பின்னிரவின் தூய்மை கலைக்கும்
பழுப்பு இலைகளின்- உதிர்வு
சில நிமிடம் வாங்கி
மீண்டும் உதிரும்,
கறுப்பில் தொலைந்துபோகும்-அவற்றின்
அவசர..இலைக்காம்புகளின்
பிடிப்பு விலகும் சத்தம்
ஒலிக்கீறலாய் இதயம் துளைக்கிறது.
அசைவுகள் ஓய்ந்த உலகத்தின்
பெருமூச்சில் நடுங்கியபடி
பூமி நொக்கி ஒரு சின்னப்பயணம்
முகில் விலகிய
ஒரு சில நிமிடங்களில்
தங்கமாய் தகதகக்கும்
பழுப்பு இலைகள்
நிலவைப்பழிக்கும்.
பூட்டிய ஜன்னல்களின் பின்னே
உடல்தளர்ந்து நரம்புகள்விளிம்பில்
வேர்வைதுளிகளின்,
கோலங்களுடன் நான்மட்டும் தனியாக
Loops solutions - Social media marketing in Sri lanka
5 comments:
Cherankrish அருமையா எழுதியிருக்கீங்க. ச்சும்மா பிச்சி ஒதறீட்டிங்க ஐயா.
கற்பனை சக்தியை அளவுக்கு அதிகமாகவே வெகு தூரத்திற்கு கொண்டுபோய் இருக்கீங்க.
அது மட்டுமில்லாமல் மன கற்பனா பயணத்தை உங்களுடைய சக்திக்குள்ளே வைத்து சீராக வந்திருக்கீங்க.
ஒரு இலையில் கடைசி கால வாழ்க்கையை இவ்வளவு அழகா சித்தரித்திருப்பது அருமை.
//அசைவுகள் ஓய்ந்த உலகத்தின்
பெருமூச்சில் நடுங்கியபடி
பூமி நொக்கி ஒரு சின்னப்பயணம்//
ஆஹா, சாதாரணமாக ஒரு பழுத்த இலை தரையில விழுறத தாய்தமிழுல என்ன அருமை வர்ணித்து இருக்குறீங்க!
//முகில் விலகிய
ஒரு சில நிமிடங்களில்
தங்கமாய் தகதகக்கும்
பழுப்பு இலைகள்
நிலவைப்பழிக்கும்.// அருமை. அப்படியே இந்த காட்சிகளை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது.
//நரம்புகள்விளிம்பில்
வேர்வைதுளிகளின்,
கோலங்களுடன்// நரம்புகள் மட்டும் வியர்வைத்துளிகளையே கோலங்கள் ஆக்கிவிட்டீர்களா? சபாஷ்!
தனிமை! இது பயங்கர நோய். கவிஞர்களுக்கு மட்டும் இது ஒரு நல்ல நோயோ?
உங்களுக்கு இந்த நோய் தீராதிருக்க சபிக்கிறேன்! அப்போதுதான் இன்னும் இது போல் காவியம் படைப்பீர்.
உங்கள் படைப்பில் ஒரே ஒரு குறைதான். ஒரு சின்ன படம் குறைகிறது. அதனால் என்ன? கவிதை நார் உடையவர்கள் அனைத்தையுன் கற்பனையிலேயே யூகித்துக் கொள்வார்கள் அல்லவா?
நன்றி Cherankrish.
நல்ல கவிதை எழுத்துப்பிழைகள் உண்டு
மாசிலா கவிதை எழுதுவதன் பயனை உணர்த்துபவர்கள் நீங்கள்.எங்கள் வீரகேசரி பத்திரிகைக்கு கதையொன்று அனுப்பினேன்.இன்று ஞாயிறு பத்திரிகையில் வருமேன்று எதிர்பார்த்தேன்.வரவில்லை.வருத்தத்துடன் இருந்தேன்.
நாமே ஒருபத்திரிகை ஆரம்பிக்க கூடாதா என்று எகனைமொகனையாக யோசித்துக்கொண்டிருந்தேன்.
அவ்வளவு வருத்தத்தையும் துடைத்து எடுத்துவிட்டீர்கள்.மிக்க நன்றி
த.அகிலன்
//நல்ல கவிதை எழுத்துப்பிழைகள் உண்டு
உண்மைதான்.என்னுடைய தட்டச்சின் விறுத்தம் அப்படி.திருத்திக்கொள்வதாக சபதம் செய்கிறேன் :) :) நன்றி
//எங்கள் வீரகேசரி பத்திரிகைக்கு கதையொன்று அனுப்பினேன்.இன்று ஞாயிறு பத்திரிகையில் வருமேன்று எதிர்பார்த்தேன்.வரவில்லை.வருத்தத்துடன் இருந்தேன்.// இதற்காக வீணாக உங்களை வறுத்திக்கொள்ளாதீர்கள் Cherankrish.
//அவ்வளவு வருத்தத்தையும் துடைத்து எடுத்துவிட்டீர்கள்.மிக்க நன்றி// ஏதோ என் மனதில் பட்டதை மிகைப்படுத்தாமல் உடனே கொட்டிவிட்டேன். அவ்வளவே. அது உங்களுக்கு ஊக்கம் கொடுக்குமாயின் நல்லது அனைவருக்கும்.
Post a Comment