேற்றுமைகளும் கண்கூடாக புரிகிறது.
அனால் அங்கே அல்பாநியனுக்கு ஓர் சுதந்திர தேசம் கிடைக்கப்பெற்றது என்றால் நம் தமிழனுக்கு ஓர் தனித் தேசம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . ஐக்கிய நாடுகள் சபை நம்மை அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . நம்மிடையே பல கருத்துக்கள் இருந்தாலும் ஓர் தீர்வு கிடைக்கும் வரை , சமாதான பூமி கிடைக்கும்வரை எல்லோரும் ஒன்றிணைந்து நம்மால் முடிந்த ஆதரவை அளிப்போம் .

உங்கள் அன்பன்
கோபி

Anonymous said...

கோபி..
கோசாவாவில் தன்னிப்படுகொலைகளும் சொந்தமக்களிடமே கப்பம் வாங்குவதும் தன்னிலும் சிறுபான்மையினத்தை நாட்டைவிட்டுத்துரத்துவதும் அதுவும் ஐநூறுருபா பணத்துடன் மட்டும்"
பள்ளிவாசல்களில் கொலைநடனம் புரிவதும் தன்மக்களையே உணவுஉடையில்லாமல் பிச்சைக்காரர்களாக மனிதக்கேடயங்களாகப்பயன்படுத்துவதும் தலைவர் சுவிமிங்பூள்கட்டிப்புரள்வதும் நடக்கவில்லையே அய்யா..

Loops solutions - Social media marketing in Sri lanka