Tuesday, May 12, 2009

இது ஒரு வெண்பாவாக்கும்- தளைதட்டினால் சொல்லுங்கோ

பேதமையும் கூனும் குமிழ்முலையுஞ் சீரல்ல
வாட்க்கூர்க் கவிவாய்கொள் வஞ்சியர்க்கு
சீலம் குழையும் சிறுதட் குவழைமலர்
கண்ணினெழிலோ அழகல்ல -பொன்
முத்துதிர்த்தே செப்பும் பழமிள காய்ப்
பழிக்கும் இதழ்கூ டழகல்ல
பாவையர்க்கு பார்வியக்கும் மேதமைப் பட்டறிவின்
மேற் படிப்பறிவே மேல்.



Attach your blog with http://www.yaaldevi.com/ and share it with friends by SMS.

5 comments:

சவுக்கடி said...

வெண்பா அன்று.
புதுப்பா என்று சொல்லுங்கள்!

பேதைமை
வாட்கூர்
குவளைமலர்
மேதைமை
- இவையே சரியான சொல் வடிவங்கள்.

சவுக்கடி said...

வெண்பா அன்று.
புதுப்பா என்று சொல்லுங்கள்!

பேதைமை
வாட்கூர்
குவளைமலர்
மேதைமை
- இவையே சரியான சொல் வடிவங்கள்.

cherankrish said...

பேதமையும் கூனும் குமிழ்முலையுஞ் சீரல்ல

வாட்க்கூர்க் கவிவாய்கொள் வஞ்சியர்க்கு

சீலம் குழையும் சிறுதட் குவழைமலர்

கண்ணினெழிலோ அழகல்ல -பொன்

முத்துதிர்த்தே செப்பும் பழமிள காய்ப்

பழிக்கும் இதழ்கூ டழகல்ல

பாவையர்க்கு பார்வியக்கும் மேதமைப் பட்டறிவின்

மேற் படிப்பறிவே மேல்.

Now tell.blogger sucked the format i post earlier.Assume i didnt take care about 'ADDI'(eeradi etc..).Please suggest.

சவுக்கடி said...

ஐயா,
வணக்கம்.
உங்கள் ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் நெஞ்சார்ந்த நன்றி!
பாராட்டுகள்!

இரண்டடி வெண்பா -குறள் வெண்பா மூன்றடி " -சிந்தியல்வெண்பா
நான்கடி " - வெண்பா
(நேரிசை, இன்னிசை முதலிய)
ஐந்த டியிலிருந்து பன்னிரண்டடிவரை பஃறொடை வெண்பா.

சீர், தளை சரியாக அமைந்திருப்பின் உங்கள் பா பஃறொடை வெண்பாவாக அமைந்திருக்கும்.

நான்காம் அடி இறுதிச்சீரும் (பொன்), ஐந்தாம் அடி இறுதிச்சீரும் (காய்ப்) ஈற்றடியின் முதற்சீரும் (மேற்) ஓரசைச் சீராக அமைந்துள்ளன.

வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீர் மட்டுமே ஓரசைச் சீராக வரும்.

பொதுவாக, ஈற்றடி தவிர பிற அடிகளில் நான்கு சீர் இடம் பெறும்.

இங்கு, ஆறாம் அடி முச்சீரடியாக அமைந்துள்ளமை நோக்குக.

அதனாற்றான் 'புதுப்பா' எனலாம் என்று குறிப்பிட்டேன்.

குறைகூறும் எண்ணம் இல்லை. பொறுத்தாற்ற வேண்டுகிறேன்.
அன்பன்,
சவுக்கடி.

cherankrish said...

//உங்கள் ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் நெஞ்சார்ந்த நன்றி!

இதைப்படிக்கும் போது எனக்கு வெக்கமாக இருந்தது.ஆர்வம் இருந்தாலும் நுனிப்புல்மேயும் போக்கே இந்தத்தவறுகளுக்கு காரணம்.

குறையிருத்தல் குற்றமல்ல
குற்றம்
குறைகண்டும் அதைக்
களையாதிருத்தல்-
நண்பா சவுக்கடி
நன்றி உனக்கு
(this is not a venpah anyway)
மீண்டும் வெண்பா எழுதும் முயற்சி தொடரும் :) தயவுசெய்து பஞ்சியைப்பாரக்காமல் வந்து திருத்திவிட்டுச்செல்லவும்.உங்களது வலைப்பூவை ஒழித்து வைத்திருப்பது ஏன்?

Loops solutions - Social media marketing in Sri lanka