Monday, September 07, 2009

“கலாங்” கும் காயத்ரி மந்திரமும்





“கலாங்” கும் காயத்ரி மந்திரமும் உலகத்தில் இருப்பது ஒரே ஒரு இந்தியாதான் ஆனால் லிட்டில் இந்தியாக்கள் பல இருக்கின்றன.சிங்கப்பூரில் ஒரு லிட்டில் இந்தயா மலேசியாவில் ஒரு லிட்டில் இந்தியா தாய்லாந்தில் ஒரு லிட்டில் இந்தியா.இந்தியர்களுடனும் நகைக்கடைகளுடனும் தெருவில் வெற்றிலைத்துப்பல்களுடனும் மற்றும் பல சிறப்பம்சங்களும் இவற்றுடன் இருக்கும்.சிங்கப்பூரின் அந்த இரண்டு ராட்சதக்கட்டடங்களுக்கு நடுவே இருந்த குட்டித்திடலில் சீமெந்து பெஞ்சில் இருந்தவாறு ஸ_க்…ஸ_க் என்னும் கார்களைப்பாரத்துக்கொண்டிருந்தபோது மணி இரவு ஒண்டு இருபது.ரோட்டைக்கடந்து எதிரே இருக்கும் சாப்பாட்டுக்கடையில் இந்நேரமும் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.சாய்ந்து உட்காரந்து தெருவைப்பார்த்து சோம்பிப்போனேன்.ஒன்றின்பின் ஒன்றாய் தொடராய் வந்தது கொட்டாவி. சீமெந்து பெஞ்சில் இருந்து இறங்கி சிக்னலில் நிற்கும் வாகனங்களை அவசரமாகப்பார்த்துக்கொண்டு தெருவைக்கடந்து போய் கரும்புச்சாறுபானம் ஒரு டின் வாங்கிக்கொண்டேன். ஒரு சிங்கப்பூர் டொலர்.எழுபத்தைந்து ருபாய்.


இங்கேயே டின்னை உடைப்பதா என்று சின்ன மனப்போராட்டம். கடையின் ஒரு மூலையில் பிளாஸ்ரிக்கதிரையில் ஆடாமல் இமைவெட்டுவது தெரியாமல் வெள்ளைப்பேய்போல அமர்ந்திருந்தான் ஒரு தாய்லாந்துக்காரன்.சிகரெட்டுக்கைமட்டும் உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தது.புகைத்தல் தவம் செய்துகொண்டிருந்தான்.தெற்கே தொடங்கும் தெருவில் உயரமான வெள்ளைக்காறி கொறவொறவென சூட்கேசை இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.கருப்புக்குட்டைப்பாவாடை அவளது நடைக்கேற்ப துள்ளித்துள்ளி விலக என்னைப்பார் என்றன மெல்லிய வழுவழுத்த கால்கள்.கரும்புப்பானத்தைச்சுமந்துகொண்டு எனது திடலுக்குத்திரும்பினேன்.


இரண்டு ஆணாய்ப்பிறந்து பெண்ணாய் மாறிய வேசிகள் செயற்கை முலைகள் இரண்டும் முள்ளாய்க்குத்த சோம்பல் முறித்தார்கள்.எனது அருமையான சீமேந்துபெஞ்சு பறிபோய்விட்டிருந்தது.அழகாக சுருக்கமில்லாமல் விரித்திருந்த புல்தரையில் பதிபோட்டுக்கொண்டேன்.எனது நண்பன் வரும் வழியைத்தான்;காணவில்லை.


அடோய்.. நேரத்தை வீணாக்கிப்போட்டாய்..
இருந்த இருப்பில் கழுத்தைமட்டும் திருப்பினேன் அவன்தான்.

இப்பத்தான் வாறியோ..நாயே..

டேய் இதில குந்திக்கொண்டு இருந்த நேரத்துக்கு பின்னுக்குத்திரும்பிக் கேட்டுப்பாத்திருக்கலாமே..சும்மா தானே இருக்குறாளுகள்.

ஏன்னெண்டு அவ்வளவு உறுதியா ‘அவள்’ தான் என்டு சொல்லுறாய் மச்சான்.குரல் எஸ் பி.பிக்கு தொண்ட அடைச்சதுபொலயெல்லொ இருக்கு.தயிரெடுக்க கையைவிட்டு மத்து வந்துதெண்டா?அது சரி இப்ப எங்க போறம்?

நண்பன் அடக்கமுடியாமல் பெரிதாகச்சிரித்தான்.வேசிகள் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு தங்கள் கதையைத்தொடர்ந்தார்கள்.

புண்.... நாளைக்கு புதவருசத்தை வைத்துக்கொண்டு இண்டைக்கு எங்க போறம் எண்டு கேக்கிறாய். இங்க கொழும்பு கிளப்பெண்டே ஒண்டு இருக்கு.கிழடுகள் தான் நிண்டு ஆடிக்கொண்டிருக்குங்கள்.எண்டாலும் பரவாயில்லை.போவம் வா.. அங்க போனாப்பிறகு யோசிப்பம் பிறகு எங்க போறதெண்டு.

எனது நெட்டை நண்பன் போய்க்கொண்டிருந்தான்.அந்த நடுச்சாமத்திலும் முஸ்தப்பாவின் முன்பக்கத்தில் றோட்டைக்கடந்துகொண்டிருந்த இரண்டு கைலாசபிள்ளையாரடி பொடியங்கள் கையாட்டினார்கள்.”என்ன இந்தநேரம்” என்ற குரல்களை வாகனங்கள் நசுக்கிக்கொண்டு சென்றன.

குறுக்கு வீதியைக்கடந்து பழசுபட்டுக்கிடந்த ஒரு தொழிற்சாலையின் பின்புறமாக நாங்கள் விரைந்து நடந்தோம்.எனது இடதுகைப்பக்கத்தில் மி;ன்னிக்கொண்டிருந்தது சிங்கப்பூரின் என்றும் உறங்காத துறைமுகம்.சுறுசுறுப்பான சிங்கப்பூர்.பெரிய மைதானத்தில் சிறிதாக இருந்தது அந்த கொழும்பு கிளப்.மைதானத்தில் அங்காங்கே கடதாசிகள் காற்றில் பறந்தன.பகல்நடந்த களியாட்டத்தின் தடங்கள்.

என்ன சாப்பிடுறாய்….

ஏதாவது கொத்துறொட்டி கிடைக்குமா? ஒரு குளிர்ந்த பீருடன்.

சப்தமில்லாமல் கொத்துறொட்டியை சாப்பிடத்தொடங்கினேன். இசைக்குளு மேலைத்தேய இசையைப்பொழிந்து தள்ளிக்கொண்டிருந்தது.குடும்பமாக வந்திருந்த ஒரு தாய் தன் மகளுக்கு மேலைத்தேய நடனத்தை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.மங்கிய வெளிச்சத்தில் கண்ணைக்கூர்ந்து பாரத்தால் சாம்பல்நிறமாக நெடுந்தூரம் பரவிக்கிடந்தது மைதானம்.அப்பால் வானுயர்ந்த கட்டடங்கள் விளக்குகளால் செய்யப்பட்டிருந்தன.இசைபொழிந்து கொண்டிருந்தது.என் நெட்டை நண்பன் பூல் விளையாடிக்கொண்டிருந்தான்.

ஏதிரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவருக்கு மன்னிக்கும் புன்னகைசெய்து விட்டு மெதுவாக எழுந்தேன்.விளையாடிக்கொண்டிருந்த நெட்டை நண்பனைப் பார்த்தேன்.புரிந்துகொண்ட நெட்டை நண்பன் கையைஆட்டியவாறு பூல் மேசையில்இருந்து விலகி என்னை நோக்கி வந்தான்.களுவும் அறையில் ஐந்து நிமிடங்களைக்கொன்றபின் பின்கதவால் வெளியேறினோம். சிங்கப்பூரின் கொழும்புக்கிளப்பின் பின்புறமாகப்போன பாதையில் போய் பிரதான தெருவை அடைந்தோம்.


இந்தா. இது என்ன?
புண்.. பாரன் எழுத்தை.


வயாக்ரா..இளநீல டயமண்ட் வடிவமாத்திரை.

சும்மாயிரு.எனக்கு வேண்டாம்.
நாயே.. போட்டுத்தான் பாரன். சுpறிலங்காகாரன் என்டா இவளுகளுக்கு இளப்பமடா.நீயும் போய்ப்பருசுகெடுத்துப்போடாதை.

இதப்போட்டாத்தான்டா பருசுகேடு.இவளுகளுட்டை பரிசுகெட்டாப்பரவாயில்லை.நாளைக்கு கலியாணம் கட்டினாப்பிறகு வாறவளிட்ட பரிசுகெடாம இருக்கோணும்.


சிங்கப்பூரில் ஒரு சீமேந்துக் குச்சொழுங்கையில் ஒரு தாத்தா தனது ஸ்டைலான சின்ன மோட்டர்சைக்கிளுடன் காலையில் இருந்து மாலைவரை காவல்இருப்பார்.மோட்டார் சைக்கிளின் பின்பக்க பெட்டியில் வயாக்கிரா மற்றும் இன்னபிற துணைச்சாதனங்கள் நிரம்பியிருக்கும்.ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க மலாய்த்தாத்தா இதை ஒரு சேவையாகச்செய்து வந்தார் போல.முகத்தில் எந்தச்சலனமும் இருக்காமல் வாழைப்பழம் விற்பதுபோல வயாக்ரா விற்பார்.கொச்சை ஆங்கிலத்தில் சில சமயம் கொக்கோக விமர்சனமும் செய்வதாக எனது நெட்டை நண்பன் சொன்னான்.


கொண்டா உன்ர பேரச்சொல்லிப்போடுறன்.சில ஆக்களுக்கு கண்தெரியாமயெல்லாம் போயிருக்காமே உண்மையா? சில ஆக்களுக்கு விறப்பு எடுபடாதாமே?

நாயே.. நீயும் போடாம.. என்னையும் பயப்பிடுத்திக்கொண்டு…கொண்டா அத.

சரி சரி விடு.

சியர்ஸ் சொல்லி தண்ணியில்லாமல் விழுங்கினோம்.ஏதொ பயம்வந்து அடிவயிற்றில் பாரமாய் உட்கார்ந்துகொண்டது.மணி அப்போது இரவு 2:05

மச்சான் எனக்கு யானைபலம் வந்ததுமாதிரி இருக்கு.உனக்கு எப்பிடி?

நண்பனின் மனநிலையை அறிவதற்காக சும்மா உசுப்பினேன்.

உன்னை இஞ்சனேக்க அடிச்சுத் தாட்டுப்போட்டுப் போடுவன்.உனக்குத்தான் இது புதிசு. எனக்கில்ல. நண்பன் சிரித்தான்.


வளுக்கிக்கொண்டு வந்தது சாம்பல் நிற பென்ஸ். தலையில் மஞ்சள் எழுத்துக்களுடன். எனது நெட்டை நண்பன் ஆசுவாசமாக பின்சீட்டில் தன்னை புதைத்துக்கொண்டு ‘கலாங்’ என்றான்.

சாதுவா வேர்க்குது மச்சான்…

அட நாயே.. பயப்பிடாத.ஒண்டும் செய்யாது.ஆகப்பயமாயிருந்தா காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டுவா.


நண்பன் காயத்திரிமந்திரம் சொல்லிக்காட்டத்தொடங்கினான்.கொத்துரொட்டியுடன்;விட்ட கால்ஸ்பேக் காயத்திரி மந்திரமாக கொட்டத்தொடங்கியது.


ஓம் பூர்;புவஸ்வக.. தத்சவிதுர் வரேண்யம்.. கடவுளே.. உலகத்தின் தந்தையே’ வாழ்க்கையின் பொருளே’ வலிகளில் இருந்து எம்மை விடுவிப்பவனே…. -

-சேரன்கிருஷ்

6 comments:

maruthamooran said...

////ஓம் பூர்;புவஸ்வக.. தத்சவிதுர் வரேண்யம்.. கடவுளே.. உலகத்தின் தந்தையே’ வாழ்க்கையின் பொருளே’ வலிகளில் இருந்து எம்மை விடுவிப்பவனே…. ////

சேரன்….

தங்களின் இந்த (சிறு)கதை வாசித்தேன். சிறப்பாகவுள்ளது. ஆனால், அனேக இடங்களில் வார்த்தைப் பிரயோகங்கள் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது. மற்றப்படி நல்லதொரு படைப்பு. அது சரி தங்களின் அனுபவத்தை முழுமையாகவா எழுதியிருக்கிறீர்கள்.

இறுதி வரிகள் முற்றுத் சரியானதே….

வந்தியத்தேவன் said...

சேரன் சில நாட்களுக்கு முன்னர் மதுவின் பஸ் பெண், பின்னர் புல்லட்டின் பாமன்கடைப் பெண், இரண்டு நாட்களுக்கு முன்னர் என்ரை சற்றடே நைட் பார்ட்டி. இன்றைக்கு உங்கடை காயத்திரி மந்திரம், ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

மருதமூரான் சொன்னதுபோல் சில இடங்களில் வார்த்தைகள் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது, சோபா ஷக்தி ஸ்டைலில் எழுதியிருக்கிறீர்கள் போலத் தெரிகிரது. நான் தலைப்பைப் பார்த்துவிட்டு நினைத்தேன் கேலாங்கில் காயத்திரி என்ற தமிழ்ப் பெண்ணை கண்டகதையோ என.

நல்லாயிருக்கு.

சுபானு said...

:)

cherankrish said...

வந்தி,மருதமூரான்,சுபானு,

இந்தக்கதை பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.சில இடங்களில் சில நபர்களின் குணாதிசயங்களை பட்டென்று காட்டுவதற்கு இப்படியான சொற்கள பயன்படுத்தப்படுவது அவசியம்தான்.
ஒரே சொல்லில் ஒரு நபரின் உருவத்தை வாசிப்பவரின் மனதில் வரைவதற்கு அதுவும் இப்படிச்சிறுகதைகளில் இது மிகவும் பயன்படுவது இயல்பானது.இதையெல்லாம் விட 'பெரிய பிழைகளை விழையாட்டாகசெய்துவிட்டுப்போகும் தடித்தனம் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கிறதே அதைப்பற்றித்தான் உங்களிடமிருந்து பெரிதும் பின்னூட்டங்களை எதிர்பார்த்தேன்.அதுவும் வந்தியின் வாசிப்பு பற்றிய கட்டுரையை படித்தபின் அந்த எதிர்பார்ப்புக்கூடியிருந்தது.மருதமூரான் இனிமேலும் ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்கான எனது பதிவில் வந்து சொல்லாதே.

உண்மையாக உன்னிடம் இந்தக்கதை ஏற்படுத்திய தாக்கத்தின் எழுத்துவடிவம் தான் எனக்கு வேண்டும்.
வந்தி..
ஷோபாஷக்தியின் எளிமை நிரம்பிய வரிகளுக்கு நானும் ரசிகன்தான்.சில சொற்களை கையாண்ட விதத்தில் அந்தத்தாக்கம் தெரியலாம்.சொல்லப்போனால் அதில் எனக்கு மகிழ்சிதான்.புதுமைப்பித்தனதும் ஜானகிராமனதும் கதைகளை படித்தபின் அந்தத்தாக்கம் இல்லாமல் எழுதமுடியாதோ அப்படித்தான் இதுவும்.சிறுகதைகள் இயல்பாக வந்துவிழவேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். சிலவற்றை வெளியாகச்சொன்னால் மட்டுமே அதன் எளிமை வெளிப்படுகிறது.

மருதமூரான்.. இந்தக்கதை எனது கற்பனை என்றால் அதை நீ பொய்யெண்டத்தான் போகிறாய்.

வந்தியத்தேவன் said...

//சில இடங்களில் சில நபர்களின் குணாதிசயங்களை பட்டென்று காட்டுவதற்கு இப்படியான சொற்கள பயன்படுத்தப்படுவது அவசியம்தான்.//

உண்மைதான் சேரன் அந்தப் பாத்திரத்தின் படைப்பை கொஞ்சம் காத்திரமாக காட்ட அந்த வார்த்தைப் பிரயோகங்கள் தேவைதான்.

என்னுடைய நண்பன் ஒருத்தன் இருந்தான்( இப்போ வெளிநாட்டில்) வார்த்தைக்கு வார்த்தை ஒரு கெட்டவார்த்தை சொல்லுவான், அது அவனது குணாதிசயம் அவனை ஒரு கதையில் விபரிக்கிறது என்றால் அப்படித்தான் எழுதவேண்டும்.

நிச்சயமாக கதை நல்லாகத்தான் இருக்கின்றது. இதே போல் சில நடைமுறை விடயங்களை வைத்து எழுதுங்கள், நான் நிச்சயம் நம்புகின்றேன் அந்த நபர் நீங்களாக இருக்கமுடியாது என, மருதமூரானைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்.

Unknown said...

ஓ! இது கதை தானா?
நான் வேறென்னவோ நினச்சன்... ;)

Loops solutions - Social media marketing in Sri lanka